கறுப்பு யூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox civilian attack | title = கறுப்பு யூலை<br/>Black July | partof = இலங்கை இனக்கலவரங்கள், ஈழப் போர் | image = Blackjuly.jpg | image_size = | alt = | caption = பொரளை பேருந்து நிலையத்திற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags |
||
வரிசை 41:
[[1960கள்]] முழுவதும், எதிர்ப்புகளும், அரச அடக்குமுறைகளும், மேலும் இனங்களுக்கிடையே பகைமையை உருவாக்கியது. 1972-இல், பல்கலைக்கழகங்களுக்குள் தமிழர்களின் நுழைவைக் கட்டுப்படுத்திய [[இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்|தரப்படுத்தல் கொள்கை]], தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் உயரடுக்குகளுக்கு இடையில் ஏற்கனவே இருந்த பலவீனமான அரசியல் உறவை சீர்குலைத்தது. அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் இட ஒதுக்கீடு சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான சர்ச்சைக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. 1977-இல் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழர்களுக்கு [[இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977|எதிரான படுகொலைகள்]] தொடர்ச்சியாக நடந்தன, இது இனப்பாகுபாட்டை மேலும் வளர்த்தது.<ref>{{cite journal|last=Rajasingham-Senanayake|first=Darini|title=Dysfunctional Democracy and the Dirty War in Sri Lanka|journal=AsiaPacific Issues|date=May 2001|issue=52|url=http://www.eastwestcenter.org/sites/default/files/private/api052.pdf|access-date=1 August 2006|publisher=East–West Center}}</ref> 1981-இல் யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற பொது நூலகம் சிங்கள வன்முறைக் [[யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு|கும்பலால் எரிக்கப்பட்டது]]. 1983 வரை, அரசாங்கத்திற்கும் தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இடையில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்றவற்றுக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினர் காரணமாக இருந்தனர்.
===சனி, 23 சூலை===
1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[யாழ்ப்பாண நகரம்|யாழ் நகருக்கு]] அருகில் உள்ள [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]]யில் நான்கு நான்கு பிராவோ காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து [[திருநெல்வேலி தாக்குதல், 1983|போ போ பிராவோ]] தாக்குதலை நடத்தியது.{{sfn|Dissanayake|2004|pp=63–64}} வாகனத் தொடரணியை வழிநடத்திச் சென்ற ஜீப்பின் அடியில் சாலையோர வெடிகுண்டு வெடிக்கப்பட்டது, இதன்போது குறைந்தது இரண்டு இராணுவத்தினர் காயமடைந்தனர். அதன் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த இராணுவத்தினர் தங்கள் சக வீரர்களுக்கு உதவக் கீழே இறங்கினர். அவர்கள் மீது பதுங்கியிருந்த போராளிகள் தானியங்கி ஆயுதங்கள், கைக்குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். போராளிகள் சிலரும் கொல்லப்பட்டனர்.{{sfn|O'Ballance|1989|p=21}} தாக்குதல் நடத்தப்பட்டதை புலிகளின் பிராந்தியத் தளபதி [[கிட்டு]] ஒப்புக்கொண்டார்.{{sfn|O'Ballance|1989|p=21}} விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சீலன் என்ற சார்ல்சு அந்தோனியை இலங்கைப் படைகள் கொன்றதற்கும்,<ref>{{Cite book|title = Encyclopedia of the World's Minorities|url = https://books.google.com/books?id=iSUKAgAAQBAJ&pg=PT3267|publisher = Routledge|date = 7 November 2013|isbn = 9781135193959|language = en|first = Carl|last = Skutsch|quote = "Tensions reached a breaking point on July 23, 1983 when the LTTE ambushed and killed 13 Sinhalese soldiers in retaliation for the murder of Charles Antony, the LTTE's second-in-command."}}</ref> அரசுப் படைகளால் தமிழ்ப் பள்ளிச் சிறுமிகளைக் கடத்தி<ref>{{cite book |last1=Tambiah |first1=Stanley |title=Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy |date=1986 |publisher=The University of Chicago Press |location=Chicago and London |page=16 |isbn=9780226789521 |url=https://books.google.com/books?id=KTjbyc-A-SoC&q=An+explosive+and+as+yet+unproven+allegation+was+the+rape+in+mid-July+of+Tamil+female+students%2C+two+of+whom+subsequently+committed+suicide.