தரவுத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: இசை தொகுப்பு → இசைத் தொகுப்பு using AWB
 
No edit summary
 
வரிசை 43:
வழங்கன்-பயனர் அல்லது பரிவர்த்தனைசார் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் பல்லாயிரம் பயனர்ளுக்கு ஒரே நேரத்தில் தேடுதல் மற்றும் புதுப்பித்தல் சேவைகளை அளிக்க வேண்டியுள்ளதால் இத்தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதாகும். தனிநபர் அல்லது மேசை கணினியில் இயங்கக்கூடிய தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் எளிமையாக இருக்கும். [[பைல்மேக்கர்]] மற்றும் [[மைக்ரோசாப்ட் ஆக்சசு]] ஆகியவை இந்த எளிமையான தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளுக்கு உதாரணமாக கூறலாம்.
 
=== தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை ===
 
ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது மிகவும் சிக்கலான, கடினமான தொழில்நுட்பத்தை கொண்டதாக வளர்ந்துள்ளது. இதை உருவாக்குவதற்கு பல மனிதர்கள் பல ஆண்டுகளாக உழைக்கவேண்டும்.<ref>{{cite web|url=http://www.ibmpressbooks.com/articles/article.asp?p=1163083 |title=Introduction to DB2 |date=3 July 2008 |accessdate=17 March 2013|author=Raul F. Chong, Michael Dang, Dwaine R. Snow, Xiaomei Wang}}. இந்த கட்டுரையில் டிபி2 பதிப்பு 9 -க்கு மட்டுமே 750 மனிதர்கள் 5௵ (வருடம்) உழைத்தார்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது.</ref> இதனால் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பதை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறது என்பது முக்கியமாகிறது. பொதுவான நோக்கத்திற்கு தயாரிக்கப்படும் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு பலவிதமான பயனர்களுக்கு பயன்படவேண்டும் என்பதால் அதன் விடிவத்தில் சிக்கல் அதிகமாகிறது. இருப்பினும் பல்வேறு பயனர்கள் இந்த அமைப்பை பயன்படுத்துவார்கள் என்பதால் அதன் தயாரிப்பு செலவை பலரும் பகிர்ந்துகொள்வார்கள். இதனால் பொதுவான நோக்கத்துடன் உருவாக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள்தான் மிகவும் சிக்கனமானதாகும். ஆனால் பொதுவான நோக்கத்துடன் தயாரிக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள் எல்லா தேவைகளுக்கும் உகந்ததல்ல. சில தேவைகளுக்கு தனித்தன்மை கொண்ட தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் தேவைப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் அமைப்புகளை நாம் குறிப்பிடலாம். மின்னஞ்சல் அமைப்புகள் என்பது மின்னஞ்சல்களை மட்டுமே கையாளக்கூடிய திறமையைக் கொண்டது. இதற்கு தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளின் எல்லா பண்புகளும் தேவையில்லை.
வரிசை 77:
என்கின்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
 
=== 1960 களில் வலம்வரல் தரவுத்தள மேலாண்மை அமைப்பு ===
 
1960 களில் கணினிகளின் வேகமும் ஆற்றலும் பேரளவிற்கு அதிகம் ஆனதால், பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது. 1960 களின் நடுவில் இவ்வாறு பல தரவுத்தளங்கள் சந்தையில் இருந்தது. இவைகளை சீர்படுத்தி ஒரு தரத்தினை உருவாக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. அப்போது இந்த முயற்சியில் [[சார்லெசு பாக்மேன்]] என்பவர் ஈடுபட்டார். சார்லெசு பாக்மென் என்பவர் [[இன்டெக்ரேடட் டேடா சுடோர்]] என்கின்ற ஒரு தரவுத்தளத்தை உருவாக்கியவர். இம்முயற்சியானது [[கோடாசில்]] என்கிற குழுமத்தின் மூலமாக செய்யப்பட்டது. சார்லெசு பாக்மென் அவர்கள் கோடாசில் குழுவிற்குள் ஒரு தரவுத்தளம் சீரமைப்புக் குழுவை உருவாக்கினார். இக்குழுவானது 1971 இல் தனது தரவுத்தள சீர்தரத்தினை பரிந்துறை செய்தது. இத்தரத்தினை 'கோடாசிலின் வழி' என்று அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டது. இவ்வழியைப் பின்பற்றி பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது.
வரிசை 85:
ஐபியெம் நிறுவனம் 1968 இல் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பை உருவாக்கியிருந்தனர். அதன் பெயர் [[ஐயெம்யெசு]] ஆகும். ஐயெம்யெசு என்பது [[அப்போலோ திட்டம்|அப்போலோ]] என்கின்ற திட்டத்திற்காக அமைப்பு/360 என்ற இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். ஐயெம்யெசு என்பது பலவகைகளில் கோடாசில் அமைப்பை போலவே இருந்தது. முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஐயெம்யெசில் தரவுகளை வலைப்பிண்ணல் போல ஒழுங்கமைக்காமல் படிவரியாக ஒழுங்கமைக்கப்பட்டதுதான். எனவேதான் இந்த ஐயெம்யெசை படிவரி தரவுத்தளங்களுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. இதிலும் ஒரு தரவைத் தேடி தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு படியாக வலம் வர வேண்டும். இந்த படிவரி தரவுத்தளம் ஒருவகையான வலம்வரல் தரவுத்தளமாகும்.
 
=== 1970 களில் தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை அமைப்பு ===
 
எட்கார் கோட் என்பவர் [[கலிபோர்னியா|கலிபோர்னியாவில்]] உள்ள [[சானோசே]] என்ற நகரத்தில் ஐபியெம் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தார். இந்த பணிமனை [[வன்தட்டு|வன்தட்டுகளைப்]] பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. இவருக்கு கோடாசில் முறையான வலம்வரல் தரவுப்படிமத்தில் திருப்தியில்லாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எளிமையான தேடுதல் வசதியில்லாமையே. இதனால் உந்தப்பட்டு 1970 ஆம் ஆண்டில் இவர், புதிய தரவுத்தள ஒழுங்கமைப்பு முறையை விவரித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். இந்த முயற்சியின் அடிப்படையில் அவர் எழுதிய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை "பெரிய பகிரப்பட்ட தரவு வங்கிகளுக்கு தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறை" <ref>Codd, E.F. (1970).[http://www.seas.upenn.edu/~zives/03f/cis550/codd.pdf "A Relational Model of Data for Large Shared Data Banks"]. In: ''Communications of the ACM'' 13 (6): 377–387.</ref> என்பதேயாகும்.
வரிசை 99:
கோடாசில் முறையில் ஒரு வினவிற்கு பல தரவு ஏடுகள் விடையாக கிடைக்கும். இதற்காக தரவுகளை வினவும் மென்பொருட்கள் கண்ணி மூலமாக அணைத்து தரவு ஏடுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரே ஒரு தரவு தேவை என்றாலும் இந்த கண்ணி மூலமாகவே தரவுகளைத்தேடி பெற்றுக்கொள்ளவேண்டும். கண்ணி தவிர்க்கமுடியாததாக இருந்தது. தொடர்புசால் முறையிலும் இதே கண்ணிகள் தேவைப்படுகிறது. ஆனால் இப்படி செய்வது சற்று சிரமமாக இருக்கும். இதை தவிர்க்க கோட் ஒரு கணம் சார்ந்த மொழியை சிபாரிசு செய்தார். இந்த மொழியே நாளைடைவில் [[எசுக்கியூயெல்]] ஆக பிரபலமடைந்தது. இந்த மொழியின் ஊடாக தரவுத்தளங்களை பராமரிக்க தேவையான அணைத்து செயல்களையும் செய்ய முடியும் என்பதை [[வரிசை நுண்கணிதம்]] கோட்பாட்டின் உதவியுடன் நிரூபித்தார்.
 
=== தரவுத்தள இயந்திரங்கள் ===
 
1970 மற்றும் 1980 களில் மென்பொருளையும் வன்பொருளையும் ஒன்றிணைத்து [[தரவுத்தள இயந்திரம்|தரவுத்தள இயந்திரங்களை]] அல்லது கருவிகளை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகளுக்கு காரணம் என்னவென்றால் இப்படி ஒன்றிணைப்பதால் தரவுத்தளத்தின் இயங்கு சக்தி குறைந்த விலையில் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே. இதற்கு உதாரணமாக ஐபியெம்மின் [[அமைப்பு/38]], [[டெர்ராடேடா|டெர்ராடேடாவின்]] ஆரம்ப முயற்சிகள், மற்றும் [[பிரிட்டான் லீ|பிரிட்டான் லீயின்]] தரவுத்தள இயந்திரம்.
வரிசை 105:
தரவுத்தளத்தின் சக்தியை அதிகரிக்க இந்த காலத்தில் வன்பொருளின் உதவியை நாடினார்கள். இந்த வகையான இன்னொரு முயற்சியே வன்தட்டிலேயே தரவுகளைத்தேடுவதற்காக பண்புகளை புகுத்துவது. இதற்கு உதாரணம் [[ஐசியெல்|ஐசியெல்லின்]] [[சி. ஏ. எஃப். எசு]] வேகப்படுத்தியாகும். ஆனால் காலப்போக்கில் இம்முயற்சிகள் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் இரண்டாக கூறலாம். ஒன்று இப்படி தனித்துவமான, ஒரு குறிப்பிட்ட பிரயோகத்திற்காக தயாரிக்கப்படும் கணினிகள் விலை அதிகமாகவே இருந்தது. இரண்டு, இத்தனித்துவமாக கணினிகன் சக்திகள் பொதுவாக கிடைக்கும் கணினிகளைவிட சக்திவாய்ந்ததாக இருக்கவில்லை. எனவே இப்பொழுதெல்லாம் தரவுத்தளங்கள் பொதுவாக கிடைக்கும் கணினியில்தான் இயங்குகிறது. மேலும் பொதுப்பயனுக்காக தயாரிக்கப்படும் வன்தட்டுகளே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இருப்பினும் இன்றும் தரவுத்தள இயந்திரங்கள் சில சந்தையில் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக [[ஓரகில்|ஓரகில்லின்]] [[எக்சாடேடா]] மற்றும் [[நெட்டிசா]] நிறுவனத்தின் தயாரிப்புகளையும் குறிப்பிடலாம்.
 
=== 1970 களின் முடிவில் எசுக்கியூயெல் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் ===
 
கோட்டின் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு ஐபியெம் நிறுவனம் [[அமைப்பு ர]] என்கின்ற ஒரு முன்வடிவத்தை 1970 களின் ஆரம்பத்தில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முன்வடிவம் 1975 இல் தயாராகிவிட்டது. இதற்கு பிறகு ஒரு தரவு ஏட்டினை பல அட்டவணைகளில் பிரித்து சேமிப்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்தன. இப்படி செய்வதால், நாம் ஏற்கனவே கண்டது போல, வன்தட்டில் இடம் சேமிக்கப்படும். தேவையிருந்தால் மட்டுமே ஒரு தரவுவரிசை தரவுத்தளத்தில் இருக்கும். இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. 1970 களின் முடிவில் பலப் பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய அமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த காலத்தில் தான் எசுக்கியூயெல் வினவு மொழியானது சீர்தரம் பெற்றது. கோட்டின் யோசனைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல் இவை கோடாசில் முறையை விட சக்திவாய்ந்த்து என்றும் அறியப்பட்டது. இதை உணர்ந்த ஐபியெம் அடுத்த தலைமுறை தரவுத்தளம் மேலாண்மை அமைப்பான [[டிபி2]] வை உருவாக்க முயற்சிகளை ஆரம்பித்தது.
வரிசை 117:
1976 இல் [[உருப்படி-தொடர்புசால் தரவுப்படிமம்]] புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிது காலத்திற்கு பிரபலமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதன் பண்புகளை தொடர்புசால் தரவுப்படிமத்தில் சேர்க்கப்பட்டன. இதனால் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
 
=== 1980 களில் மேசைக் கணினி தரவுத்தளங்கள் ===
 
1980 களில் [[மேசைக் கணினி]] மிகவும் பிரபலமடைந்தது. இதை மேசைக் கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம். இந்த புதிய கணினிகள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது இரண்டு வகையான மென்பொருட்கள். ஒன்று விரிவுத்தாள் மென்பொருளான லோடசு 1, 2, 3 ஆகும். இன்னொன்று தரவுத்தளம் மென்பொருளான [[டிபேசு]]. டிபேசு மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. இதனை உருவாக்கியவர் [[சி. வேய்னே இராட்கிலிப்]] ஆவார். அவர் இதைப்பற்றி கூறியதாவது: "டிபேசு மற்ற கணினி மொழிகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இது பேசிக், சி, போர்ட்ரான் மற்றும் கோபால் ஆகிய மொழிகளுடன் ஒப்பிடும் போது இதை நம்மால் உணரமுடியும். டிபேசில் பயனர்களுக்கு தேவையான பல செயல்களை ஏற்கனவே செய்து முடித்தாயிற்று. தரவுகளைக் கையாள்வதற்கு தேவையான பல செயல்களை டிபேசே பார்த்துக்கொள்கிறது. பயனர்கள் தரவுகளைக் கையாள்வதற்காக கோப்புகளை திறப்பது, மூடுவது, படிப்பது, அதிலிருக்கும் இடத்தினை மேலாண்மை செய்வது ஆகிய எந்த ஒரு விசயத்திலும் கவணம் செலுத்தத்தேவையில்லை. இதை அணைத்தையும் டிபேசு பார்த்துக்கொள்ளும்." <ref>[http://www.foxprohistory.org/interview_wayne_ratliff.htm Interview with Wayne Ratliff]. The FoxPro History. Retrieved on 2013-07-12.</ref> 1980 மற்றும் 1990 இன் ஆரம்பத்திலும், மிகவும் அதிகமாக விற்பனையான மென்பொருள் டிபேசு ஆகும்.
 
=== 1980 களில் பொருள் தரவுத்தளங்கள் ===
 
1980 களில் பொருள் சார்ந்த நிரலாக்கம் பிரபலமடைந்தது. இதனால் தரவுத்தளங்களில் சேமித்திருக்கும் தரவுகளைக் கையாளும் முறையும் சற்று மாறியது. மென்பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை ஒரு பொருளாக அணுக முற்றபட்டனர். உதாரணமாக ஒரு நபரை பொருளாகவும், அவரைப்பற்றிய தகவல்களின் அந்த பொருளின் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. தரவுகளை வெறும் அட்டவணையாகவும் அதிலுள்ள வரிசையாகவும் பாவிக்காமல், ஒவ்வொரு வரிசையையும் ஒரு பொருளாகவும், அதிலுள்ள ஒவ்வொரு தகவல்களும் அதன் பண்புகளாகவும் பாவிக்கப்படுகிறது. இதனால் தரவுகள் அட்டவணைக்கும் அதிலுள்ள நெடுவரிசைக்கும் சொந்தமானது என்று பார்க்காமல், அவை அணைத்தும் அதனதன் பொருளிற்கு சொந்தமா பார்க்கப்படுகிறது.
வரிசை 127:
எனவே தரவுகள் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒரு அட்டவணையாகவும், வரிசையாகவும், மற்றும் நெடுவரியையாகவும் பார்க்கப்படுகிறது. இன்னொன்று பொருளாகவும் அதன் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல் [[பொருள் - தொடர்பு பொருத்தமின்மை]] என்று அழைக்கப்படுகிறது. பொருள் தரவுத்தளங்கள் மற்றும் பொருள்-தொடர்புசால் தரவுத்தளங்கள் ஆகியவை இந்த சிக்கலை தீர்க்க அதன் வினவு மொழிகளை மாற்றி அமைத்தனர். இந்த சிக்கலைத் தீர்பதற்கு இன்னொரு முயற்சியே பொருள்-தொடர்பு மேப்பிங் ஆகும்.
 
=== 2000 களில் நோயெசுக்கியூயெல் மற்றும் புதிய எசுக்கியூயெல் தரவுத்தளங்கள் ===
 
தொடர்புசால் தரவுத்தளங்களுக்கு பிறகு வந்த வேறு வகையான தரவுத்தளங்கள் நோயெசுக்கியூயெல் என்று அறியப்படுகிறது. இதற்கு உதாரணமாக [[சாவி-மதிப்பு கிடங்கு|சாவி-மதிப்பு கிடங்குகள்]] மற்றும் [[கோப்பு திசையுற்ற தரவுத்தளம்|கோப்பு திசையுற்ற தரவுத்தளங்கள்]]. [[எக்செம்மல் தரவுத்தளம்|எக்செம்மல் தரவுத்தளங்கள்]] என்பது ஒரு வகையான கோப்பு திசையுற்ற தரவுத்தளமாகும். இத்தரவுத்தளத்தில் எக்செம்மல் கோப்பின் பண்புகளைக்கொண்டு தரவுகளை வினவலாம்.
வரிசை 149:
 
== தரவுத்தள வடிவமைப்பும் படிமங்களும் ==
=== தரவுத்தள படிமங்கள் ===
=== பார்வைகள் ===
== தரவுத்தள மொழிகள் ==
 
"https://tamilar.wiki/w/தரவுத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது