காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{காரகாடி}} thumb|ஐதரோகுளோரிக் அமிலம் நாகத்துடன் தாக்கமடைந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகின்றது. '''ஓர் அமிலம் அல்லது காடி அல்லது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 31:
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான வரையரைகளிலும் ஐதரோனியம் அயனிதான் அமிலம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஆல்ககால்களும் அமீன்களும் கூட புரோன்சிடெட்டு லோரி வரையறைகளின்படி அமிலங்களாக இருக்க முடியும் என்பது ஆர்வமூட்டும் செய்தியாகும். ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் மீதுள்ள தனி இணை எலக்ட்ரான்களால் இவை இலூயிசு காரங்களாகவும் செயல்பட இயலும்.
===அறீனியசு அமிலங்கள் ===
[[File:Arrhenius2.jpg|thumb|150px|சுவாந்தே அறீனியசு]]
வரிசை 44:
அமிலக்கரைசல்களில் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி லிட்டருக்கு 10−7 மோல்கள் அதிகமாகும். ஏனெனில் காரக்காடித்தன்மை சுட்டெண் (pH) ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தியின் கழித்தல் மடக்கை அடிப்படையிலானது ஆகும். எனவேதான் அமிலக் கரைசல்களின் காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பு 7 க்கு குறைவாகக் காணப்படுகிறது.
=== புரோன்சிட்டெடு – லோரி அமிலங்கள் ===
அறீனியசு கோட்பாடு பல வேதி வினைகளைப் பற்றி விவரிக்கப் பயன்பட்டது என்றாலும் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டிருந்தன. அமிலக்கார வினைகள் என்பவை புரோட்டான் பரிமாற்றத்தால் நிகழக்கூடியவை என்பதை 1923 ஆம் ஆண்டில் இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு , மார்ட்டின் லோரி என்னும் வேதியியலாளர்கள் தனித்தனியாக அடையாளம் கண்டறிருந்திருந்தனர்.
வரிசை 64:
அசிட்டிக் அமிலத்தின் வினைகளைப் போலவே, இரு வரையறைகளும் முதலாவது வினைக்கே பொருந்துகின்றன. இங்கு நீர் ஒரு கரைப்பானாகவும் ஐதரோனியம் அயனி HCl கரைபொருளினாலும் உருவாகிறது. அடுத்த இரண்டு வினைகளிலும் அயனிகள் உருவாக்கம் நிகழ்வதில்லை. ஆனால் அவை புரோட்டான்-பரிமாற்ற வினைகளாக உள்ளன. இரண்டாவது வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் அமோனியா (பென்சீனில் கரைந்தது) இரண்டும் வினைபுரிந்து பென்சீன் கரைப்பானில் உள்ள திண்ம அமோனியம் குளோரைடு உருவாகிறது. மூன்றாவது வினையில் ஐதரசன் குளோரைடு வாயுவும் அமோனியாவும் இணைந்து திடப்பொருளாக உருவாகின்றன.
=== இலூயிசு அமிலம் ===
புரோட்டான் பரிமாற்றம் இல்லாத அமிலக்கார பண்புகள் கொண்ட வினைகளை உள்ளடக்கிய சற்றே தொடர்பான மூன்றாவது கோட்பாட்டை கில்பர்ட் என் இலூயிசு 1923-ம் ஆண்டு முன்மொழிந்தார். ஓர் இனத்திலிருந்து ஒரு சோடி இனை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளும் மற்றொரு இனம் இலூயிசு அமிலம் எனப்படுகிறது. சுருங்கச் சொல்வதென்றால் இதுவொரு எலக்ட்ரான் இணை ஏற்பி எனலாம் <ref name="Ebbing" /> புரோன்சிட்டெடு அமிலக்கார வினைகள் எல்லாம் புரோட்டான் பரிமாற்ற வினைகள் என்பது போல இலூயிசு அமிலக்கார வினைகள் எல்லாம் எலக்ட்ரான் இணை பரிமாற்ற வினைகளாகும். பல இலூயிசு அமிலங்கள் புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. மாறாக, அமிலக்கார வேதியியல் அடிப்படையில் பின்வரும் வினைகள் எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.
வரிசை 158:
== வேதியியல் பண்புகள் ==
=== ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் ===
பிரிகைச் செயல்முறையின் போது ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒரு புரோட்டானை மட்டும் கொடையளிக்க வல்ல அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் எனப்படும். HA என்ற குறியீடு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 165:
கனிம அமிலங்களில் ஐதரோகுளோரிக் அமிலமும் (HCl), நைட்ரிக் அமிலமும் (HNO3) ஒற்றை புரோட்டிக் அமிலங்களுக்குப் பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். கரிம அமிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு கார்பாக்சிலிக் குழு இடம்பெற்ற அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பார்மிக் அமிலம் (HCOOH), அசிட்டிக் அமிலம் (CH3COOH), பென்சாயிக் அமிலம் (C6H5COOH) உள்ளிட்ட அமிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
=== பாலிபுரோட்டிக் அமிலங்கள் ===
ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்களை கொடையளிக்க வல்ல அமிலங்களை பாலிபுரோட்டிக் அமிலங்கள் என்கிறார்கள். மேலும் இவற்றை பாலிக்கார அமிலங்கள் என்றும் அழைக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க பாலிபுரோட்டிக் அமிலங்கள் கூடுதலாக டைபுரோட்டிக் அமிலங்கள்ம் டிரைபுரோட்டிக் அமிலங்கள் போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன.
வரிசை 203:
இங்கு K0 = 1 மற்றும் இதர K-அளவுகள் அமிலத்தினுடைய பிரிகை மாறிலிகளாகும்.
=== நடுநிலையாக்கல் ===
ஓர் அமிலமும் ஒரு காரமும் வினைபுரிந்து ஓர் உப்பும் நிரும் உருவாகும் வினை நடுநிலையாக்கல் எனப்படும். உதாரணமாகம் ஐதரோகுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் வினைபுரிந்து சோடியம் குளோரைடும் தண்ணீரும் உருவாகின்றன. நடுநிலையாக்கல் வினைக்கு இது ஓர் எளிய எடுத்துக்காட்டாகும்.
வரிசை 212:
அமிலத்தைவிட வலிமை குறைந்த காரத்தை நடுநிலையாக்கும் போது வலிமை குறைந்த அமில உப்பு உருவாகிறது. உதாரணமாக, வலிய ஐதரோகுளோரிக் அமிலமும், வலிமை குறைந்த அமோனியாவும் நடுநிலையாக்கப்படும் போது வலிமை குறைந்த அமோனியம் குளொரைடு என்ற அமில உப்பு உருவாகிறது. இதேபோல ஒரு வலிமை குறைந்த அமிலம், வலிய காரத்துடன் நடுநிலையாக்கப்படும்போது வலிமை குறைந்த கார உப்பு உருவாகிறது. உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் நடுநிலையாக்கப்பட்டால் சோடியம் புளோரைடு உருவாகிறது.
=== வலிமை குறைந்த அமிலம் – வலிமை குறைந்த காரம் சமநிலை ===
புரோட்டானேற்ற அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை நீக்கும்போது அவ்வமைப்பின் pH மதிப்பானது அமிலத்தின் pKa மதிப்பைக் காட்டிலும் கண்டிப்பாக உயரும். இந்தக் காரக் கரைசலில் ஏற்படும் H+ இன் அடர்த்திக் குறைவு சமநிலையை இணை காரத்தை நோக்கி (புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட அமில வடிவம்) செலுத்துகிறது. தாழ் மதிப்பு கொண்ட pH கரைசல்களில் உயர் அடர்த்தி H+ அமிலத்தை புரோட்டானேற்ற வடிவத்திலேயே வைத்திருக்கிறது.