&pg=PA16|quote="An explosive and as yet unproven allegation was the rape in mid-July of Tamil female students, two of whom subsequently committed suicide."}}</ref> வன்புணர்வு செய்ததற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் விவரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title = The massacres in Sri Lanka during the Black July riots of 1983|url = http://www.massviolence.org/The-Black-July-riots-1983|website = Online Encyclopedia of Mass Violence|date = 13 May 2008|access-date = 6 February 2016|language = en|first = Eleanor|last = Pavey|quote = "1983 கலவரத்தின் தோற்றம் தமிழ் கிளர்ச்சியாளர்களால் 13 சிங்கள இராணுவத்தினரைக் கொன்றது என்று பரவலாகக் கூறப்பட்டாலும், தமிழ்க் கிளர்ச்சியாளர்கள் மூன்று தமிழ்ப் பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததே தமிழ் கிளர்ச்சியாளர்களை அரசாங்கப் படைகளைத் தாக்க வழிவகுத்தது என்று பல தமிழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் 1983 சூலை 18 இல் இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்."}}</ref>
===ஞாயிறு, 24 சூலை===
புலிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, [[பலாலி]] இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.<ref name="autogenerated2003"/>
வரிசை 56:
வெளியேறிய கூட்டத்தின் ஒரு பகுதியினர் டி. எஸ். சேனநாயக்கா சாலையில் இருந்து பொரளைக்கு அணிவகுத்துச் சென்றனர், அங்கு தமிழருக்குச் சொந்தமான நாகலிங்கம் ஸ்டோர்சு என்ற கடையை எரிந்த்து அழித்தார்கள்.{{sfn|Dissanayake|2004|p=68}} இவ்வேளையில் 10,000 இற்கும் அதிகமானோர் இக்கும்பலில் சேர்ந்தனர். அவர்கள் பொரளையில் உள்ள கடைகளைக் கொள்ளையடித்தனர், பொரளை சந்திக்கு அருகில் உள்ள பொரளை அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகம் உட்பட தமிழ்த் தொடர்பைக் கொண்டிருந்த அனைத்துக் கட்டடங்களையும் தாக்கிக் கொள்ளையடித்துத் தீ வைத்தனர்.{{sfn|Dissanayake|2004|p=68}} அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள தமிழர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டன. கூட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்; வானத்தை நோக்கிச் சுட்டனர்.{{sfn|Dissanayake|2004|p=69}} பின்னர் [[தெமட்டகொடை]], [[மருதானை]], நாரகேன்பிட்டி, பாலத்துறை, திம்பிரிகசாய ஆகிய திசைகளில் கூட்டம் கலைந்து, அங்கு தமிழர்களின் சொத்துக்களை தாக்கி சூறையாடி தீ வைத்தனர்.{{sfn|Dissanayake|2004|p=69}}
===திங்கள், 25 சூலை===
1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை [[சனாதிபதி மாளிகை, கொழும்பு|சனாதிபதி மாணிலை]]யில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.{{sfn|Dissanayake|2004|p=69}} அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது.{{sfn|Dissanayake|2004|p=69}} தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், [[கோட்டை (கொழும்பு)|கொழும்பு கோட்டை]]ப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின.{{sfn|Dissanayake|2004|p=69}} அன்று மாலை 6 மணி முதல் கொழும்பில் [[ஊரடங்கு]] உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.<ref>{{cite news|title=Travellers warned on Sri Lankan strife|url=https://news.google.com/newspapers?nid=9fRKRCJz75UC&dat=19830726&printsec=frontpage&hl=en|newspaper=The Free Lance–Star/[[அசோசியேட்டட் பிரெசு]]|date=26 July 1983|page=11}}</ref><ref name=TT260783>{{cite news|title=Mobs burn shops in Sri Lanka|url=http://find.galegroup.com/ttda/infomark.do?&source=gale&prodId=TTDA&userGroupName=kccl&tabID=T003&docPage=article&searchType=BasicSearchForm&docId=CS17403130&type=multipage&contentSet=LTO&version=1.0|newspaper=[[தி டைம்ஸ்]]/[[ராய்ட்டர்ஸ்]]|date=26 July 1983|page=1}}</ref> சிங்களக் கும்பல் ஒல்கொட் மாவத்தை வழியே சென்று கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இருந்த 'ஆனந்த பவன்', 'இராஜேசுவரி ஸ்டோர்', 'அஜந்தா ஓட்டல்' ஆகியவற்றிற்கும் தீ வைத்தனர்.{{sfn|Dissanayake|2004|p=69}}
