சிவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
No edit summary
 
வரிசை 37:
{{சைவ சமயம்}}
 
=== ஆதிசக்தி ===
[[File:Shiva-Parvati-SFAsianArtMuseum.JPG|left|thumb| [[நந்தி]] மீது சிவன்-[[பார்வதி|சக்தி]] சிற்பம், [[சான் பிரான்சிசுக்கோ|சான் பிரான்சிசுகோ]] அருங்காட்சியகம்]]
 
சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும், ஒருபெருமுழுமையின், ஒன்றிலொன்று இன்றியமையாதா இரு அம்சங்கள். அவற்றைப் பரசிவம், ஆதிசக்தி என நோக்கும் [[சைவர்|சைவர்கள்]], அந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகளை நோக்குகின்றனர். [[தட்சன்|தக்கனின்]] தவத்தால் அவனுக்கு மகளாகப் பிறக்கும், ஆதிசக்தி, "[[தாட்சாயிணி|சதிதேவி]]" என்று அறியப்படுகிறாள். தக்கனின் அனுமதியின்றி சதி சிவனை மணந்ததால் வெகுண்ட தக்கன், அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். அங்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்கன் ஈசனை இழித்துப்பேசுவதால், சதி வேள்வித்தீயில் வீழ்ந்து மறைய, ஆங்காரமுற்ற ஈசனின் திருமுடியிலிருந்து [[வீரபத்திரர்]] தோன்றி, யாகத்தை அழிக்கிறார். சதியின் உடல் யாககுண்டத்தில் கிடந்ததாகவும், அதை ஆற்றாமையுடன் ஈசன் தூக்கிச் சென்றபோது, அவற்றை [[திருமால்]] ஆழியால் சிதைக்க, அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களானதாகவும், இக்கதை செல்கின்றது. பின், [[பர்வதராஜன்|பர்வதராசன்]] [[மைனாவதி]]யின் தவத்துக்கிரங்கி, சக்தி மீண்டும் [[பார்வதி]]யாக அவதரிக்கிறாள். கடுந்தவமிருந்து ஈசனைக் கணவனாக அடையும் உமையவள், பின் பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தும், [[பிள்ளையார்]], [[முருகன்]] ஆகியோரைப் படைத்தும், ஈசன் தேவியாக வீற்றிருக்கிறாள்.
 
=== கங்கை ===
[[பகீரதன்|பகிரதனின்]] முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க [[பார்வதி]]யின் மூத்தவளான [[கங்கை]], பூமியில் நதியாகப் பாய்ந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த [[பகீரதன்|பகிரதன்]] கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமியற்றியதால் [[கங்கை|கங்கையை]] சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டதனால் சிவபெருமான் கங்காதரன் என்று பெயர்பெற்றார். சிவபெருமானது ஐந்து குமாரர்கள் [[பைரவர்]], [[கணபதி]], [[முருகன்]], [[வீரபத்திரர்]], [[ஐயனார்]] ஆவர்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - தினமலர் கோயில்கள்</ref> பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் [[மோகினி]] அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடிப் பெற்ற ஐயனாரே இன்று, [[ஐயப்பன்]] என்று அறியப்படுகிறார்.
[[File:Ardhanari.png|thumb|upright|சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் - [[மாதொருபாகன்]] - 11ஆம் நூற்.]]
===பிள்ளையார் - முருகன்===
கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள [[மூன்றாவது கண் (இறையியல்)|நெற்றிக் கண்களிலிருந்து]] நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.
 
=== ஏனையவை ===
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து [[யானை|யானையை]] அனுப்ப, அதன் தோலினை ஈசன் போர்த்தார். [[மழு (சிவனாயுதம்)|மழுவினை]] எய்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக் கொண்டார். அவை எதுவும் தனக்கு ஒன்றும் செய்யாது வாளாநிற்க, அவர் தாருகாவனத்து இருடிகளைத் தோற்கடித்ததாக, அக்கதை சொல்கின்றது. [[தட்சன்|தட்சனின்]] சாபத்திலிருந்து [[சந்திரன்|சந்திரனைக்]] காக்க, அவனைத் தலையில் சூடிக்கொண்டதும், [[காசிபர்]] [[கத்ரு]] தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான [[கருடன்|கருடனிடமிருந்து]] தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்த போது, அவற்றை அவர் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டதும், பாற்கடலைக்கடையும் பொழுது [[வாசுகி (பாம்பு)|வாசுகி]] பாம்பு கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலகண்டர் ஆனதும், அவர் பெருங் கருணைக்குச் சான்றுகளாகும்.
 
வரிசை 59:
இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான [[மருத்து]]க்களின் தந்தையாகவும் அறியப்பெறுகிறார். [[அக்னி தேவன்]], [[வாயு தேவன்]], [[இந்திரன்]], [[பிரஜாபதி|பிரசாபதி]] போன்ற வேதக்கடவுள்களே, பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
=== சைவசித்தாந்தம் ===
[[படிமம்:Statuette of dancing Shiva, the Nataraja.jpg|thumb|ஐந்தொழில் ஐயன் அரன்]]
{{முதன்மை|சைவ சித்தாந்தம்}}
வரிசை 84:
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்து நான்கு வடிவங்கள்]] ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் [[மகேசுவர மூர்த்தங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.
 
=== லிங்கம் ===
{{Main|லிங்கம்}}
 
வரிசை 114:
|}
 
=== சைவத் திருமுறைகள் ===
பன்னிரு திருமுறைகள் என்று கூறப்படும் [[சைவத் திருமுறைகள்]], பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.<ref>{{cite web|url=http://www.thevaaram.org/nayanmar.php|title=பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்|work=www.thevaaram.org}}</ref>
# முதல் திருமுறை ([[சம்பந்தர்]] அருளியது)
"https://tamilar.wiki/w/சிவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது