நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →இணைய இணைப்புகள்: clean up using AWB |
||
வரிசை 1:
[[படிமம்:US long grain rice.jpg|thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர்]]
'''நெல்''' அல்லது '''அரிசி'''
== வரலாறு ==
வரிசை 18:
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, சார்சியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளைத் தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள் நாட்டுப் போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.
=== சங்கப்பாடல்களில் ===
சங்க இலக்கியங்களில் நெல் பற்றிய பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன:
* நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் <ref>வெண்ணெல் அரிநர் தண்ணுமை மலைபடுகடாம் - அடி 471</ref> என்பர்.
வரிசை 24:
*நெல் என்னும் சொல்லானது நேரடியாக 45 இடங்களில் சங்க இலக்கியப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.நெல்லின் உயரிய மதிப்பு (புனிதத்தன்மை) முதலான பொருண்மைகளிலும் பல பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref>சங்க இலக்கியச் சொல்லடைவு</ref>
=== பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள் ===
[[படிமம்:Palaivananathar.jpg|thumb|200px|திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்]]
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.<ref name="dinamanisunday">http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/01/12/திருக்கோயில்-நெற்களஞ்சியங/article1996452.ece</ref>
வரிசை 33:
இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.<ref>பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50</ref>
=== தமிழக பாரம்பரிய நெல் வகைகள் ===
* வாடன் சம்பா
* முடுவு முழுங்கி
வரிசை 61:
* புழுங்கல் அரிசி
=== பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் ===
* [[நமது நெல்லைக் காப்போம்]] அமைப்பு [[பாரம்பரிய நெல்]] வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 27 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
* உளுந்தூர்பேட்டை, சிரீசாரதா ஆசிரமம், ‘அட்சய கிருசி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.<ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2013</ref><ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2014</ref><ref>http://gttaagri.relier.in/இயற்கை-விவசாயம்/பாரம்பரிய-நெல்லைக்-காக்க/</ref><ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97146</ref>
வரிசை 74:
உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 [[கோடி]] டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் [[இந்தோனேசியா]] (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.
உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், [[தாய்லாந்து]] (26%), [[வியட்நாம்]] (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. [[இந்தோனேசியா]], [[வங்கதேசம்]], [[பிரேசில்]],[[இந்தியா]] ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் [[தஞ்சாவூர்]],[[திருவாரூர்]],[[நாகப்பட்டிணம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]
[[படிமம்:RiceYield.png|thumb|right|உலக அரிசி உற்பத்தி]]
வரிசை 108:
== நெல் சாகுபடி ==
[[படிமம்:A farmer.jpg|200px|thumb|right|
உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.
வரிசை 116:
நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும்.
=== விதைத்தல், நடுதல் ===
[[படிமம்:Ploughing.ogv|thumb|right|210px|நிகழ்படமாக, '''பரம்படித்தலைப்''' பாரீர்.]]
[[படிமம்:A grain paddy, tamil.jpg|thumb|right|150px|நெல்மணி]]
வரிசை 124:
நீராதாரத்தைப் பொருத்து நெல் ''''உலர்நில முறை'''' அல்லது ''''நீர்நில முறை'''' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. ந்நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது.
=== நாற்றங்கால் அமைத்தல் ===
நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு
=== விதை தேர்வு செய்தல் ===
பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது. பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
=== நடவு வயல் தயாரிப்பு ===
நாற்றங்காலில் 3 – 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. நாற்று வளர்ச்சியை பொறுத்து நாற்றாங்காலில் இருபது நாட்களிலிருந்து அதிகபட்சமாக 35 நாட்கள் வரை நாற்று வளர்க்கப்படுகிறது. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கைகளாலோ களைகள் நீக்கப்படுகின்றன. தமிழக கிராமப்புறங்களில் நடவுப்பணி காலத்தில் அதற்கென உள்ள மக்களால் நடவு மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவு இயந்திரங்கள் சில இடங்களில் நல்ல பயனை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிக்கு விவசயக்கூலிகளை வைத்தே நடவு மேற்கொள்கின்றனர். இயந்திரங்களின் பயன்பாடு தமிழகத்தில் இதுவரை பரவலாகவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடவு சமயத்தில் [[குலவை]] இட்டு நடவுப்பணிகளை தொடங்குவது வழக்கத்தில் உள்ளது.
வரிசை 145:
நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[இந்தியா]]வில் நீளமான, மணமுடைய '[[பாஸ்மதி]]' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. [[தென்னிந்தியா]]வில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. ஈரான் நாட்டில், ஹஷேமியுடனும் மிகவும் பிரபலமான நெல் இரகங்களை ஒன்றாகும்.<ref name="pazuki">{{cite journal |last=Pazuki |first=Arman |last2=Sohani |first2=Mehdi |lastauthoramp=yes |year=2013 |title= Phenotypic evaluation of scutellum-derived calluses in ‘Indica’ rice cultivars |url= http://aas.bf.uni-lj.si/september2013/08Pazuki.pdf |format=PDF |journal= Acta Agriculturae Slovenica |volume=101 |issue=2 |pages=239–247 |doi=10.2478/acas-2013-0020 |accessdate=February 2, 2014}}</ref>
=== புழுங்கல் அரிசி ===
தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் '[[இட்லி]]' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது.
=== பச்சரிசி ===
அறுவடையான நெல்லை,வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைக்கும் அரிசியைப் பச்சரிசி என்பர்.இவ்வித அரிசியை விரும்பி உண்ணுவோரும் உண்டு. [[செரிமானம்|செறிமானத்திறனில்]] இடைஞ்சல் வருவதாகச் சொல்லி, பலர் உண்ணுவதில்லை.
=== மல்லிகை அரிசி ===
தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீள அரிசியில் [[அமைலோபெக்டின்]] குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது.
=== மணமுடைய அரிசி ===
மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும்.
வரிசை 218:
[[பகுப்பு:நெல்| ]]
[[பகுப்பு:
[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வேளாண்மை]]
| |||