குளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி added Category:நுரையீரல் முகவர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 10:
[[File:Chlorine liquid in an ampoule.jpg|thumb|left|Chlorine, liquified under a pressure of 7.4 bar at room temperature, displayed in a quartz ampule embedded in [[acrylic glass]].]]
Cl என்ற வேதிக் குறியீட்டைக் கொண்டுள்ள குளோரினின் அணு வெண் 17, அணு நிறை 35.45. வளிம நிலையில் இதன் அடர்த்தி 3.21 கிகி/கமீ. இது ஈரணு மூலக்கூறுகளால் ஆனது.<ref>{{cite web|author=Kenneth Barbalace |url=http://environmentalchemistry.com/yogi/chemicals/cn/Chlorine.html |title=Chemical Database: Chlorine |publisher=EnvironmentalChemistry.com |date=1995-10-22 |accessdate=2011-09-19}}</ref> நச்சுத் தன்மை கொண்டது. இதன் உறை நிலை 172.2 K, கொதி நிலை 239.1 K ஆகும்.<ref>{{cite web |url=http://www.nist.gov/pml/div685/grp02/srd_134_chlorine.cfm |title=SRD134 Chlorine |publisher=NIST |accessdate=2012-09-12 }}</ref> [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.<ref>"Battle of Ypres" ''The Canadian Encyclopedia''</ref><ref name="First World War">{{cite web|url=http://www.firstworldwar.com/weaponry/gas.htm|title=Weapons of War: Poison Gas|publisher=First World War.com|accessdate=2007-08-12}}</ref> சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கின்றது.<ref name="msds-cl">{{cite web|url=http://www.westlake.com/datasheets/MSDS_Chlorine.pdf|title=Chlorine MSDS|date=October 23, 1997 (Revised November 1999|access-date=22 அக்டோபர் 2012|archive-date=26 செப்டம்பர் 2007|archive-url=https://web.archive.org/web/20070926183417/http://www.westlake.com/datasheets/MSDS_Chlorine.pdf|url-status=unfit}}</ref> குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது.<ref name=tox>{{cite journal|journal = Environmental Research|volume = 85|issue = 2|year = 2001 |doi = 10.1006/enrs.2000.4110 |title = The Toxicology of Chlorine|author = Winder, Chris|pages = 105–114|pmid = 11161660|bibcode = 2001ER.....85..105W }}</ref> 3.5 ppm (மில்லியனில் ஒரு பகுதி) இருந்தால் குளோரினின் நமச்சலூட்டும் மணத்தை உணரலாம்.<ref>{{cite web |url=http://www.bt.cdc.gov/agent/chlorine/basics/facts.asp |title=Facts About Chlorine |publisher=[[United States Centers for Disease Control and Prevention]] |work=Emergency Preparedness and Response |accessdate=2011-09-19 |archive-date=2016-04-23 |archive-url=https://web.archive.org/web/20160423193302/http://www.bt.cdc.gov/agent/chlorine/basics/facts.asp |url-status=dead }}</ref> 1000 ppm இருந்தால் ஒரு சில சுவாசித்தலில் இறக்க நேரிடும்.<ref name="Greenwood"/> காற்றில் அனுமதிக்கப் பட்ட இதன் அளவு 1 ppm ஆகும்.
குளோரின் ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[வளிமம்]]. இது [[ஆக்சிஜன்]] போல தீவிரமாக வினை புரிய வல்லது. ஆனால் வறண்ட குளோரின் மந்தமானது. பெரும்பாலான உலோகங்களுடன் இணைந்து குளோரைடுகளைத் தோற்று விக்கின்றது. [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], [[சோடியம்]] ஆகியவை குளோரினில் பிரகாசமாய் எரிகின்றன. பொடி செய்யப்பட்டு சூடுபடுத்தப் பட்ட [[ஆர்செனிக்]] மற்றும் [[ஆண்டிமணி]]ப் பொடியை இவ் வளிமத்தில் தூவ நெருப்புப் பொறி மழை போலப் பொழிகிறது. செம்பு இழை இக்குளோரின் வளிமத்தில் எரிகின்றது. [[ஆக்சிஜன்]], [[நைட்ரஜன்]], [[கார்பன்]] போன்ற உலோகமற்றவைகளுடனும் குளோரின் வினை புரிகின்றது.<ref>{{cite book|title=Merck Index of Chemicals and Drugs, 9th ed.|url=https://archive.org/details/merckindexencycl0009unse|publisher=Merck & Co.|location = Rahway, N.J.|year=1976|isbn=0-911910-26-3|editor=Windholz, Martha ''et al.''}}</ref> ஹைட்ரஜனுடன் கலந்து சூரிய ஒளியில் வைத்தால் சத்தத்துடன் வெடிக்கின்றது. ஹைட்ரஜன் வளிமத்தை குளோரின் வளிமத்தில் பீய்ச்சினாலோ அல்லது குளோரின் வளிமத்தை ஹைட்ரஜன் வளிமத்தில் பீய்ச்சினாலோ எரிகின்றது, [[ஹைட்ரஜன்]] மீது குளோரின் கொண்டுள்ள நாட்டம் அளவில்லாதது. அதனால் ஹைட்ரஜனீக்கம் செய்ய குளோரின் பயன்படுகிறது. [[தண்ணீர்]], ஹைட்ரஜன் சல்பைடு, [[டர்பன்டைன்]] போன்றவற்றிலுள்ள ஹைட்ரஜனை எளிதாக அகற்றி விடுகிறது. குளோரின் வெளியில் எரியும் [[மெழுகுவர்த்தி]]ப் புகையை எழுப்புகிறது.
== பயன்கள் ==
நீரில் குளோரின் கரைகிறது இந்நீர் குளோரின் நீர் எனப்படும். நீரைக் கொதிக்க வைத்தால் அதிலுள்ள குளோரின் வெளியேறிவிடுகிறது. சூரிய ஒளியில் குளோரின் நீர் ஹைட்ரோ குளோரைடாக மாறுகிறது. அப்போது நீரிலுள்ள ஆக்சிஜன் வெளியேறுகின்றது.<ref name ="Wiberg"/> நீரில் உள்ள நோய்க் கிருமிகள், தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றைப் பேரளவில் அழிக்க குளோரின் வளிமம் பயன்படுகின்றது.<ref name="Greenwood"/> இதனால் குடி நீர் விநியோக முறையிலும்,<ref name=CRC>{{cite book| author = Hammond, C. R.|title = The Elements, in Handbook of Chemistry and Physics 81st edition| url = https://archive.org/details/crchandbookofche0000unse_u9i8| publisher =CRC press| year = 2000| isbn = 0-8493-0481-4}}</ref> நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றார்கள்.<ref name="CRC"/><ref>{{Cite book|url=http://books.google.com/?id=cEmq232h1zcC&pg=PA148|page=148|title=Corrosion of steel in concrete: prevention, diagnosis, repair|author=Bertolini, Luca; Elsener, Bernhard; Pedeferri, Pietro; Polder, Rob B.|publisher=Wiley-VCH|year=2004|isbn=3-527-30800-8}}</ref> குளோரின் நுண்ணுயிரிகளை ஓரளவு விரைவாக அழிக்கும் மலிவான பொருளாகும்.<ref name="Greenwood"/><ref name="Wiberg">{{cite book|last=Wiberg|first= Egon|coauthor= Wiberg, Nils and Holleman, Arnold Frederick |title=Inorganic Chemistry |publisher=Academic Press|year=2001|isbn=0-12-352651-5|ref=harv}}</ref> எனினும் வைரஸ் எனப்படும் சில நச்சுயிரிகளை குளோரினால் அழிக்க முடிவதில்லை. மேலும் நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து, புற்று நோய்க் காரணிகளுள் ஒன்றாகக் கருதப் படுகின்ற டிரைகுளோரோ மீத்தேனை உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் குளோரின் தூயகுடி நீருக்கு முழுமையான வழி முறை எனக் கூற முடியாது. மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது. இதனால் இன்றைக்கு குளோரினுக்குப் பதிலாக ஓசோனைப் பயன்படுத்துகின்றார்கள்
குளோரின் வெளுப்பூட்டியாகச் செயல்படுகின்றது பயனுறுதிறன் மிக்க வெளுபூட்டியின் வளர்ச்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது.<ref name=encyc>{{cite encyclopedia |encyclopedia=Encyclopaedia Britannica, |title=Bleaching |url=http://www.1902encyclopedia.com/B/BLE/bleaching.html |accessdate=2 May 2012 |language= |edition=9th Edition (1875) and 10th Edition (1902)}}</ref><ref name="Cotton">{{Citation|title=The Cotton Industry|last=Aspin|first=Chris|publisher=Shire Publications Ltd|year=1981|isbn=0-85263-545-1|page=24}}</ref> தொடக்கத்தில் குளோரின் நீரே இதற்குப் பயன்படுத்தப் பட்டது.<ref name="Greenwood"/> ஆனால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பருத்தி, லினன் ஆடைகளைப் பாதிக்கின்றது. இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப் படும் நீர்ம வெளுபூட்டி சோடியம் ஹைபோ குளோரைட்டின் மென் கரைசலாகும். குளோரின் வளிமம் காகிதம், அட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெளுப்பூட்டியாகப் பயன்படுகிறது.
பாலி வினைல் குளோரைடு(PVC) போன்ற நெகிழ்மங்களை உற்பத்தி செய்யும் முறையில் குளோரின் ஒரு மூலப் பொருளாகப் பயன்படுகிறது.<ref name=history/> அரிமானத்திற்கு உட்படாததாலும், எடை குறைந்ததாக இருப்பதால் கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும், நீர் மற்றும் நீர்மங்களை எடுத்துச் செல்லும் குழாயாக இரும்பிற்குப் பதிலாக இன்றைக்கு நெகிழ்மக் குழாய்கள் பயனில் உள்ளன. கண்ணாடி போன்று நிறமற்ற நெகிழ்மங்கள் நீர்மங்களை வைத்திருக்கும் கொள்கலனாகப் பயன்படுகின்றன.
பல்வேறு பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரின் பயன்படுத்தப்படுகின்றது. சாயங்கள், துணிகள், பெட்ரோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நஞ்சுத் தடை மருந்துகள், பூச்சி கொல்லி மருந்துகள், உணவுப் பண்டங்கள், கரைப்பான்கள், வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரினின் முக்கியம் உணரப்பட்டுள்ளது.<ref name="Euro Chlor5">{{cite web|url=http://www.eurochlor.org/uses|title=What is chlorine used for?|publisher=Euro Chlor|accessdate=2007-08-20|date=October 2010|archive-date=2011-07-26|archive-url=https://web.archive.org/web/20110726042720/http://www.eurochlor.org/uses|url-status=unfit}}</ref><ref name="Chlorine Tree">{{cite web|url=http://www.chlorinetree.org|title=Chlorine Tree|publisher=Chlorine Tree|accessdate=2007-08-20}}</ref>{{sfn|Greenwood|1997|p=798}}
பயன்களைத் தரும் வேறு பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு குளோரின் ஒரு மூலப் பொருளாகவும் உள்ளது. இவற்றுள் கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோபாம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எண்ணெய் மற்றும் மசகுப் பொருட்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு கரைப்பானாக உள்ளது. துணிகளை நீரில் நனைக்காமலேயே சலவை செய்ய இந்தக் கரைப்பான் பயன்படுகிறது. எனினும் ஈரலுக்கு மிகவும் நஞ்சானது என்பதால் இப்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குளோரோபாம் எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம். இது அறுவைச் சிகிச்சையின் போது மயக்கமூட்டும் மருந்தாக 1847 முதல் பயன்படுத்தப்படுகின்றது.<ref name=history>{{cite web|url = http://ocw.mit.edu/NR/rdonlyres/Earth--Atmospheric--and-Planetary-Sciences/12-091January--IAP--2006/0EF9264B-3205-44A3-8306-8E8364917DF0/0/brazin.pdf|title = Chlorine & its Consequences|author = Jacqueline Brazin|accessdate = 2008-07-10|archiveurl = https://web.archive.org/web/20060918145109/http://ocw.mit.edu/NR/rdonlyres/Earth--Atmospheric--and-Planetary-Sciences/12-091January--IAP--2006/0EF9264B-3205-44A3-8306-8E8364917DF0/0/brazin.pdf|archivedate = 2006-09-18|url-status = dead}}</ref> இது ஈரல் மற்றும் சிறுநீரகங்களைத் தீவிரமாகப் பாதிக்கின்றது என்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும்.<ref>{{cite web|url=http://www.aces.uiuc.edu/news/stories/news4724.html|title=What's in your Water?: Disinfectants Create Toxic By-products|date=2009-03-31|work=ACES News|publisher=College of Agricultural, Consumer and Environmental Sciences – University of Illinois at Urbana-Champaign|accessdate=2009-03-31}}</ref><ref>{{cite journal |doi=10.1016/j.mrrev.2007.09.001 |title=Occurrence, genotoxicity, and carcinogenicity of regulated and emerging disinfection by-products in drinking water: A review and roadmap for research |year=2007 |last1=Richardson |first1=Susan D. |last2=Plewa |first2=Michael J. |last3=Wagner |first3=Elizabeth D. |last4=Schoeny |first4=Rita |last5=DeMarini |first5=David M. |journal=Mutation Research/Reviews in Mutation Research |volume=636 |pages=178–242 |pmid=17980649}}</ref>
குளிர் சாதனங்களில் உறைபதனப் பொருளாக [[குளோரோ புளுரோ கார்பன்]] நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது குளோரினின் தனிக் கூறுகளை வெளியிட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் தங்கி பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தைச் சிதைத்து அழிக்கின்றது என்பதால் இப்பயன்பாடு இன்றைக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
| |||