குங்குமப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி Tom8011ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
No edit summary
 
வரிசை 183:
குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முற்பட்டது.<ref name="autogenerated8">{{harvnb|Deo|2003|p=1}}</ref> வீட்டில் வளர்க்கப்படும் குங்குமப்பூவுக்கு முன்னோடி காட்டுக்குரிய ''குரோக்கசு கார்ட்ரைட்டியானசு'' ஆகும். வழக்கத்துக்கு மாறாக நீளமான சூலகமுடிகளைக் கொண்டவற்றைத் தெரிந்தெடுத்ததன் மூலம் விவசாயிகள் காட்டுக்குரிய மாதிரிகளை இனவிருத்தி செய்தனர். இவ்வாறு வெண்கலக் காலத்தில் கிரீட் தீவில் ''குரோக்கசு கார்ட்ரைட்டியானசின்'' மலட்டு வகையான ''குரோக்கசு சட்டைவசு'' வகை உருவானது.<ref name="Goyns_1">{{harvnb|Goyns|1999|p=1}}</ref> குங்குமப்பூ முதன்முதலில் [[அசிரியா|அசிரிய]] மன்னன் அசுரினிப்பாலின் ஆணைப்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தாவரவியல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சுமார் 90 நோய்களுக்கான சிகிச்சையில் குங்குமப்பூவின் பயன்பாடு 4,000 ஆண்டுகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.<ref name="Honan_2004">{{harvnb|Honan|2004}}</ref>
 
=== ஆசியா ===
 
[[படிமம்:Gomateswara.jpg|thumb|left|upright|கி.பி 978-993 வரையிலான காலப்பகுதிய [84] ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேக திருவிழாவின் ஒரு பகுதியாக அங்குகூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் குங்குமப்பூ அபிஷேகம் செய்யப்படுகிறது.]]
வரிசை 195:
குங்குமப்பூ பாரசீகத்திலிருந்து மங்கோலிய படையெடுப்பாளர்களுடன் சீனாவுக்கு வந்தது என சில வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள்.<ref name="Fletcher_2005_11">{{harvnb|Fletcher|2005| p=11}}</ref> அதே சமயம், கி.மு 200–300 காலத்திய மருத்துவப் பெருநூலான ''ஷென்னாங் பென்கவோஜிங்'' (''Shennong Bencaojing'' - 神農本草經—"ஷென்னாங் கிரேட் ஹெர்பல்", இதை ''Pen Ts'ao'' அல்லது ''Pun Tsao'' என்றும் அழைப்பர்) உட்பட பல பழமைமிக்க சீன மருத்துவ உரைகளிலும் குங்குமப்பூ குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் பிரசித்தி பெற்ற ''யான்'' ("தீ") பேரரசர் (炎帝) ஷென்னாங் எழுதியதாகக் கருதப்படும் மரபு உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கான, 252 தாவர வேதியியல் அடிப்படையான மருத்துவ சிகிச்சைகளை ஆவணப்படுத்துகிறது.<ref name="Tarvand_2005">{{harvnb|Tarvand| 2005}}</ref><ref name="Hayes_6">{{harvnb|Hayes|2001| p=6}}</ref> இருப்பினும் கி.பி 3 ஆம் நூற்றாண்டளவில், குங்குமப்பூவின் பிறப்பிடம் காஷ்மீர் என சீனர்கள் குறிப்பிட்டார்கள். எடுத்துக்காட்டாக, சீன மருத்துவ நிபுணரான வான் ஜென், "குங்குமப்பூவின் வாழ்விடம் காஷ்மீரில் உள்ளது. அங்குள்ள மக்கள் முக்கியமாக இதை புத்தருக்கு படைப்பதற்காக வளர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார். தனது காலத்தில் எவ்வாறு குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் வான் குறிப்பிட்டுள்ளார்: "[சாஃப்ரன் குரோக்கசு] பூவானது சில நாட்களுக்கு பின்னர் வாடுகிறது. அதன் பின்னர் குங்குமப்பூ பெறப்படுகிறது. இதன் ஒரேசீரான மஞ்சள் வண்ணத்துக்காக மதிப்பு பெற்றுள்ளது. [[வைன்|ஒயினுக்கு]] நறுமணமூட்டவும் இதைப் பயன்படுத்தலாம்."<ref name="Dalby_2002_95" />
 
=== ஐரோப்பா/மத்தியதரைக் கடல் பகுதி ===
 
கி.மு 1500-1600க்கு முன்பே, மினோவர்கள் தமது மாளிகைச் சுவரோவியங்களில் குங்குமப்பூவைச் சித்தரித்துள்ளனர். அந்த ஓவியங்கள் குங்குமப்பூ ஒரு குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டதைக் காண்பிக்கின்றன.<ref name="Honan_2004">{{harvnb|Honan|2004}}</ref><ref name="Ferrence">{{harvnb|Ferrence|2004|p=1}}</ref> பின் வந்த கிரேக்க புராணக்கதைகள் சிலிசியா (''Cilicia'') வுக்கான கடற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அப்பயணங்களில் கிரேக்க சாகசக்காரர்கள் உலகத்தின் மிகவும் பெருமதிப்பு மிக்கதெனத் தாங்கள் நம்பிய குங்குமப்பூவையே சேகரித்து எடுத்துவர எண்ணுகின்றனர்.<ref name="autogenerated5">{{harvnb|Willard|2001|pp=2–3}}</ref> இன்னொரு புராணக் கதை குரோக்கசு மற்றும் இசுமைலாக்ஃசு ஆகியோரைப் பற்றிக் கூறுகிறது. இக்கதையில் குரோக்கசு மதிமயக்கப்பட்டு முதல் சாஃப்ரன் குரோக்கசு செடியாக மாற்றப்படுகிறான்.<ref name="Willard_2">{{harvnb|Willard |2001|p=2}}</ref> புராதன காலத்து மத்தியதரைக் கடல் பகுதி மக்கள் —எகிப்திலுள்ள நறுமணப்பொருள் தயாரிப்பவர்கள், [[காசா]]விலுள்ள மருத்துவர்கள், ரோட்சு,<ref name="Willard_58">{{harvnb|Willard|2001|p= 58}}</ref> மற்றும் கிரேக்க ''ஃகெட்டரே'' விலைமகள்கள் உள்ளடங்கலாக—தமது நறுமணமூட்டிய தண்ணீர்கள், நறுமணப் பொருள்கள், களிம்புகள்,<ref name="Willard_41">{{harvnb|Willard|2001|p=41}}</ref> கலவைகள், கண்ணிமைச் சாயக்கலவைகள் (மசுக்காராக்கள்), தெய்வீகப் படையல்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்கள்.<ref name="Willard_41" />
"https://tamilar.wiki/w/குங்குமப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது