நைட்ரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளம்: Reverted |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளம்: Manual revert |
||
வரிசை 15:
நைட்ரசன் சேர்மங்கள் மிகநீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. [[எரோடோட்டசு]] என்ற கிரேக்க வரலாற்றாளர் காலத்திலயே அமோனியம் குளோரைடு அறியப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் இவை நன்கு அறியப்பட்டிருந்தன. இரசவாதிகள் நைட்ரிக் அமிலத்தைப்பற்றியும் இதர அமோனியம் உப்புகள் நைட்ரேட்டு உப்புகள் பற்றியும் அறிந்திருந்தனர். நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலங்களின் கலவையான இராச திராவகம் பற்றியும் அறியப்பட்டிருந்தது. தங்கத்தை கரைக்கப் பயன்பட்டதால் இதை வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைத்தனர் <ref name=Greenwood406/>.
=== கண்டுபிடிப்பு ===
[[இசுக்கொட்லாந்து|இசுக்காட்லாந்து]] நாட்டு மருத்துவ அறிஞரான [[டேனியல் ரூதர்போர்டு]] என்பவர் 1772 ஆம் ஆண்டில் இவ்வாயுவை முதன்முதலில் கண்டறிந்து தனிமைப்படுத்தினார்<ref>Rutherford, Daniel (1772) "[https://books.google.com/books?id=JxUUAAAAQAAJ&printsec=frontcover&hl=en&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false Dissertatio Inauguralis de aere fixo, aut mephitico]" (Inaugural dissertation on the air [called] fixed or mephitic), M.D. dissertation, University of Edinburgh, Scotland. English translation: {{cite journal | first = Leonard | last = Dobbin | title = Daniel Rutherford's inaugural dissertation |year = 1935 | journal = Journal of Chemical Education | volume = 12 | issue = 8 | pages = 370–375 |doi = 10.1021/ed012p370}}</ref><ref name="Weeks">{{cite journal | doi = 10.1021/ed009p215 | title = The discovery of the elements. IV. Three important gases |year = 1932 | last1 = Weeks | first1 = Mary Elvira |authorlink1=Mary Elvira Weeks| journal = Journal of Chemical Education | volume = 9 | issue = 2 | page = 215|bibcode = 1932JChEd...9..215W }}</ref>. கார்பனீராக்சைடு வாயுவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்<ref>Aaron J. Ihde, The Development of Modern Chemistry, New York 1964.</ref>.
வரிசை 29:
== பண்புகள் ==
=== இயற்பியல் பண்புகள் ===
நைட்ரசன் நிறம்,மணம் சுவையற்ற ஒரு வளிமம் ஆகும். இது காற்றை விட மிகச்சிறிதளவே இலேசானது. நீரில் மிகச் சிறிதளவே கரைகிறது. நச்சுத் தன்மையற்றது. காற்றில் எரிவதில்லை. எரிதலின்றி வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இல்லை. சுண்ணாம்பு நீரைப் பால்போல வெண்மையாக்குவதில்லை. இதன் அணு எண் 7. [[அணு நிறை]] 14.007. [[அடர்த்தி]] 1.165 கிகி /கமீ. இதன் [[உறை நிலை]]யும் [[கொதி நிலை]]யும் முறையே 70.25 ,77.31 K ஆகும்.
=== வேதியியல் பண்புகள் ===
மிகவும் வலுவான மூன்று எதிர்மின்னிப் பிணைப்பு காரணமாக நைதரசன் வாயு (N<sub>2</sub>) வேதி வினைகளில் மந்தமாக ஈடுபடுகிறது. சற்று உயர்வெப்ப நிலையில் இது [[மக்னீசியம்]], [[இலித்தியம்]], [[கால்சியம்]] போன்ற பல உலோகங்களுடன் கூடி நைட்ரைடுகளை உண்டாக்குகின்றது. அது போலவே அலோகங்களான [[போரான்]], [[சிலிக்கன்|சிலிக்கனுடன்]] வினை யாற்றுகின்றது. இன்னும் கூடுதலான வெப்ப நிலையில் நைட்ரசன் ஆக்சிசனுடன் நேரடியாகக் கூடி [[அமோனியா]] மற்றும் நைட்ரிக் ஆக்சைடை உண்டாக்குகின்றது. கார்பன் மின் வில் லின் (''Carbon arc'')சுடரொளியில் நைட்ரசனுடன் கூடுகிறது. [[கந்தகம்|கந்தகமும்]], [[ஆலசன்]]களும் எந்த வெப்ப நிலையிலும் நைட்ரசனுடன் கூடுவதில்லை. துருவ ஒளி என்பது சூரியனிலிருந்து வீசப்படும் மின்னேற்றம் கொண்ட துகள்கள், அயனிகள் வளி மண்டலத்தை ஊடுருவும் போது புவி காந்தப் புலத்தோடு இடையீட்டுச் செயல் புரிந்து வெளிப்படும் ஒளியாகும். நைட்ரசன் மூலக்கூறு ஆரஞ்சு-சிவப்பு ,நீலம் -பச்சை, நீலம்- கருநீலம் மற்றும் ஊதா போன்ற வண்ணங்களைத் துருவ ஒளியில் தருகிறது.
