கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>நட்ராஜ்
 
No edit summary
 
வரிசை 29:
கால்வாய்கள் கீழ் உள்ள மூன்று வழிகளில் ஒன்று அல்லது மூன்றின் கலவையாக, கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் கிடைக்கக்கூடிய பாதையைப் பொறுத்து இருக்கும்:
 
=== மனிதனால் உருவாக்கப்பட்ட நீரோடைகள் ===
*கால்வாய்கள் இயற்கையான நீரோடைகள் இல்லாத இடத்திலும் செயற்கையாக உருவாக்க முடியும். எப்படி என்றால்? கால்வாய்கள் செயற்கையாக ஆழமாக தோண்டப்பட்டும் மற்றும் அதன் கரைகள் கல், சிமின்ட் கான்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டும் உருவாக்க முடியும். கால்வாய்க்கான தண்ணீர் வெளிப்புற மூலத்திலிருந்து நீரோடைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் இருந்து வழங்க வேண்டும். புதிய நீர்வழி பாதைகளில் தடுப்புகள், தூக்கி அல்லது மின் தூக்கிகல் (elevators) போன்ற நுட்பமான பொறியியல் வேலைகள் மூலம், கால்வாய்களில் கப்பல்கள் உயர்த்தப்படுவதற்காகவும் குறைப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளன. எ.கா. ஒரு உயர்ந்த நிலத்தின் மீது பள்ளத்தாக்குகளை இணைக்கும் கால்வாய்கள், கால்வாய் டூ மிடி, கால்வாய் டி ப்ரைரே மற்றும் பனாமா கால்வாய் போன்றவை.
*தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரபப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகால்வாயாகவும் மற்றும் நீர் வழிப் போக்குவரத்திற்கும் பயன்படும். எ.கா. லேஜ் வார்ட் (nl). ஒரு ஏரிக்குள் இரண்டு இணை அணைக்கரைகள் உருவாக்கவும், புதிய கால்வாயை கரைகளின் இடையில் அமைக்கவும், பின்னர் ஏரியின் மீதமுள்ள நீரை வடிகட்டவும், இதனால் கால்வாய்குள் மட்டும் அதிக நீர் இருக்கும் மற்றும் ஏரியின் பிற பகுதியில் நீர் வடிகட்டப்படும். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் உள்ள வடக்கு கடல் கால்வாய் இந்த முறையில் தான் கட்டப்பட்டன.
 
=== கால்வாய் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைத்தல் ===
*ஒரு இயற்கை நீரோடையை கால்வாயாக மாற்றம் செய்தால் அதில் எளிதாக கணிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப்போக்குவரத்தை உருவாக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால்? நீரோடையின் பாதையைத் ஆழப்படுத்தி தடுப்புகள் அமைத்து திசை திருப்புவதும், மாற்றுவதன் மூலமும் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டம் சீராக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சரக்குகளை சிறிய படகுகள் மற்றும் பெரிய கப்பல்கள் கொண்டு மிக எளிதாக எடுத்துச் செல்ல இயலும். எ.கா. வடகிழக்கு பென்சில்வேனியாவின் நிலக்கரிப் பகுதி, பாஸ்ஸோ சாவ்ன், கால்வாய் டி மைன்ஸ் டி ஃபெர் லா லாஸ் மோஸெல்லெ மற்றும் ஐசென் நதி ஆகியவற்றில் உள்ள லேஹி கால்வாய் அடங்கும்.
 
=== பக்கவாட்டு கால்வாய்கள் ===
இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட்டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும்.
 
வரிசை 42:
ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/article7940307.ece?homepage=true&theme=true ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு]</ref>
 
=== வரத்துக் கால்வாய் (Supply Channel) ===
ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.
 
=== மறுகால் அல்லது வெள்ள வடிகால் கால்வாய் (Surplus Channel) ===
வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும்.
 
=== பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel) ===
ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது