நிலைமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Classical mechanics|cTopic=Fundamental concepts}} '''நிலைமம்''' அல்லது '''சடத்துவம்''' (Inertia) என்பது ஒரு துணிக்கையின் இயக்க நிலையில் நேரும் மாற்றங்களுக்கு எதிராக அப்பொருள் கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 8:
== கருத்தாக்கமும் வரலாறும் ==
[[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|மறுமலர்ச்சிக்கு]] முன்னர் [[மேற்குலக மெய்யியல்|மேற்குலக மெய்யியலில்]] பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கக் கோட்பாடு [[அரிசுட்டாட்டில்|அரிஸ்டாட்டில்]] எனும் ஒரு கிரேக்க சிந்தனையாளனினால் முன்மொழியப் பட்டது (ஏறத்தாழ கி.மு. 335 கி.மு. 322 ஆண்டுகளுக்கிடையில்). புவியில் அனைத்துப் பொருட்களும் புற இயக்கச் சக்தி இன்றேல் ஓய்வு நிலைக்கு வந்துவிடும்,என்றும் நகரும் பொருட்களும் உந்துசக்தி ஒன்று இருக்கும் வரை மட்டுமே நகரும் என்றும் அவர் வாதித்தார். எறிபொறியிலிருந்து புறப்பட்ட [[எறியம்|எறியத்தின்]] தொடர் இயக்கம் அப்பொருளைச் சுற்றியுள்ள ஊடகத்தின் ஊக்கத்தினால் தான் சாத்தியப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.<ref>Aristotle, ''Physics'', 8.10, 267a1–21; [http://etext.library.adelaide.edu.au/a/aristotle/a8ph/ Aristotle, ''Physics'', trans. by R. P. Hardie and R. K. Gaye] {{Webarchive|url=https://web.archive.org/web/20070129111002/http://etext.library.adelaide.edu.au/a/aristotle/a8ph/ |date=2007-01-29 }}.</ref> அதன் அடிப்படையில் ஊடகமற்ற வெற்றிடத்தில் இயக்கம் சாத்தியமில்லை என்னும் முடிவுக்கு வந்தார்.<ref>Aristotle, ''Physics'', 4.8, 214b29–215a24.</ref>
அரிஸ்டாட்டிலின் இந்த இயக்கக் கொள்கை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும், கிட்டத்தட்ட [[ஆயிரமாண்டு|ஈராயிரமாண்டுகளுக்கும்]] மேலாக பல சான்றோரால் பலமுறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, [[லுக்ரேசியஸ் Lucretius|(லுக்ரேசியஸ் Lucretius]]) என்பவர் ([[எபிகியூரசு|எபிகியூரசின்]] கருத்தையொட்டி) திணிவின் 'இயல்பு நிலை' இயக்கமே ஒழிய தேக்கமன்று என்று வாதித்தார்.<ref>Lucretius, ''On the Nature of Things'' (London: Penguin, 1988), pp. 60–65</ref> ஆறாவது நூற்றாண்டில் ஜான் பிலோபோனசு [[John Philoponus|(John Philoponus]]) என்பவர் அரிஸ்டாட்டிலின் கருத்துகளுள் 'ஊடகமே எறியத்தின் இயகத்தைத் தக்க வைக்கிறது' , 'வெற்றிடம் இயக்கத்தைத் தடை செய்கிறது' எனும் கருத்துகளிலுள்ள முரண்பாடுகளை விமர்சித்தார். ஒரு பொருளின் இயக்கம் அதன் சுற்றூடகத்தினால் தக்க வைக்கப்படவில்லை, மாறாக அந்தப் பொருளின் இயக்கம் முடுக்கப்பட்ட போது அதற்கு ஊட்டப்பட்ட ஏதோவொரு பண்பினால் தான் தக்க வைக்கப்படுகிறது எனும் கருத்தை முன்வைத்தார் பிலோபோனசு. இக்கருதுகோளில், ஒரு பொருளின் இயக்கத்தை தொடர்ந்து பேண சக்தி ஒன்று தேவை எனும் கருத்து பொதிந்திருப்பதால் இது நவீன சடத்துவ கொள்கையோடு இணங்குவதில்லை. எனினும் இந்தக் கருதுகோள் சடத்துவக் கொள்கையின் பிறப்பிற்கு முன்னோடியாக அமைந்தது.<ref><cite class="citation book" contenteditable="false">Sorabji, Richard (1988). </cite></ref><ref><cite class="citation encyclopaedia" contenteditable="false">[http://plato.stanford.edu/entries/philoponus/#2.1 "John Philoponus"]. </cite></ref><ref name="Darling_2006"><cite class="citation book" contenteditable="false">Darling, David (2006). </cite></ref> பிலோபோனசு முன்வைத்த இக்கருத்து அரிசுடாட்டிலிற்கு ஆதரவான [[இப்னு றுஷ்து]] உள்ளிட்ட பல மெய்யியல் மேதைகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டது. எனினும் [[இசுலாமியப் பொற்காலம்|இஸ்லாமியப் பொற்காலத்தில்]], பிலோபோனசிற்குப் பலர் ஆதரவளித்து அவரது கருத்தை மேம்படுத்தி வளர்த்தனர்.
14-ஆவது நூற்றாண்டில், [[Jean Buridan|யான் புரிடான் (Jean Buridan)]] என்பவர் இயக்கத்தை ஆக்கும் பண்பு கொண்ட இந்த ''தூண்டுதிறன்'' (impetus) தானாகவே சிதையும் எனும் கருத்தை மறுத்தார். அசையும் ஒரு பொருளின் இயக்கம், அதன் தூண்டுதிறனுக்கு எதிராக விளையும் காற்றின் தடைவிசை அப்பொருளின் எடை ஆகியவற்றால் நிறுத்தப்படுகிறது எனச் புரிடானின் சாதித்தார்.<ref>Jean Buridan: Quaestiones on Aristotle's Physics (quoted at [https://web.archive.org/web/20110720105959/http://brahms.phy.vanderbilt.edu/a203/impetus_theory.html Impetus Theory])</ref> மேலும் அவர் தூண்டுதிறன் வேகத்தோடு நேர் விகிதத்தில் அமைவதாகக் கருதினார்; இக்கருத்து நவீன [[உந்தம்|உந்தக்]] கருத்துருவோடு பலவாறு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. எனினும் புரிடான் தன் கோட்பாட்டை அரிசுட்டாட்டிலின் அடிப்படைக் கோட்பாட்டின் திருத்தமாகக் கருதியதோடு, இயங்கும் பொருளுக்கும் ஓய்வான பொருளுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு எனும் கருத்து உட்பட அரிசுட்டாட்டிலின் கருத்துகள் பலவற்றை ஏற்றிருந்தார். மேலும் அவர் தூண்டுதிறன் நேரியல் (linear) பண்பு கொண்டதாக இருக்க வேண்டியதில்லை எனவும், வட்டப்பாதையில் இயங்கும் பொருட்களுக்கு வளைவியல் (circular) பண்பு கொண்டதாக அமையலாம் என்றும் கருதினார்.
| |||