வரிசை 50:
[[ஹேபர் செயல்முறை|ஏபர் செயல்முறை]] நைட்ரசனின் வினைகளைப் பயன்படுத்தும் முக்கிய தொழிற் செயற்பாடாகும். {{chem|N|2}} மற்றும் {{chem|H|2}} என்பவற்றை இரும்பு ஆக்சைடு ஊக்கிக்கு மேல் 500 °C வெப்பநிலையிலும் 200 மடங்கு வளிமண்டல அழுத்தத்தில் வினைபுரியச் செய்தால் அமோனியா வாயு உருவாக்கப்படுகின்றது. இவ்வாயு உர உற்பத்தியில் மிகவும் முக்கியமானதாகும்.
=== அணுவியல் பண்புகள் ===
[[File:Neon orbitals.png|thumb|upright=1.6|right|நைட்ரசன் அணுவை ஆக்ரமித்துள்ள ஆர்பிட்டால்களின் உருவவடிவங்கள். ஒவ்வொரு மண்டலத்தின் அலை இயக்கத்தையும் இரண்டு வண்ணங்கள் காட்டுகின்றன. இடமிருந்து வலமாக 1s, 2s (உட்புற கட்டமைப்பைக் காட்டும் வெட்டப்பட்ட பகுதி), 2p<sub>''x''</sub>, 2p<sub>''y''</sub>, 2p<sub>''z''</sub>.]]
வரிசை 63:
செங்குத்தாக இடம்பெற்றுள்ள அண்டைய தனிமங்களுடன் இப்பண்பு ஒத்துப்போவதிற்கு சாத்தியமில்லை. இதனால் நைட்ரசன் ஆக்சைடுகள், நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள், நைட்ரோ, நைட்ரோசோ, அசோ, ஈரசோ சேர்மங்கள், அசைடுகள், சயனேட்டுகள், தயோசயனேட்டுகள், இமினோ வழிப்பொருட்கள் போன்றவை பாசுபரசு, ஆர்சனிக், ஆண்டிமனி அல்லது பிசுமத்தின் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. இதேமுறையினால் பாசுபரசு ஆக்சோ அமிலங்களும் நைட்ரசனுடன் இயைந்திருப்பதில்லை <ref name=Greenwood412/>.
=== ஐசோடோப்புகள் ===
[[File:NuclideMap C-F.png|thumb|right|upright=2.3|நைட்ரசன் உள்ளிட்ட கார்பன் முதல் புளோரின் வரையிலான உட்கருக்களின் அட்டவணை. ஆரஞ்சு நிறம் புரோட்டான் உமிழ்வைக் குறிக்கிறது. (உட்கருவுக்கு வெளியே புரோட்டான் இழப்புக்கோடு);இளஞ்சிவப்பு நிறம் பாசிட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது. (தலைகீழ் பீட்டா சிதைவு); கருப்பு நிறம் நிலையான உட்கருவைக் காட்டுகிறது; நீல நிறம் எலக்ட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது (பீட்டா சிதைவு); ஊதா நிறம் நியூட்ரான் உமிழ்வைக் காட்டுகிறது. (உட்கருவுக்கு வெளியே நியூட்ரான் இழப்புக் கோடு).செங்குத்து அச்சில் புரோட்டான் எண்ணிக்கை அதிகரிப்பும், கிடைமட்ட அச்சில் நியூட்ரான் எண் வலதுபக்கமும் செல்கிறது.]]
வரிசை 81:
== நைட்ரசன் வேதியியலும் சேர்மங்களும் ==
=== புறவேற்றுமை வடிவங்கள் ===
அணு நைட்ரசன் என்றும் அழைக்கப்படும் வீரிய நைட்ரசன், மூவியங்குறுப்பாக மூன்று இணையில்லா எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் மிகவும் வினைத்திறன் மிக்கதாக உள்ளது, கட்டற்ற நைட்ரசன் அணுக்கள் எளிதாக பல தனிமங்களுடன் வினைபுரிந்து நைட்ரைடுகளை உருவாக்குகின்றன. கட்டற்ற இரண்டு நைட்ரசன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிளர்வு நிலை N2 மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இம்மோதலின் போது அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது. கார்பனீராக்சைடு, தண்ணீர் போன்றவற்றில் சமபிளவு வினையில் CO மற்றும் O அல்லது OH மற்றும் H இயங்குறுப்புகள் தோன்றும் வினையை இது ஒத்துள்ளது. 0.1-2 மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்தில் நைட்ரசன் வாயு வழியாக மின்சாரத்தைச் செலுத்தும் போது மென்மஞ்சள் நிற ஒளிர்வுடன் அணு நைட்ரசன் உற்பத்தியாகிறது. மின்சாரம் செலுத்துவது நிறுத்திய பின்பும் பல நிமிடங்களுக்குப் பிறகு இவ்வொளிர்வு மெல்ல மறைகிறது <ref name=Greenwood412>Greenwood and Earnshaw, pp. 412–6</ref>.
வரிசை 91:
வளிமண்டல அழுத்தத்தில் மூலக்கூற்று நைட்ரசன் 77 கெல்வின் வெப்பநிலையில் (-195.79 பாகை செல்சியசு) திரவமாக சுருங்குகிறது. திண்ம நைட்ரஜன் இரு வேற்றுருக்களைக் கொண்டுள்ளது. அவற்றை ஆல்பா ,பீட்டா நைட்ரஜன் என்பர். 63 கெல்வின் வெப்பநிலையில் (-210.01 பாகை செல்சியசு) பீட்டா நைட்ரசன் என்ற புறவேற்றுமை வடிவத்தை அடைகிறது<ref name="Gray" >{{cite book|last=Gray|first=Theodore|title=The Elements: A Visual Exploration of Every Known Atom in the Universe|date=2009|publisher=Black Dog & Leventhal Publishers|location=New York|isbn=978-1-57912-814-2}}</ref>. 35.4 கெல்வின் வெப்பநிலையில் (−237.6 ° செல்சியசு) மற்றொரு புறவேற்றுமை வடிவமான ஆல்பா நைட்ரசனாக படிகமாகிறது<ref name=schu>{{cite journal|last1=Schuch|first1=A. F.|last2=Mills|first2=R. L.|title=Crystal Structures of the Three Modifications of Nitrogen 14 and Nitrogen 15 at High Pressure|journal=The Journal of Chemical Physics|date=1970|volume=52|issue=12|pages=6000–6008|doi=10.1063/1.1672899|bibcode=1970JChPh..52.6000S}}</ref>.
திரவ நைட்ரஜன், தோற்றத்தில் தண்ணீரைப் போலவே ஆனால் தண்ணீரின் அடர்த்தியில் 80.8% அடர்த்தியைக் கொண்டிருக்கும் நிறமற்ற திரவமான திரவ நைட்ரசன் ஒரு பொதுவான உறைகலவை ஆகும். கொதி நிலையில் திரவ நைட்ரசனின் அடர்த்தி 0.808 கிராம்/மில்லி ஆகும்<ref>{{Cite journal | last1 = Iancu | first1 = C. V. | last2 = Wright | first2 = E. R. | last3 = Heymann | first3 = J. B. | last4 = Jensen | first4 = G. J. | title = A comparison of liquid nitrogen and liquid helium as cryogens for electron cryotomography | doi = 10.1016/j.jsb.2005.12.004 | journal = Journal of Structural Biology | volume = 153 | issue = 3 | pages = 231–240 | year = 2006 | pmid = 16427786| pmc = }}</ref>. திடநைட்ரசன் பல படிகவியல் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. [[புளூட்டோ]]வின் <ref>{{cite web|title=Flowing nitrogen ice glaciers seen on surface of Pluto after New Horizons flyby|url=http://www.abc.net.au/news/2015-07-25/flowing-nitrogen-ice-glaciers-seen-on-surface-of-pluto/6647636|website=ABC|accessdate=6 October 2015|date=25 July 2015}}</ref> மேற்பரப்பிலும் டிரைட்டன் போன்ற சூரியக் குடும்பத்தின் புறவெளி நிலவுகளிலும் <ref>{{cite encyclopedia|title = Encyclopedia of the Solar System|chapter = Triton|last1 = McKinnon|first1 = William B.|last2 = Kirk|first2 = Randolph L.|publisher = [[எல்செவியர்]]|date = 2014|editor1-first = Tilman|editor1-last = Spohn|editor2-first = Doris|editor2-last = Breuer|editor3-first = Torrence|editor3-last = Johnson|edition = 3rd|location = Amsterdam; Boston|isbn = 978-0-12-416034-7|pages = 861–882|chapterurl = https://books.google.com/books?id=0bEMAwAAQBAJ&pg=PA861}}</ref> திடநைட்ரசன் காணப்படுகிறது. குறைவான வெப்பநிலையிலும் கூட திட நைட்ரசன் ஆவியாகும் நிலையில் உள்ள இது பதங்கமாகி வளிமண்டலத்தை உருவாக்குகிறது அல்லது நைட்ரஜன் பனியாக மீண்டும் ஒடுக்கமடைகிறது. இது மிக பலவீனமாகவும் வெப்பநீரூற்று வடிவிலும் பாய்கிறது. துருவப்பனி முகடு மண்டல டிரைட்டன் வெந்நீர் ஊற்றிலிருந்து நைட்ரசன் வாயு வருகிறது <ref>{{cite web |url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Triton |publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]] |accessdate=September 21, 2007 |title=Neptune: Moons: Triton |archiveurl=https://www.webcitation.org/62D2mVxWX?url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Triton |archivedate=அக்டோபர் 5, 2011 |url-status=dead |df= }}</ref>.
=== டைநைட்ரசன் அணைவுச் சேர்மங்கள் ===
[[File:RuA5N2.png|thumb|right| முதலாவதாக கண்டறியப்பட்ட டைநைட்ரசன் அணைவுச் சேர்மத்தின், [Ru(NH3)5(N2)]2+(பென்டமின்(டைநைட்ரசன்)ருத்தேனியம்(II)), கட்டமைப்பு]]
வரிசை 109:
உலோக அணைவுக்குள் அரிதாக N≡N பிணைப்பு நேரடியாக உருவாகலாம். உதாரணமாக, ஒருங்கிணைந்த அமோனியா (NH3) நேரடியாக நைட்ரசு அமிலத்துடன் (HNO2) உடன் வினைபுரிதலைக் குறிப்பிடலாம். ஆனால் இவ்வினை பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு வினையல்ல. பெரும்பால டை நைட்ரசன் அணைவுகள் வெண்மை-மஞ்சள்-ஆரஞ்சு-சிவப்பு-பழுப்பு என்ற எல்லைக்குள் காணப்படுகின்றன. சில அணைவுச் சேர்மங்கள் விதிவிலக்காக நீலநிறத்திலும் [{Ti(η5-C5H5)2}2-(N2)] காணப்படுகின்றன<ref name=Greenwood412/>.
=== நைட்ரைடுகள், அசைடுகள் மற்றும் நைட்ரிடோ அணைவுகள் ===
[[ஈலியம்]] [[நியான்]], [[ஆர்கான்]] முதலான முதல் மூன்று மந்த வாயுக்கள், பிசுமத்தை அடுத்துள்ள குறுகிய அரைவாழ்வுக் கால ஆயுள் கொண்ட தனிமங்கள் தவிர, கிட்டத்தட்ட தனிம வரிசை அட்டவணையிலுள்ள எல்லா தனிமங்களுடனும், நைட்ரசன் வினைபுரிகிறது. இவ்வினைகளால் அளப்பரிய வெவ்வேறு பண்புகளும் பயன்பாடுகளும் கொண்ட இரட்டைச் சேர்மங்கள் உருவாகின்றன <ref name=Greenwood412/>. பல இரட்டைச் சேர்மங்கள் அறியப்பட்டாலும் நைட்ரசன் ஐதரைடுகள், ஆக்சைடுகள் மற்றும் புளோரைடுகள் விதிவிலக்காகும். பல தனிமங்களுடன் பலவிகிதவியல் அளவுகளிலும் நைட்ரசன் இணைந்துள்ளது. (உதாரணம்: 9.2 < x < 25.3 அளவுகளுக்காக MnN, Mn6N5, Mn3N2, Mn2N, Mn4N மற்றும் MnxN). மேலும் இவற்றை உப்பு போன்றவை என்றும் வைரம் போன்றவை என்றும் வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக உலோகங்கள் நைட்ரசனுடன் அல்லது அமோனியாவுடன் நேரடியாக வினைபுரிவதால் இவ்வகை சேர்மங்கள் உருவாகின்றன. உலோக அமைடுகளின் வெப்பச் சிதைவு வினையினாலும் இவை உருவாகின்றன :<ref name=Greenwood417>Greenwood and Earnshaw, pp. 417–20</ref>
வரிசை 127:
ஈனிகளில் நைட்ரைடு எதிர்மின் அயனியே (N3−)வலிமையான π கொடையாளி ஆகும். (O2−) நைட்ரைடுக்கு அடுத்த வலிமையான ஈனியாகும். நைட்ரிடோ அணைவுச் சேர்மங்கள் பொதுவாக அசைடுகளை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி அல்லது அமோனியாவை புரோட்டான் நீக்கம் செய்து தயாரிக்கப்படுகின்றன. இறுதியில் உள்ள {≡N}3− குழுவில் இவை ஈடுபடுகின்றன. நேரியல் அசைடு எதிர்மின் அயனி நைட்ரசு ஆக்சைடும் கார்பனீராக்சைடு, சயனேட்டுகள் போன்றவற்றுடன் ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கை கொண்டு அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. கார்பனேட்டு, நைட்ரேட்டுகளுடன் ஒத்த எண்ணிக்கை கொண்டுள்ள நைட்ரைடுகளும் அறியப்படுகின்றன<ref name=Greenwood417/>.
=== ஐதரைடுகள் ===
[[File:Nitrogen electrode potentials.svg|thumb|right|upright=2.3|நைட்ரசன் கொண்டுள்ள இனங்களின் செந்தர ஒடுக்கத்திறன்; மேல் படம் pH 0; இல் ஒடுக்கத்திறனைக் காட்டுகிறது. கீழ்படம் pH 14 இல் ஒடுக்கத்திறனைக் காட்டுகிறது..<ref name=Greenwood434>Greenwood and Earnshaw, pp. 434–8</ref>]]
வரிசை 143:
1890 ஆம் ஆண்டு நீரிய ஐதரசீனை நைட்ரசு அமிலம் மூலமாக ஆக்சிசனேற்றம் செய்து முதன்முதலில் ஐதரசன் அசைடு தயாரிக்கப்பட்டது. இது வெடிக்கும் தன்மை கொண்ட சேர்மமாகும். நீர்த்த நிலையில் கூட இச்சேர்மம் அபாயகரமானது. தாங்க முடியாத எரிச்சலூட்டும் மணமும் கொல்லும் நச்சுத்தன்மையும் இதன் குணங்களாகும். அசைடு எதிர்மின் அயனியின் இணை அமிலமாக கருதப்படும் ஐதரசன் அசைடு, ஐதரோ ஆலிக் அமிலத்துடன் ஒப்புமை கொண்டுள்ளது <ref name=Greenwood426/>.
