பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"right|200px|thumb|[[பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.]] '''பண்பாடு''' ('''கலாச்சாரம்''' அல்லது '''கலாசாரம்''') என்பது பொதுவாக மன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 21:
 
== பண்பாட்டுக் கருத்துருக்கள் ==
=== பண்பாடும் மானிடவியலும் ===
[[படிமம்:Edward Burnett Tylor.jpg|thumb|150px|left|19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர் [[எட்வார்ட் டெயிலர்]].]]
பண்பாடானது [[இசை]], [[இலக்கியம்]], வாழ்க்கைமுறை, உணவு, [[ஓவியம்]], [[சிற்பம்]], [[நாடகம்]], [[திரைப்படம்]] போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, [[நுகர் பொருள்|நுகர் பொருட்கள்]] என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப்பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது [[கலை]], [[அறிவியல்]], [[நெறிமுறை]]கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
 
=== பண்பாடும் உலகப்பார்வையும் ===
[[புனைவியம்|புனைவியக்]] காலத்தில் [[செருமனி]]யைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் [[தேசியவாதம்|தேசியவாத]] இயக்கங்களோடு தொடர்புடையவர்கள், பண்பாடு என்பது [[உலகப்பார்வை]] என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், [[ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசு]]க்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்களைச் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் 'நாகரிகமடைந்தோர்', 'நாகரிகமற்றோர்' அல்லது 'பழங்குடியினர்' முதலிய வேறுபாடுகளுக்கு இடமளித்தது.
 
வரிசை 48:
மேனாட்டுப் பண்பாடு [[ஐரோப்பா]]விலிருந்து மிகவும் வலுவாக [[ஆஸ்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, [[மனிதன்]], [[இறைவன்]], [[இயற்கை]] அல்லது [[அண்டம்]] ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில் நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.
 
=== ஆபிரகாமிய சமயங்கள் ===
'[[யூதாயிசம்|யூதாயிசம்']] அறியப்பட்ட [[ஓரிறைக் கொள்கை]] உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், [[இஸ்லாம்]], [[பஹாய்]] போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச்சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருக்கின்றன.
 
"https://tamilar.wiki/w/பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது