காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 82:
காமராசருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவருடைய தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவருடைய தாயார் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=140}} பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.<ref>{{cite book|title=India After Gandhi: The History of the World's Largest Democracy|author=Ramachandra Guha|year=2017|chapter=18|page=1|isbn=978-1-5098-8328-8|publisher=Pan Macmillan}}</ref>{{sfn|Narasimhan|Narayanan|2007|p=161}} பழங்கால தற்காப்புக் கலையான [[சிலம்பம்]] கற்றுக்கொண்டார். மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து [[முருகன்]] வழிபாட்டிலும் நேரத்தைச் செலவிட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=23}}
 
=== அரசியல் ஆர்வம் ===
காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகளிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும் போது, [[பஞ்சாயத்து|பஞ்சாயத்துக்]] கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். ''[[சுதேசமித்திரன்]]'' [[தமிழ்]] நாளிதழைத் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.{{sfn|Kandaswamy|2001|p=23}}
 
வரிசை 88:
 
== அரசியல் வாழ்க்கை ==
=== தொடக்க ஆண்டுகள் (1919-29) ===
1919-ஆம் ஆண்டு, [[ரௌலட் சட்டம்]] விசாரணையின்றி இந்தியர்களின் சிறைவாசத்தை நீட்டித்தது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட [[ஜலியான்வாலா பாக் படுகொலை]] ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, காமராசர் தனது பதினாறாவது வயதில் [[இந்திய தேசிய காங்கிரசு]] இயக்கத்தில் சேர முடிவு செய்தார்.<ref>{{cite book|author=Nigel Collett|url=https://books.google.com/books?id=XuQC5pgzCw4C&pg=PA263|title=The Butcher of Amritsar: General Reginald Dyer|year=2006|publisher=A&C Black|isbn=978-1-8528-5575-8|page=263}}</ref>{{sfn|Sanjeev|Nair|1989|p=144}}
 
21 செப்டம்பர் 1921 அன்று, காமராசர் முதன்முறையாக [[மதுரை]]யில் [[மகாத்மா காந்தி]]யைச் சந்தித்தார். காந்தியின் [[மது]] ஒழிப்பு, [[காதி]] பயன்பாடு, [[தீண்டாமை]] ஒழிப்பு போன்ற கருத்துக்களால் கவரப்பட்டார். 1922-ஆம் ஆண்டு, காமராசர் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தின்]] ஒரு பகுதியாக [[வேல்ஸ்]] இளவரசர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சென்னைக்குச் சென்றார். பின்னர் விருதுநகர் நகரக் காங்கிரசு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக, இவர் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] சேர மக்களைத் தூண்டுவதற்காக, காந்தியின் பேச்சுக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.{{sfn|Kandaswamy|2001|p=25}} அடுத்த சில ஆண்டுகளில், காமராசர் [[நாக்பூர்|நாக்பூரில்]] நடந்த கொடி சத்தியாகிரகம் மற்றும் சென்னையில் நடந்த வாள் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். [[மதுரை மாவட்டம்]] மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.{{sfn|Kandaswamy|2001|p=30}}
 
=== விடுதலை இயக்கம் (1930-39) ===
1930-ஆம் ஆண்டு, காந்தியின் [[உப்பு சத்தியாக்கிரகம்|உப்பு சத்தியாக்கிரகதிற்கு]] ஆதரவாக [[வேதாரண்யம்]] கடற்கரையில் [[இராசகோபாலாச்சாரி]] தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டார்.<ref name="Asian"/> இவர் அப்பொழுது முதன்முறையாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-இல் [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்]] கையெழுத்தான போது விடுவிக்கப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=145}} 1931-இல் அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த பத்தாண்டுகளில், சென்னை மாகாணத்தில் காங்கிரசு கட்சி இராசாசி எதிர் [[சத்தியமூர்த்தி]] என இரண்டாகப் பிளவுபட்டது. காமராசர் சத்தியமூர்த்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை ஆதரித்தார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=147}} சத்தியமூர்த்தி காமராசரின் அரசியல் வழிகாட்டியானார். அதே வேளை காமராசர் சத்தியமூர்த்தியின் நம்பகமான உதவியாளராகவும் 1931-ஆம் ஆண்டு, காங்கிரசின் வட்டாரத் தேர்தலில், சத்தியமூர்த்தி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற காமராசர் உதவி செய்தார்.{{sfn|Kandaswamy|2001|p=38}} 1932-இல், காமராசர் மீண்டும் தேசத்துரோகம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, [[திருச்சிராப்பள்ளி]] சிறையில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் [[வேலூர்]] மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஜெய்தேவ் கபூர், கமல்நாத் திவாரி போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். 1933-34-இல், காமராசர் [[வங்காளம்|வங்காள]] [[ஆளுநர்]] ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் 1934-இல் விடுவிக்கப்பட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=36}}
 
வரிசை 100:
1934 இந்தியப் பொதுத் தேர்தலில், காமராசர் காங்கிரசிற்கான பரப்புரைகளை ஏற்பாடு செய்தார். 1936-இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937-இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், [[சட்டமன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DH">{{cite web|title=K Kamaraj 116th birth anniversary: Rare pics of 'Kingmaker'|url=https://www.deccanherald.com/national/south/k-kamaraj-116th-birth-anniv-rare-pics-of-kingmaker-747273.html|date=15 July 2019|newspaper=Deccan Herald|access-date=22 May 2020}}</ref>{{sfn|Kandaswamy|2001|pp=38-39}}
 
=== காங்கிரசு தலைமையும் சிறைவாசமும் (1940-45) ===
1940-இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக பணியாற்றினார்.{{sfn|Kandaswamy|2001|p=39}} சென்னை மாகாண ஆளுநர் [[ஆத்தர் ஹோப்]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளுக்கு]] நிதியளிக்க நன்கொடைகளைச் சேகரித்ததை எதிர்த்துப் பரப்புரை செய்தார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.{{sfn|Murthi|2005|p=88}} அங்கிருக்கும் போதே 1941-இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலையானதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டும் விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=41}}
 
ஆகத்து 1942-இல், காமராசர் [[பம்பாய்|பம்பாயில்]] நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்தார். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=42}} இவர் சிறையில் இருந்தபோது, மார்ச் 1943-இல் சத்தியமூர்த்தி காலமானார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=148}} சூன் 1945-இல் விடுவிக்கப்படும் வரை மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் இறுதியானதும் நீண்டதுமான சிறைத் தண்டனையாகும்.<ref name="Asian">{{cite web|url=http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|date=13 October 2009|title=Tributes To Kamaraj|publisher=Asian Tribune|first=R. K.|last=Bhatnagar|access-date=3 February 2014|url-status=live|archive-url=https://web.archive.org/web/20140221044857/http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|archive-date=21 February 2014 }}</ref> இவரின் இந்திய விடுதலைப் போராட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர் இவரை ஆறு முறை கைது செய்தனர். ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=kGUuOdeCiXQC|title=Crafting State-Nations: India and Other Multinational Democracies|first1=Alfred|last1=Stepan|first2=Juan J.|last2=Linz|first3=Yogendra|last3=Yadav|publisher=JHU Press|year=2011|isbn=978-0-8018-9723-8|page=124 }}</ref>
 
=== உயரும் செல்வாக்கும் விடுதலைக்குப் பிறகும் (1946-53) ===
காமராசர் சிறையில் இருந்து வந்த பிறகு, இராசாசி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரசு கணிசமாக பலவீனமடைந்திருந்ததைக் கண்டார். இவருக்கும் இராசாசிக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இராசாசியைச் சந்தித்தார். இருந்தாலும், இவரின் விருப்பத்திற்கு மாறாக இராசாசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதால் கோபமடைந்தார். [[சர்தார் படேல்|சர்தார் வல்லபாய் பட்டேல்]] ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946-இல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, இராசாசி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகத் தன்னைக் குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராசர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகினார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராசர் தனது விலகலைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதற்கிடையில், காமராசருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக இராசாசி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.{{sfn|Parthasarathi|1982|pp=15-16}}{{sfn|Kandaswamy|2001|pp=46-47}} 1946 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. [[த. பிரகாசம்]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், சிறிது காலத்திலேயே காமராசருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக [[ஓமந்தூர் ராமசாமி]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு, 1949-இல் [[பூ. ச. குமாரசுவாமி ராஜா|குமாரசுவாமி ராசா]] முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், காங்கிரசு கட்சியின் தலைவராக காமராசர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.{{sfn|Parthasarathi|1982|pp=16-17}}{{sfn|Kandaswamy|2001|p=49}} 1947 ஆகத்து 15 அன்று, காமராசர் [[இந்திய தேசியக் கொடி]]யை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.{{sfn|Sanjeev|Nair|p=148}} [[1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்|1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில்]], திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று [[மக்களவை|இந்திய நாடாளுமன்ற மக்களவை]] உறுப்பினரானார்.<ref name="E1951">{{cite report|url=https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzVx8fLfn2ReU7TfrqYobgIg5j%2FHYFqSqJgJGr0bST3IUhAF9SfDN8Uuc8gj%2BDh4kAfDOTuR4Nkt0ekULalb4eUwj3FEb6QN6V5bMrpRuFg7z8ZJWF%2F1POgiq%2ByICySNyC|title=Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha|publisher=Election Commission of India|access-date=1 December 2023}}</ref> இவருக்கு எதிராக இத்தேர்தலில் ராசாசி நாயுடுகளின் வாக்கை பெற ஈவேரா மூலம் கோபால்சாமியை (ஜிடி நாயுடு) நிறுத்தினார்.
 
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில்]], காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (375-இல் 152) வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராசர் விரும்பவில்லை. ஆனால், காங்கிரசின் மத்தியக் குழு ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] பதவி வகித்து ஓய்வுக்காலத்துக்குச் சென்ற இராசாசிதான் தலைமை தாங்க சரியானவர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு|சவகர்லால் நேரு]] உடனான ஆலோசனைக்குப் பிறகு, இராசாசி அரசாங்கத்தை அமைத்தார்.{{sfn|Parthasarathi|1982|p=19}}{{sfn|Sanjeev|Nair|1989|p=151}} காமராசர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இராசாசியுடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதனையடுத்து [[பி. சுப்பராயன்]] தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 1953-இல் காமராசர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.{{sfn|Parthasarathi|1982|p=20}}
 
=== தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63) ===
[[File:Honourable Chief Minister of Tamilnadu Thiru. K. Kamaraj with Thiru. M.M. Sivasamy of Raja Transport.jpg|thumb|காமராசர் (இடதுபுறம் இருந்து இரண்டாவது) 1955-இல் ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றபோது.]]
இராசாசியின் [[குலக்கல்வித் திட்டம்|குலக்கல்வித் திட்டத்திற்கு]] பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-ஆம் ஆண்டு [[ஆந்திரா|ஆந்திரப் பிரதேசம்]] பிரிக்கப்பட, காங்கிரசு கட்சியின் உள்ளேயே இராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, தானே விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசரை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான [[சிதம்பரம் சுப்ரமண்யம்|சி. சுப்பிரமணியத்தை]] முன்னிறுத்தினார். காமராசர் [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்களால்]] கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13 அன்று சென்னை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.{{sfn|Parthasarathi|1982|p=20}}<ref name="CM">{{cite web|url=https://assembly.tn.gov.in/history/cmlist.php| title=Chief Ministers of Tamil Nadu|publisher=Tamil Nadu Legislative Assembly|access-date=1 January 2024}}</ref> நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, [[குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)|குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி]] இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.{{sfn|Kandaswamy|2001|p=57}} அப்பொழுது காமராசருக்கு [[பெரியார்]], [[அண்ணாதுரை]] போன்ற பிற கட்சித் தலைவர்களின் ஆதரவும் இருந்தது.{{sfn|Kandaswamy|2001|p=60}} [[பா. பரமேசுவரன்]] என்ற பட்டியல் இனத்தவர் நாடு விடுதலை பெற்றபின்பு இந்து அறநிலையத் துறை அமைச்சராக வகித்த முதல் ஆள் ஆவார்.
வரிசை 128:
காமராசார் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்களில்]] வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 1960-களின் நடுப்பகுதியில், காங்கிரசு கட்சி மெல்ல அதன் வீரியத்தை இழந்து வருவதைக் கவனித்த இவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த முதல்வர் பதவியை விட்டு விலக முன்வந்தார்.{{sfn|Parthasarathi|1982|pp=27-28}} 2 அக்டோபர் 1963 [[காந்தி ஜெயந்தி]] நாளன்று முதல்வர் பதவியைத் துறந்தார்.{{sfn|Kandaswamy|2001|p=57}}<ref name="CM"/>
 
=== தேசிய அரசியல் (1964-75) ===
[[File:Jawaharlal Nehru with Lal Bahadur Shastri and K. Kamaraj.jpg|thumb|காமராசர் (நடுவில்) [[ஜவஹர்லால் நேரு]] (வலது), [[லால் பகதூர் சாஸ்திரி]] (இடது) உடன்.]]
 
"https://tamilar.wiki/w/காமராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது