பசுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி No edit summary |
No edit summary |
||
வரிசை 72:
கடல் மட்டத்திலிருந்து சுமார் 166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமலை நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 9°53'48.5"N, 78°04'36.5"E (அதாவது, 9.896800°N, 78.076800°E) ஆகும்.
== போக்குவரத்து ==
மதுரை நகரின் பல பகுதிகளை சாலை மார்க்கமாக பசுமலை இணைக்கிறது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலை, பசுமலை வழியாகச் செல்கிறது. அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்து பணிமனை ஒன்று பசுமலையில் உள்ளது.<ref>{{cite news|url=https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/oct/11/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3930487.html|title=மழையால் ஒழுகிய பேருந்து:பயணிகள் அவதி|work=Dinamani}}</ref> [[மதுரை - பெரியார் பேருந்து நிலையம்]] இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது. மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
அவனியாபுரத்தில் உள்ள மதுரை வானூர்தி நிலையம், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
== கல்வி ==
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது பள்ளிப் பருவத்தில், சில வருடங்கள் கல்வி கற்ற 'பசுமலை மேல்நிலைப் பள்ளி' இங்கு தான் உள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு இசைக் கல்லூரி ஆகியவை பசுமலையில் உள்ளன. சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. தொலைவில் மதுரை கல்லூரி (கலைக்கல்லூரி)யும், தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் உள்ளன.
== ஆன்மீகம் ==
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், இங்கிருந்து சுமார் இரண்டே கி.மீ. தூரத்தில் உள்ளது.
தென்னிந்தியத் திருச்சபை தன் கிளை ஒன்றை பசுமலையில் கொண்டுள்ளது. அதில் முதியோர் வாழ்வில்லம் ஒன்றும் உள்ளடங்கியிருக்கிறது. <ref>{{Cite news |last=Reporter |first=Staff |date=2022-05-23 |title=Exploring trees on CSI campus in Madurai |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/news/cities/Madurai/exploring-trees-on-csi-campus-in-madurai/article65454366.ece |access-date=2022-10-30 |issn=0971-751X}}</ref>
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள [[திருப்பரங்குன்றம் தர்கா]] இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
== மேற்கோள்கள் ==
| |||