=== ஆலைடுகளும் ஆக்சோஆலைடுகளும் ===
[[File:Nitrogen trichloride.JPG|thumb|right|[[நைட்ரசன் டிரை குளோரைடு]]]]
வரிசை 155:
நைட்ரோசில் ஆலைடுகள் (XNO) மற்றும் நைட்ரைல் ஆலைடுகள் (XNO2) என்ற இரண்டு வரிசைகளில் நைட்ரசன் ஆக்சோஆலைடுகள் அறியப்படுகின்றன. நைட்ரசு ஆக்சைடை நேரடியாக ஆலசனேற்றம் செய்வதன் மூலம் வினைத்திறன் மிக்க நைட்ரோசில் ஆலைடுகளை தயாரிக்கிறார்கள். நைட்ரோசில் புளோரைடு (NOF) நிறமற்றதாகவும் ஒரு தீவிர புளோரினேற்றும் முகவராகவும் காணப்படுகிறது. நைட்ரோசில் குளோரைடும் (NOCl) இதே பண்புகளைக் கொண்டு ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. நைட்ரோசில் புரோமைடு (NOBr) சிவப்பு நிறத்திலுள்ள ஒரு சேர்மமாகும். நைட்ரைல் ஆலைடுகளின் வேதியியல் வினைகள் யாவும் ஒரே மாதிரியானவையாகும். நைட்ரைல் புளோரைடும் (FNO2), நைட்ரைல் குளோரைடும் ClNO2) வினைத்திறன் மிக்க வாயுக்களாகவும் தீவிர ஆலசனேற்ற முகவர்களாகவும் உள்ளன <ref name=Greenwood438/>.
=== ஆக்சைடுகள் ===
[[File:Nitrogen dioxide at different temperatures.jpg|thumb|upright=1.36|right|−196 °செ, 0 °செ, 23 °செ, 35 °செ, மற்றும் 50 °செல்சியசு. வெப்பநிலைகளில் காணப்படும் நைட்ரசன் டையாக்சைடு.
தாழ் வெப்பநிலைகளில் {{chem|NO|2}} நிறமற்ற ({{chem|N|2|O|4}}), டைநைட்ரசன் டெட்ராக்சைடாக மாறுகிறது. உயர் வெப்பநிலைகளில் இது {{chem|NO|2}} ஆக மீள்கிறது.]]
வரிசை 176:
எனவே விதிவிலக்காக, கொதிநிலைக்கு கீழான வெப்பநிலையில் O=N–N=O பிணைப்புக்கு இருபடியாக்கல் பொருந்துவதில்லை. (இங்கு ஒருபக்க மாற்றியம் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது) ஏனெனில் ஒட்டு மொத்த பிணைப்பு நிலையை இது உயர்த்துவதில்லை. இணையில்ல எலக்ட்ரான் NO மூலக்கூறுக்கு குறுக்காக உள்ளடங்காமல் நிலைப்புத்தன்மையைக் கொடுக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு துருவ மூலக்கூறுகளுடன் ஒடுக்கப்படும் போது, சமச்சீரற்ற சிவப்பு இருபடி O = N-O = N க்கான சான்றுகளும் உள்ளன. நைட்ரிக் ஆக்சைடு ஆக்சிசனுடன் வினைபுரிந்து பழுப்பு நிற நைட்ரசன் டை ஆக்சைடையும், ஆலசன்களுடன் வினைபுரிந்து நைட்ரோசில் ஆலைடுகளையும் தருகிறது. இடைநிலை உலோகச் சேர்மங்களுடன் வினைபுரிந்து ஆழ்ந்த நிறமுடைய நைட்ரோசில் அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது <ref name=Greenwood443/>.
=== ஆக்சோ அமிலங்கள், ஆக்சோ எதிர்மின்னயனிகள், ஆக்சோ அமிலவுப்புகள் ===
பல நைட்ரசன் ஆக்சோ அமிலங்கள் அறியப்பட்டுள்ளன. நீரிய கரைசல் அல்லது உப்புகளாக அறியப்படும் இவற்றில் பெரும்பாலானவை தூய்மையான நிலையில் நிலைப்புத்தன்மை அற்றவையாகும். பலவீனமான இரட்டைப் புரோட்டான் அமிலமாகக் கருதப்படும் ஐப்போநைட்ரசு அமிலம் (H2N2O2), HON=NOH என்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. (காடித்தன்மை எண் pKa1 6.9, pKa2 11.6) அமிலக் கரைசல்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் pH 4 கார வினையூக்கச் சிதைவு [HONNO]−என்ற அயனி வழியாக நிகழ்கிறது. நைட்ரசு ஆக்சைடும் ஐதராக்சைடு எதிர்மின் அயனியும் தோன்றுகின்றன. N2O2−2 எதிர்மின் அயனிகள் பங்குபெறும் ஐப்போநைட்ரைட்டுகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. பொதுவாக ஒடுக்கும் முகவர்களாகவும் இவை செயற்படுகின்றன. நைட்ரசன் சுழற்சியில் அமோனியாவிலிருந்து நைட்ரைட்டு தோன்றும் பொழுது இடைநிலை படிநிலையாக இது தோன்றுகிறது. ஐப்போநைட்ரைட்டு ஓர் இணைக்கும் அல்லது நச்சேற்றும் இருபல் ஈனியாகவும் செயற்படுகிறது.