வரிசை 70:
[[காலி]], [[கேகாலை]], [[திருக்கோணமலை]], [[வவுனியா]] ஆகிய நகரங்களுக்கும் வன்முறைகள் பரவின.{{sfn|Dissanayake|2004|p=74}}
====வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்====
{{main|வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்}}
சூலை 25 இல் நடந்த மிக மோசமான நிகழ்வு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றது.{{sfn|O'Ballance|1989|p=23}}<ref name=TH280783>{{cite news|title=Sri Lanka ethnic riots kill at least 88 people|url=https://news.google.com/newspapers?nid=aEyKTaVlRPYC&dat=19830728&printsec=frontpage&hl=en|newspaper=Telegraph Herald/United Press International|date=28 July 1983|page=12}}</ref> பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 தமிழ்க் கைதிகள், சிங்களக் கைதிகளால் கத்திகள் மற்றும் தடிகளால் தக்கப்பட்டு [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|படுகொலை செய்யப்பட்டனர்]]. சிறை அதிகாரிகள் அறைகளின் சாவிகள் சிங்களக் கைதிகளுக்கு கிடைக்க அனுமதித்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறினர்; ஆனால் அடுத்தடுத்த விசாரணையில், சிறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சாவிகள் திருடப்பட்டதாகக் கூறினர்.{{sfn|O'Ballance|1989|p=23}}
===செவ்வாய், 26 சூலை===
சூலை 26 அன்று [[வெள்ளவத்தை]], [[தெகிவளை]]யில் கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்தன. தெகிவளை இரத்னாகர வீதியில் இருந்த 53 வீடுகளில், தமிழர்கள் வசித்து வந்த 24 வீடுகள் எரிக்கப்பட்டன.{{sfn|Dissanayake|2004|p=72}} தமிழர் வாடகைக்குக் குடியிருந்த சிங்களவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை எரிக்காமல் உடமைகளை மட்டும் வெளியே அகற்றி அவற்றை எரித்தனர்.{{sfn|Dissanayake|2004|p=72}} நகரின் பல பகுதிகளில், இராணுவத்தினரும் காவல்துறையினரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும், மக்கள் கொல்லப்பட்டதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.{{sfn|Dissanayake|2004|p=72}}
வரிசை 83:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சூலை 26 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொள்ளைகள் அதிகமாக இடம்பெற்றன.<ref name=TH280783/> அன்று மாலைக்குள், காவல்துறை மற்றும் இராணுவப் பிரிவுகள் அதிக அளவில் வீதிகளில் சுற்றுப்பணிகளில் ஈடுபட்டு கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதால், கும்பல் வன்முறை குறையத் தொடங்கியது.{{sfn|O'Ballance|1989|p=24}} [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலித் தாக்குதலில்]] கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் இரவு ஊரடங்கு உத்தரவின் போது அமைதியாக அடக்கம் செய்யப்பட்டன.{{sfn|O'Ballance|1989|p=24}}
===புதன், 27 சூலை===
[[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]], [[நாவலப்பிட்டி]], [[அட்டன், இலங்கை|அட்டன்]] வரை வன்முறை பரவியது.{{sfn|Dissanayake|2004|p=75}} அதற்கு அண்டைய [[ஊவா மாகாணம்|ஊவா மாகாணத்தின்]] மிகப்பெரிய நகரமான [[பதுளை]] இதுவரை அமைதியாக இருந்தது; ஆனால் சூலை 27 அன்று காலை 10:30 மணியளவில் மணிக்கூட்டு கோபுரத்தின் முன் தமிழர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டது.{{sfn|Dissanayake|2004|p=75}} நண்பகலில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நகரின் வணிகப் பகுதி வழியாக சென்று கடைகளுக்கு தீ வைத்தது.{{sfn|Dissanayake|2004|p=75}} கலவரம் பின்னர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியது, மேலும் பல தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.{{sfn|Dissanayake|2004|p=75}} பின்னர் அந்தக் கும்பல் தாங்கள் திருடிய வாகனங்களிலும் பேருந்துகளிலும் நகரை விட்டு [[பண்டாரவளை]], ஆலி-எல, வெலிமடை ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு தொடர்ந்து சொத்துக்களுக்கு தீ வைத்து எரித்தது.{{sfn|Dissanayake|2004|p=76}} கலவரம் இரவு நேரத்தில் லுணுகலை வரை பரவியது.{{sfn|Dissanayake|2004|p=76}}
