தீக்சாபூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
No edit summary
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{coord|21|7|41|N|79|4|1|E|type:landmark}}
<div style="float: right;"> {{#display_map:21.128056000000008, 79.06685816931324| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>
{{Infobox building
{{Infobox building
| building_name = தீக்சாபூமி
| building_name = தீக்சாபூமி
வரிசை 4: வரிசை 6:
| former_names =
| former_names =
| alternate_names =
| alternate_names =
| image = Diksha Bhumi.jpg
| image = [[File:Diksha Bhumi.jpg| 350px]]
| caption = தீக்சாபூமி
| caption = தீக்சாபூமி
| building_type = சமய மற்றும் வரலாற்று கட்டிடம்.
| building_type = சமய மற்றும் வரலாற்று கட்டிடம்.
வரிசை 17: வரிசை 19:
| current_tenants =
| current_tenants =
| landlord =
| landlord =
| coordinates = {{coord|21|7|41|N|79|4|1|E|type:landmark}}
| start_date = சூலை 1978
| start_date = சூலை 1978
| completion_date =
| completion_date =

20:39, 22 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

21°7′41″N 79°4′1″E / 21.12806°N 79.06694°E / 21.12806; 79.06694
வரைபடத்தை ஏற்றுகிறது....
தீக்சாபூமி
படிமம்:Diksha Bhumi.jpg
தீக்சாபூமி
பொதுவான தகவல்கள்
வகைசமய மற்றும் வரலாற்று கட்டிடம்.
கட்டிடக்கலை பாணிதூபி
இடம்நாக்பூர்,மகாராட்டிரம் , இந்தியா
முகவரிசோகமேளா விடுதி அருகே, மத்திய நாக்பூர்[1]
கட்டுமான ஆரம்பம்சூலை 1978
துவக்கம்திசம்பர் 18, 2001
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)சியோ டான் மல்

இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் அமைந்துள்ள நவயான பௌத்தத்தின் புனித நினைவுச்சின்னமாகும். இங்கு பி.ஆர். அம்பேத்கர் தனது 400,000 சீடர்களுடன்,[2] முக்கியமாக தலித்துகளுடன், 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று அசோக விஜய தசமி நாளில் புத்த மதத்தைத் தழுவினார்.[3] இந்தியாவில் பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியில் அம்பேத்கர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். மேலும் இதுபோன்ற பலர் மதமாற்றங்களுக்கு உட்பட உத்வேகம் அளித்தார்.[4][5] இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. [6].

தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.

தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பூமி நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் இடமாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாகப் போற்றப்படும் இரு இடங்களில் இது ஒன்று. மற்றொன்று மும்பையிலுள்ள சைதன்யபூமி ஆகும்.

இங்குள்ள பௌத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

படிமம்:Twenty-two vows of Buddhism by Dr. Ambedkar at Deekshabhoomi.jpg
நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி

நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Keer, Dhananjay. Dr. Ambedkar: Life and Mission (in Marathi).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. This was Ambedkar's own figure given by him in a letter to Devapriya Valishinha dated 30 October 1956. The Maha Bodhi Vol. 65, p.226, quoted in Dr. Ambedkar and Buddhism பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம் by Sangharakshita.
  3. "The people and their culture". Labor Law and Practices in India (in ஆங்கிலம்). United States Department of Labor. 1966. p. 13. {{cite book}}: Text "U.S. Department of Labor, Bureau of Labor Statistics" ignored (help)
  4. Ramesh, Randeep (14 October 2006). "Untouchables embrace Buddha to escape oppression". The Guardian (Hyderabad). https://www.theguardian.com/world/2006/oct/14/india.randeepramesh. 
  5. Amore, Roy C. (2019-09-17). Religion and Politics: New Developments Worldwide (in ஆங்கிலம்). MDPI. ISBN 978-3-03921-429-7.
  6. ஒடுக்குமுறையை எதிர்த்து தீண்டத்தகாதவர்கள் பௌத்த சமயத்தைத் தழுவினர்
  • Special issue of Lokrajya, the publication of Govt. of Maharashtra on silver jubilee of 1956 ceremony.
  • Deeksha, Special issue of Daily Sakaal in October 2005

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=தீக்சாபூமி&oldid=402661" இலிருந்து மீள்விக்கப்பட்டது