பனங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan |
No edit summary |
||
வரிசை 26:
8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்; 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்; ஜாவாவில் இரண்டு அரச மரபுகளுக்கு இடையே போட்டிகள் இருந்தன. [[சைலேந்திர வம்சம்|சைலேந்திர அரச மரபு]]; [[சஞ்சய வம்சம்|சஞ்சய அரச மரபு]] ஆகியவையே அந்த இரண்டு அரச மரபுகள் ஆகும்.
[[மாதரத்தின் சஞ்சயன்|சஞ்சய மன்னருக்குப்]] பிறகு நான்கு சஞ்சய வம்ச மன்னர்கள் இருந்தனர். அவர்கள் பனங்கரன் ''(Panangkaran),'' பனுங்கலன் ''(Panunggalan),'' வாரக் ''(Warak)'' மற்றும் கருங் ''(Garung)'' ஆவர். இந்த மன்னர்கள் அம்ராதி மன்னர்கள் ''(Amrati King)'' என்று அழைக்கப்பட்டனர். சஞ்சய வம்ச மன்னர்கள், [[மத்திய ஜாவா|மத்திய ஜாவாவின்]] தெற்கில் இருந்த [[சைலேந்திர வம்சம்|சைலேந்திர இளவரசர்களுடன்]] அதிகாரம் மற்றும் மதச் செல்வாக்கிற்காகப் போட்டியிட்டனர்.
வரிசை 45:
இருப்பினும், [[கலாசான் கல்வெட்டு]] மற்றும் [[ரத்து போக்கோ கல்வெட்டு]] ''([[:en:Ratu Boko |Ratu Boko]])'' ஆகிய இரு கல்வெட்டுகளிலிருந்து, மன்னர் பனங்கரன், பௌத்த ஆலயம் கட்டுவதற்கு அனுமதி அளித்தார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. [[கலாசான் கல்வெட்டு|கலாசான் கல்வெட்டில்]], [[தாரா (பௌத்தம்)|போதிசத்வதேவி தாராவுக்கு]] ''(Bodhisattvadevi Tara)'' ஒரு புனிதக் கட்டிடம் கட்டப்பட்டதைப் பற்றியும்; [[சைலேந்திர வம்சம்|சைலேந்திர]] குடும்பத்தைச் சேர்ந்த புத்த [[பிக்குகள்|பிக்குகளுக்கு]] ஒரு [[புத்த விகாரம்]] (மடம்) கட்டப்பட்டதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுமானத்திற்கு மகாராஜா [[பனங்கரன்|ராக்காய் பனங்கரன்]] அவர்களைத் தூண்டுதல் செய்வதில் வெற்றி பெற்ற குரு சங் ராஜா சைலேந்திர வம்ச திலகர் ''(Guru Sang Raja Sailendravamçatilaka)'' என்பவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரிசை 51:
அதன் பின்னர் [[பனங்கரன்|ராக்காய் பனங்கரன்]], கலாசான் கிராமத்தை ''(Kalaça Village)'' [[சங்கம், பௌத்தம்|பௌத்த சங்கத்திற்கு]] நன்கொடையாக வழங்கினார். [[தாரா (பௌத்தம்)|போதிசத்வதேவி தாராவுக்கு]] அர்ப்பணிக்கப்பட்ட கோயில் [[கலாசான் கோயில்]] என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.<ref>{{cite book | author= Drs. R. Soekmono| title= ''Pengantar Sejarah Kebudayaan Indonesia 2'', 2nd ed | publisher = Penerbit Kanisius |orig-year=First published in 1973| date=1988 | location =Yogyakarta| pages =42–43 }}</ref><ref>Soetarno, Drs. R. second edition (2002). "Aneka Candi Kuno di Indonesia" (Ancient Temples in Indonesia), pp. 41. Dahara Prize. Semarang. {{ISBN|979-501-098-0}}.</ref>
[[மாதரம் இராச்சியம்|மாதரம் மரபில்]] ஒவ்வொரு மன்னருக்கும் ஒரு பிறப்புப் பெயர் உண்டு. அந்தப் பெயர் அபிசேகா '''தியா''' ''(Abhisheka Dyah)'' என்ற முன் பெயரால் வகைப் படுத்தப்படுகிறது. இந்தப் பட்டம், பொதுவாக மன்னரின் குழந்தைகள், ஆண் அல்லது பெண் இருவரையுமே குறிக்கும்.
| |||