வரிசை 90:
சூலை 25 இல் வெலிக்கடை சிறைச்சாலைத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் சேப்பல் கட்டடத்தில் இருந்து இளைஞர் குற்றவாளிகள் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். சூலை 27 அன்று மாலை, சிங்களக் கைதிகள் காவலர்களைத் தாக்கி, கோடரி மற்றும் விறகுகளால் ஆயுதம் ஏந்தி, அந்தத் தமிழ்க் கைதிகளைத் தாக்கினர். பதினைந்து தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர்.{{sfn|Dissanayake|2004|p=76}}<ref name=TH280783/>{{sfn|O'Ballance|1989|p=25}} யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் ஒரே நாளில் நடந்த கலவரத்தில் இரண்டு தமிழ் கைதிகளும் மூன்றாவது கைதியும் கொல்லப்பட்டனர்.<ref name=TH280783/><ref name=TT290783>{{cite news|last=Hamlyn|first=Michael|title=Colombo acts to appease mobs|url=http://find.galegroup.com/ttda/infomark.do?&source=gale&prodId=TTDA&userGroupName=kccl&tabID=T003&docPage=article&searchType=BasicSearchForm&docId=CS18582781&type=multipage&contentSet=LTO&version=1.0|newspaper=[[தி டைம்ஸ்]]|date=29 July 1983|page=1}}</ref>
===வியாழன், 28 சூலை===
சூலை 28 அன்றும் [[பதுளை]] தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது, மேலும் கலவரம் லுணுகலையில் இருந்து [[பசறை]] வரை பரவியது.{{sfn|Dissanayake|2004|p=77}} [[நுவரெலியா]] மற்றும் [[சிலாபம்|சிலாபத்திலும்]] கலவரம் ஏற்பட்டது.{{sfn|Dissanayake|2004|p=77}} ஆனால் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலையில் வன்முறைகள் குறைந்தன.{{sfn|Dissanayake|2004|p=77}}
வரிசை 97:
[[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] சூலை 28 அன்று ஜெயவர்தனவை அழைத்து கலவரம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை அவருக்குத் தெரிவித்தார்.{{sfn|Dissanayake|2004|p=79}} [[வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)|வெளிவிவகார அமைச்சர்]] [[பி. வி. நரசிம்ம ராவ்|பி. வி. நரசிம்மராவை]]த் தனது சிறப்புத் தூதராக ஜெயவர்தனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஜெயவர்தனே அதனை ஏற்றுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ராவ் இலங்கைக்கு வந்தார்.{{sfn|Dissanayake|2004|p=79}}
===வெள்ளி, 29 சூலை===
சூலை 29 வெள்ளிக்கிழமை [[கொழும்பு]] அமைதியாக இருந்தது. நகரத்தில் உள்ள பல அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை தமிழ் மக்கள் பார்வையிட்டனர். காலை 10:30 மணியளவில் காஸ் வர்க்சு வீதியில் இரண்டு சிங்கள இளைஞர்கள் சுடப்பட்டனர்.{{sfn|Dissanayake|2004|p=80}} அடம் அலி கட்டடத்தில் இந்த இளைஞர்கள் தமிழ் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.{{sfn|Dissanayake|2004|p=80}} கட்டடம் இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறையினரால் சூழப்பட்டது, அவர்கள் கட்டிடத்தின் மீது [[துணை இயந்திரத் துப்பாக்கி]]களினால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.{{sfn|Dissanayake|2004|p=80}} ஒரு உலங்குவானூர்தியும் கட்டிடத்தின் மீது சுட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டிடத்திற்குள் நுழைந்த போது உள்ளே தமிழ் புலிகள், ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை.{{sfn|Dissanayake|2004|pp=80–81}} எனினும், இராணுவம் தமிழ் புலிகளுடன் போரில் ஈடுபட்டதாக கொழும்பில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.{{sfn|Dissanayake|2004|pp=80–81}} புலிகளை எதிர்த்துப் போரிடத் தயாராக கோடரிகள், செங்கல்கள், இரும்புக் கம்பிகள், கத்திகள் மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களுடன் தெருக்களில் கும்பல்களாக சிங்கள் மக்கள் கூடத் தொடங்கினர்.{{sfn|Dissanayake|2004|p=81}}{{sfn|O'Ballance|1989|p=24}} வாகனங்களை நிறுத்தித் தமிழர்களைத் தேடினர். அவர்கள் கண்டறிந்த தமிழர்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டனர்.