பிள்ளையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →ஐந்துகரங்கள்: clean up, replaced: இவா் → இவர் using AWB |
|||
வரிசை 34:
இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்,<ref>(ரிக் வேதம்:2.23.1)</ref><ref>[http://www.poornalayam.org/wp-content/uploads/shanti-pata-mantras-tamil.pdf] {{Webarchive|url=https://web.archive.org/web/20180731072254/https://www.poornalayam.org/wp-content/uploads/shanti-pata-mantras-tamil.pdf|date=2018-07-31}} பக்கம் 24</ref> யானையின் முகத்தினைக் கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
=== விநாயகரின் வேறு பெயர்கள் ===
[[படிமம்:விநாயகர்.jpg|thumb|வித்தியாசமான விநாயகர் சிலை]]
* '''பிள்ளையார்'''
வரிசை 50:
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
=== கிருத யுகம் ===
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
=== திரேதாயுகம் ===
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
=== துவாபரயுகம் ===
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
=== கலி யுகம் ===
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
வரிசை 72:
[[சிறுத்தொண்டர்]] என்னும் பரஞ்சோதியார் [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மப் பல்லவனின்]] படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட [[திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்|திருச்செங்காட்டங்குடியில்]] நிறுவினார். இவருக்கு '''வாதாபி கணபதி''' என்று பெயர்.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=167}}</ref> [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, [[பொது ஊழி|பொ.ஊ.]] இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம், அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. [[பொது ஊழி|பொ.ஊ.]] ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news |title=Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |url=http://tamildigitallibrary.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8 |accessdate=5 September 2018 |publisher=தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை}}</ref> செங்கல்பட்டு மாவட்டத்தில் [[இரும்பேடு ஊராட்சி, செங்கல்பட்டு|இரும்பேடு]] கிராமத்தில், 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகியின் கல் சிற்பம் இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{cite news |title=பெண் வடிவிலான அரிய விநாயகர் சிலை செங்கல்பட்டில் கண்டெடுப்பு! |url=https://tamil.news18.com/news/spiritual/rare-idol-of-vinayaki-discovered-near-chennai-vai-643473.html |accessdate=20 December 2021 |agency=நியூஸ்18 |date=19 December 2021}}</ref>
== திருவுருவ விளக்கம்
=== திருவடி ===
ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
=== பெருவயிறு ===
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
=== ஐந்துகரங்கள் ===
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார்.
தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார்
துதிக்கை அனுக்ரகம் செய்கிறது.
அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது.எனவே,
மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
=== கொம்புகள் ===
மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.<ref>ரஜன பந்தன மகா கும்பாபிஷேக மலர்; ஈச்சனாரி; 4. சூன் 1990; விநாயகர் பெருமை ; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்</ref>
=== தாழ்செவி ===
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.<ref>பொதிகை தொலைக்காட்சி; விநாயகர் சதுர்த்தி நேரடி வர்ணனை நிகழ்ச்சி; 29. ஆகத்து 2014</ref>
வரி 99 ⟶ 100:
சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
=== முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள் ===
# [[உச்சிட்ட கணபதி]]
வரி 135 ⟶ 136:
== விநாயக சதுர்த்தி ==
[[படிமம்:Vinayagar Chathurthi Vizha.theora.ogv|150px|விநாயக சதுர்த்தி குறித்த நிகழ்படம்|thumb|right]]
'''ஐந்து கரங்களை''' உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் '''ஐந்தாவது மாதம்''' ஆன [[ஆவணி]] மாதம் [[வளர்பிறை]]ச்[[சதுர்த்தி]] திதி அன்று கொண்டாடப்படும் [[விநாயக சதுர்த்தி]], இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
| |||