வரிசை 202:
ஆர்த்தோ நைட்ரேட்டு எதிர்மின் அயனி குறைவான வேதியியலை கொண்டிருந்த போதிலும், அதன் வழக்கமான நான்முக வடிவம் மற்றும் குறுகிய N-O பிணைப்பு நீளங்கள் , பிணைப்பில் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க முனைவுப் பண்புகள் ஆகியவற்றின் காரணமாக கட்டமைப்புக் கண்ணோட்டத்தில் சிறந்து விளங்குகிறது <ref name=Greenwood459/>.
=== கரிம நைட்ரசன் சேர்மங்கள் ===
கரிம வேதியியலில் பயன்படும் முக்கியமான தனிமங்களில் ஒன்று நைட்ரசன் ஆகும். பல வேதி வினைக்குழுக்களில் [[கார்பன்–நைட்ரசன் பிணைப்பு]] பங்கேற்கிறது. [[அமைடு|அமைடுகள்]] (RCONR2), [[அமீன்|அமீன்கள்]] (R3N), [[இமைன்|இமைன்கள்]] (RC(=NR)R), [[இமைடு|இமைடுகள்]] (RCO)2NR, [[அசைடு|அசைடுகள்]] (RN3), [[அசோ சேர்மங்கள்]] (RN2R), [[சயனேட்டு|சயனேட்டுகள்]] (ROCN, [[ஐசோசயனேட்டு]]கள் (RCNO), [[நைட்ரேட்டு]]கள் (RONO2), [[நைட்ரைல்]]கள் (RCN), [[ஐசோநைட்ரைல்]]கள் (RNC), [[நைட்ரைட்டு]]கள் (RONO), [[நைட்ரோ சேர்மங்கள்]] (RNO2), [[நைட்ரோசோ சேர்மங்கள்]] (RNO), [[ஆக்சைம்]]கள் (RCR=NOH) மற்றும் [[பிரிடின்]] வழிப்பொருட்கள் உள்ளிட்டவை இதற்கு உதாரணங்களாகும். C–N பிணைப்புகளில் முனைவுத்தன்மை நைட்ரசனை நோக்கி வலிமையாக உள்ளன. இவ்வகைச் சேர்மங்களில் வழக்கமாக நைட்ரசன் முப்பிணைப்பு கொண்டுள்ளது. (அமோனியம் உப்புகளில் நான்கு இணைதிறன்) ஒரு தனி இணை எலக்ட்ரான் புரோட்டானுடன் ஒருங்கிணைந்து காரத்தன்மைக்கு காரணமாகிறது மற்றும் மற்ற காரணிகளைப் பாதிக்கிறது. உதாரணமாக அமைடுகள் காரத்தன்மை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் தனி இணை எலக்ட்ரான் இரட்டைப்பிணைப்புக்குள் உள்ளடங்குவதில்லை. (தாழ் pH, மதிப்புகளில் ஆக்சிசனில் புரோட்டானேற்றம் நிகழ்ந்து அமிலமாகவும் இவை செயல்படலாம்). பிர்ரோல் அமிலத்தன்மையைக் காட்டவில்லை. ஏனெனில் தனி இணை எலக்ட்ரான் அரோமாட்டிக் வளையத்தில் உள்ளடங்குவதில்லை <ref name=Jerry>{{JerryMarch}}</ref>. ஒரு வேதிப்பொருளில் உள்ள நைட்ரசனின் அளவை யோகன் குசுதாவ் உருவாக்கிய ஒரு முறையில் கணடறியலாம் <ref>{{cite book|year=2008|doi=10.1007/978-1-4020-6754-9_9066|isbn=978-1-4020-6753-2|title=Encyclopedia of Genetics, Genomics, Proteomics and Informatics|page=1063|chapter=Kjeldahl Method}}</ref>. உட்கரு அமிலங்களிலும், புரதங்களிலும், அமினோ அமிலங்களிலும் அடினோசின் முப்பாசுப்பேட்டிலும் நைட்ரசன் முக்கியப்பகுதிப் பொருளாக காணப்படுகிறது <ref name=Jerry/>.
வரிசை 236:
== பயன்பாடுகள் ==
=== வாயு ===
நைட்ரசன் சேர்மங்களின் வகைப்பாடுகள் அதிக அளவில் உள்ளதால் இவற்றின் பயன்பாடுகளும் இயற்கையாகவே மிகவும் பரவலான அளவில் மாறுபடுகின்றன. எனவே தூய நைட்ரசனின் பயன்கள் மட்டுமே இங்கு பரிசீலிக்கப்படுகின்றன. தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் நைட்ரசனில் மூன்றில் இரண்டு பங்கு வாயுவாகும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு திரவமாகவும் விற்கப்படுகின்றன. காற்றில் உள்ள ஆக்சிசன் தீ, வெடிப்பு, அல்லது ஆக்சிசனேற்ற அபாயத்தை ஏற்படுத்தும் போதெல்லாம் நைட்ரசன் வாயு பெரும்பாலும் மந்தநிலையான சூழலில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சில உதாரணங்கள் பின்வருமாறு <ref name=Greenwood409/>:
வரிசை 251:
[[ஏல்]] போன்ற சில பியர் வகைகளில் நைட்ரசன் வாயுவை கார்பன் டை ஆக்சைடுடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள் <ref>{{cite book|last1=Baxter|first1=E. Denise|last2=Hughes|first2=Paul S.|title=Beer: Quality, Safety and Nutritional Aspects|date=2001|publisher=Royal Society of Chemistry|isbn=978-0-85404-588-4|page=22|url=https://books.google.com/books?id=X95O-1_x-a0C&pg=PA22}}</ref>. அழுத்த உணரியாக விட்கெட் என்ற பெயரிலான நைட்ரசன் சேர்க்கப்பட்ட பியர்கள் புட்டிகளிலும் கலன்களிலும் அடைத்து விற்கப்படுகின்றன <ref>{{cite web|url=http://recipes.howstuffworks.com/question446.htm|title=How does the widget in a beer can work?|publisher=Howstuffworks}}</ref><ref>{{cite book| url = https://books.google.com/books?id=ogXc9xTTCVsC&pg=PA131 | page=131| title = Froth!: The Science of Beer| isbn = 978-0-8018-9569-2| author1 = Denny| first1 = Mark| date = 1 November 2009}}</ref>. ஆற்றல் மூலங்களாகச் செயல்படும் கார்பன் டை ஆக்சைடை நைட்ரசன் தொட்டிகள் இடப்பெயர்ச்சி செய்து வருகின்றன <ref>{{cite journal| hdl = 1721.1/45820| last=Kennett |first=Andrew J. |title =Design of a pneumatically assisted shifting system for Formula SAE® racing applications|year=2008|publisher=Dept. of Mechanical Engineering, Massachusetts Institute of Technology. }}</ref>. நைட்ரசன் மூச்சுத்திணறலை உருவாக்கும் வாயுவாக கருதப்பட்டு கொல்லும் ஊசியாக உட்செலுத்தவும் பயன்பாடுகிறது<ref name="Time-apr2015">{{cite news |last=Sanburn |first=Josh |url=http://time.com/3749879/nitrogen-gas-execution-oklahoma-lethal-injection/ |title=The Dawn of a New Form of Capital Punishment |work=[[டைம் (இதழ்)|டைம்]] |date=2015-04-10 |accessdate=2015-04-11 }}</ref><ref>{{cite news |url=http://www.abc.net.au/7.30/content/2012/s3657550.htm |title=Euthanasia campaigner under scrutiny|author=Sexton, Mike |date=18 December 2012 |work=[[ABC News (Australia)|ABC]] |accessdate=6 May 2013}}</ref>. சோடியம் அசைடிலிருந்து தயாரிக்கப்படும் நைட்ரசன் வாயுவை காற்றுப்பைகளில் நிரப்ப பயன்படுத்துகிறார்கள்<ref>{{cite journal | author = Betterton, E. A. | title = Environmental Fate of Sodium Azide Derived from Automobile Airbags | journal = Critical Reviews in Environmental Science and Technology | year = 2003 | volume = 33 | issue = 4 | pages = 423–458 | doi = 10.1080/10643380390245002 }}</ref>.
=== நீர்ம நைட்ரஜன் ===
[[File:Nitrogen.ogv|thumb|நீர்ம நைட்ரசனில் அமிழ்த்தப்பட்ட வளி நிரப்பப்பட்ட பலூன்]]
வரிசை 259:
திரவ நைட்ரசன் ஒரு தாழ்வெப்ப திரவமாகும். தீவார் குடுவைகள் போன்ற முறையான கொள்கலன்களில் காக்கப்பட்டால் இது ஆவியாதல் இழப்பு இல்லாமல் கொண்டு செல்ல முடியும்<ref>{{Cite journal|doi=10.1007/BF01136404|title=Vessels for the storage and transport of liquid oxygen and nitrogen|author=Kaganer, M. G.|author2=Kozheurov, V.|author3=Levina, Zh. L.|last-author-amp=yes|journal=Chemical and Petroleum Engineering|volume=3|issue=12|year=1967|pages=918–922}}</ref>.
=== பிற பொதுப் பயன்கள் ===
தோல் மருத்துவத்தில் நீர்க்கட்டி, பருக்கள் போன்றவற்றை நீக்குவதற்குரிய குளிர்மருத்துவ சிகிச்சையில் நைட்ரசன் பயன்படுகிறது<ref>{{cite journal|pmid=11359389|volume=144|issue=5|title=Liquid nitrogen cryotherapy of common warts: cryo-spray vs. cotton wool bud|url=https://archive.org/details/sim_british-journal-of-dermatology_2001-05_144_5/page/1006|date=May 2001|journal=Br. J. Dermatol.|pages=1006–9|author=Ahmed I|author2=Agarwal S|author3=Ilchyshyn A|author4=Charles-Holmes S|author5=Berth-Jones J|doi=10.1046/j.1365-2133.2001.04190.x}}</ref>. எக்சுகதிர் உணரிகள், அகச்சிவப்பு உணரிகள், கணிப்பொறிகளின் மையக் கட்டுப்பாட்டு அலகுகள் போன்றவற்றைக் குளிர்விக்கவும் நைட்ரசன் நீர்மம் பயன்படுத்தப்படுகிறது<ref>{{Cite book|url=https://books.google.com/?id=9fYFiZ7QeEcC&pg=PA318|title=Encyclopedia of Computer Science and Technology|volume=30|author=Kent, Allen|author2=Williams, James G.|publisher=CRC Press|date=1994|isbn=0-8247-2283-3|page=318}}</ref>.
வரிசை 272:
நைட்ரசனின் மற்றொரு முக்கியச் சேர்மம் நைட்ரிக் அமிலம். அமோனியம் நைட்ரேட் போன்ற உரங்கள், வெடி மருந்துகள் நைலான் மற்றும் பாலியுரித்தேன் போன்ற நெகிழ்மங்களின் உற்பத்தி முறையில் இது மூலப் பொருளாக உள்ளது. நைட்ரிக் அமிலம் கிளிசராலுடன் வினை புரியும் போது அது நைட்ரோ கிளிசரின் என்ற வலிமைமிக்க வெடி மருந்தை உற்பத்தி செய்கிறது. மிகச் சிறிய அசைவும் உணரப்பட்டு இதை வெடிக்கச் செய்துவிடும்.
==== டைனமைட் ====
நைட்ரோ கிளிசரினின் ஒரு துணைப் பொருள் [[டைனமைட்டு|டைனமைட்டாகும்]]. 1867 ல் [[ஆல்பிரட் நோபல்]] என்பார் இதைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினைக் களிமண்ணுடன் கலக்க அது அதிர்வுகளினால் வெடிப்பதில்லை என்ற உண்மையை இவர் கண்டறிந்தார்.
வரிசை 281:
== பாதுகாப்பு ==
=== வாயு ===
நைட்ரசன் நச்சுத்தன்மையற்ற வாயுவாக இருந்தாலும், மூடிய அறைக்குள் வெளியிடப்பட்டால் அது ஆக்சிசனை இடப்பெயர்ச்சி செய்யக்கூடும், எனவே மூச்சுத் திணறல் அபாயத்தை அளிக்கிறது. சில எச்சரிக்கை அறிகுறிகளுடன் இத்திணறல் நடக்கும் <ref>{{cite web|url=http://www.bath.ac.uk/internal/bio-sci/bbsafe/asphyx.htm |title=Biology Safety – Cryogenic materials. The risks posed by them. |publisher=University of Bath |accessdate=2007-01-03 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20070206095504/http://www.bath.ac.uk/internal/bio-sci/bbsafe/asphyx.htm |archivedate=February 6, 2007 }}</ref>, 1981 இல் நிகழ்த்தப்பட்ட முதலாவது விண்வெளித்திட்டத்தில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள நைட்ரசன் வாயுவால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இறந்தனர் என்பது இதற்கான உதாரணமாகும் <ref>{{cite news | title = Space Shuttle Columbia Fast Facts| url = http://www.cnn.com/2013/09/30/us/space-shuttle-columbia-fast-facts | date = September 30, 2013 | publisher = CNN}}</ref>.
வரிசை 289:
<ref name="bbc.co.uk">[http://www.bbc.co.uk/news/uk-19878511 Liquid nitrogen cocktail leaves teen in hospital], BBC News, {{#dateformat:October 8, 2012}}.</ref>
=== திரவநிலை நைட்ரசன் ===
ஒரு தாழ்வெப்பநிலை திரவமாக, திரவ நைட்ரசன் அபாயகரமான சேர்மமாகக் கருதப்படுகிறது.<ref>{{cite journal|last1=Walker|first1=Jearl|title=Boiling and the Leidenfrost Effect|journal=Fundamentals of Physics|pages=1–4|url=http://www.wiley.com/college/phy/halliday320005/pdf/leidenfrost_essay.pdf|accessdate=11 October 2014}}</ref> திரவ நைட்ரசனை உட்கொள்வது கடுமையான உள் சேதத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, 2012 இல், இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம் பெண் திரவ நைட்ரசனைக் கொண்ட ஒரு பானத்தைக் குடிக்க நேர்ந்ததால் அவருடைய வயிற்றை அகற்ற வேண்டியிருந்தது<ref name="bbc.co.uk"/>.
| |||