வரிசை 234:
அமினோ அமிலங்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைக்கத் தேவையான புரதங்களின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்களும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சந்ததியினருக்கு மரபு பண்புகளை கடத்தும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ களை உருவாக்க நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுகின்றன. உடலில் கார சமநிலையை பராமரிக்க கார்பானிக் அமிலம் அவசியமாகும்.
=== அமில வினையூக்கிகள் ===
அமிலங்கள் தொழில்துறை மற்றும் கரிம வேதியியல் துறைகளில் அதிக அளவில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கந்தக அமிலம் பெட்ரோல் உற்பத்தியின் போது ஆல்க்கைலேற்ற செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கந்தக, பாசுபாரிக் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்கள் நீர்நீக்க மற்றும் ஒடுக்க எதிர்வினைகளில் முக்கிய பங்காற்றுகிம்றன. உயிர்வேதியியல் துறையில் பல நொதிகள் அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்துகின்றன.
வரிசை 258:
== பொதுவான அமிலங்கள் ==
=== கனிம அமிலங்கள் ===
*ஐதரசன் ஆலைடுகள் மற்றும் அவற்றின் கரைசல்கள்: ஐதரோகுளோரிக் அமிலம் (HCl), ஐதரோபுளோரிக் அமிலம் (HF), ஐதரோபுரோமிக் அமிலம் (HBr), ஐதரோ அயோடிக் அமிலம் (HI).
வரிசை 273:
*போரிக் அமிலம் (H3BO3)
=== சல்போனிக் அமிலங்கள் ===
RS(=O)2–OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் சல்போனிக் அமிலங்களாகும். இங்கு R என்பது கரிம இயங்குறுப்பு ஆகும்.
வரிசை 284:
*பாலிசிடைரின் சல்போனிக் அமிலம் [CH2CH(C6H4)SO3H]n)
=== கார்பாக்சிலிக் அமிலங்கள் ===
R-C(O)OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படும். இங்கு R என்பது கரிம வேதியியல் இயங்குறுப்பு ஆகும். கார்பாக்சில் தொகுதியில் (-C(O)OH) ஒரு கார்பனைல் தொகுதியும் C=O, ஒரு ஐதராக்சில் தொகுதியும் ( O-H) உள்ளன.
வரிசை 295:
*டார்டாரிக் அமிலம் (HOOC-CHOH-CHOH-COOH)
=== ஆலசனேற்ற கார்பாக்சிலிக் அமிலங்கள் ===
ஆல்பா நிலையில் ஆலசனேற்றம் அடைந்த அமிலங்கள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவை ஆகும்.
வரிசை 304:
*டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம்
=== வினைலொத்தகார்பாக்சிலிக் அமிலங்கள் ===
சாதாரணமான கார்பாக்சிலிக் அமிலங்கள் நேரடியாக ஒரு கார்பனைல் தொகுதியையும் ஒரு ஐதராக்சில் தொகுதியையும் கொண்டிருக்கும். ஆனால் வினைலொத்த கார்பாக்சிலிக் அமிலங்களில் ஒரு கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு இவற்றைப் பிரித்திருக்கும்.
வரிசை 318:
=== நியூக்ளிக் அமிலங்கள் ===
*டீயாக்சிரிபோநியூக்ளிக் அமிலம் (டி.என்.ஏ)
*ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்.என்.ஏ)
வரிசை 331:
* [http://canadaconnects.ca/chemistry/10081/ A summary of the Properties of Acids for the beginning chemistry student] {{Webarchive|url=https://web.archive.org/web/20070208205931/http://canadaconnects.ca/chemistry/10081/ |date=2007-02-08 }}
* [http://www.unece.org/env/lrtap/ The UN ECE Convention on Long-Range Transboundary Air Pollution]
{{Authority control}}
[[பகுப்பு:காடிகள்|*]]
[[பகுப்பு:அமில-கார வேதியியல்]]
| |||