{{sfn|Dissanayake|2004|p=81}} கிருள வீதியில் ஒரு தமிழர் உயிருடன் எரிக்கப்பட்டார்.{{sfn|Dissanayake|2004|p=81}} அத்திடிய வீதியில் பதினொரு தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.{{sfn|Dissanayake|2004|p=81}} இரண்டு தமிழர்களினதும், மூன்று முசுலிம்களினதும் சடலங்கள் இருந்த ஒரு வாகனத்தை அதே வீதியில் காவல்துறையினர் {{sfn|Dissanayake|2004|p=81}} 15 கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.{{sfn|O'Ballance|1989|p=25}} ஜூலை 29 பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆகத்து 1 திங்கள் காலை 5 மணி நீக்கப்பட்டது.{{sfn|Dissanayake|2004|p=82}}
வரிசை 104:
இந்திய வெளிவிவகார அமைச்சர் [[நரசிம்ம ராவ்]] உலங்குவானூர்தியில் கண்டிக்கு செல்வதற்கு முன்னர் அரசுத்தலைவர் ஜனாதிபதி ஜெயவர்தன, வெளிவிவகார அமைச்சர் [[அப்துல் காதர் சாகுல் அமீட்|ஏ. சீ. எஸ். அமீது]] ஆகியோருடன் கலந்துரையாடினார்.{{sfn|Dissanayake|2004|p=79}}{{sfn|Dissanayake|2004|p=82}}
===சனி, 30 சூலை===
சூலை 30 இல் நுவரெலியா, கந்தப்பளை, காவ எலிய, [[மாத்தளை]] ஆகிய இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன.{{sfn|Dissanayake|2004|p=82}} நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. வன்முறைகளைத் தூண்டியமைக்காக அதே நாள் இரவில் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]], [[மக்கள் விடுதலை முன்னணி]], [[நவ சமசமாஜக் கட்சி]] ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளுக்கு அரசு தடை வித்தது.{{sfn|Dissanayake|2004|p=82}} ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.<ref>[https://web.archive.org/web/20130327225538/http://archives.dailymirror.lk/2006/12/16/opinion/1.asp "Ramifications of banning political parties and organisations"]</ref>
வரிசை 164:
==உசாத்துணைகள்==
{{refbegin}}
* {{cite book|editor1-last=Aspinall|editor1-first=Edward|editor2-last=Jeffrey|editor2-first=Robin|editor3-last=Regan|editor3-first=Anthony
* {{cite book|last=Dissanayake|first=T. D. S. A.|title=War or Peace in Sri Lanka|publisher=Popular Prakshan|year=2004|isbn=81-7991-199-3|url=https://books.google.com/books?id=wfkLyH95m9MC }}
* {{cite book|last1=Hoole|first1=Rajan|last2=Somasundaram|first2=Daya|last3=Sritharan|first3=Kopalasingham|last4=Thiranagama|first4=Rajini|author-link1=
* {{cite book|last=O'Ballance|first=Edgar|title=The Cyanide War: Tamil Insurrection in Sri Lanka, 1973–88|publisher=Brassey's (UK)|year=1989|location=London|isbn=978-0-08-036695-1|url=https://books.google.com/books?id=H15uAAAAMAAJ }}
* {{cite book|last=Wilson|first=A. Jeyaratnam|author-link=
* {{cite book|last=Wilson|first=A. Jeyaratnam|author-link=அ. ஜெ. வில்சன்|title=Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the 19th and 20th Centuries|publisher=Penguin Books India|year=2001|isbn=0-14-302789-1|url=https://books.google.com/books?id=-SJkPwAACAAJ }}
{{refend}}
=== தமிழ் இணைப்புகள் ===
*[http://www.thinakkural.com/downloads/blackjuly/page1.pdf கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு (சி. சிவசேகரம்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20081221044959/http://www.thinakkural.com/downloads/blackjuly/page1.pdf |date=2008-12-21 }}
*[http://tamilnation.co/forum/sabesan/040712sabesan.htm கறுப்பு யூலைகள்- சண்முகம் சபேசன்]
*[https://maatram.org/?p=6993 #BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா]
=== ஆங்கில இணைப்புகள் ===
* [http://www.blackjuly83.com/ கறுப்பு யூலை]
* [http://www.blackjuly.info/ கறுப்பு ஜூலை குறித்த சிறப்பு வலைத்தளம்]
வரிசை 198:
[[பகுப்பு:1983 இல் இலங்கை]]
[[பகுப்பு:கறுப்பு யூலை]]
[[பகுப்பு:தமிழர் இனப்படுகொலை]]
[[sv:Inbördeskriget i Sri Lanka#1983-1987: Upplopp, upptrappning och utbrott]]
| |||