புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி தொடர்புள்ள துறைகள்: clean up, replaced: வாய்ப்புக்கள் → வாய்ப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 18:
 
== புவியியலின் பிரிவுகள் ==
=== இயற்கைப் புவியியல் ===
இயற்கைப் புவியியல், புவியியலை [[பூமி|புவி]] பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (''layout''), [[கற்கோளம்]] (''lithosphere''), [[நீர்க்கோளம்]] (''hydrosphere''), [[வளிமண்டலம்]], [[மேலோட்டுக் கோளம்]] (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 
வரிசை 33:
* [[நிலத்தோற்ற வாழ்சூழலியல்]] (''Landscape ecology'')
 
=== மானிடப் புவியியல் ===
'''மானிடப் புவியியல்''' என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (''patterns''), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, [[மனிதன்]], [[அரசியல்]], [[பண்பாடு]], [[சமூகம்]] மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதார]] அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் [[இயல் நிலத்தோற்றம்|இயல் நிலத்தோற்றமாக]] (''physical landscape'') இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. [[சூழற் புவியியல்]] இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.
 
வரிசை 55:
மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
 
=== சூழற் புவியியல் ===
சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் [[கருத்துருவாக்கம்]] செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், [[உலகமயமாதல்]], [[தொழினுட்பம்|தொழில்நுட்ப]] மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. [[பேரழிவு மேலாண்மை]] (''disaster management''), [[சூழல் மேலாண்மை]], [[தாங்குதிறன்]] (''sustainability''), [[அரசியல் சூழலியல்]] (''political ecology'') என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும்.
 
=== புவித்தகவற்கணியவியல் ===
[[படிமம்:Geabios3d.jpg|thumb|right|இலக்கமுறை ஏற்ற மாதிரி (''Digital Elevation Model'' – DEM)]]
[[புவித்தகவற்கணியவியல்]] (''Geomatics'') என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. [[புவியியல் தகவல் முறைமை]], [[தொலையுணர்தல்]] போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், [[விண்கோள் நில அளவை முறைமை]] (''Global positioning systems'') போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
 
=== மண்டலப் புவியியல் ===
[[மண்டலப் புவியியல்|பிரதேசப் புவியியல்]] (''Regional geography''), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் [[மண்டலமயமாதல்]] (''regionalization'') குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது.
 
=== தொடர்புள்ள துறைகள் ===
* [[நகரத் திட்டமிடல்]], [[மண்டலத் திட்டமிடல்]], [[இடஞ்சார் திட்டமிடல்]] ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புகள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் போன்ற விடயங்களைப் புவியியல் அறிவு கொண்டு முடிவு செய்யலாம். [[நகரம்|நகரங்கள்]], பெருநகரங்கள், [[நாட்டுப்புறம்|நாட்டுப்புறப்]] பகுதிகள் ஆகியவற்றைத் திட்டமிடுவதைப் பயன்பாட்டுப் புவியியலாகப் பார்க்க முடியும்.
* [[மண்டல அறிவியல்]]: 1950ல் [[வால்ட்டர் இசார்ட்]] என்பவரால் வழிநடத்தப்பட்ட மண்டல அறிவியல் இயக்கம், புவியியல் பிரச்சினைகளுக்குக் [[கணியம்|கணிய]] மற்றும் [[பகுப்பாய்வு]] அடிப்படைகளை வழங்குவதற்காக உருவானது. இது மரபுவழியான புவியியல் திட்டங்களின் விளக்கும் போக்கிலிருந்து மாறுபடுகின்றது. மண்டல அறிவியலானது, இடஞ்சார் நோக்கை முக்கியமாகக் கொண்ட, [[மண்டலப் பொருளியல்]], [[வள மேலாண்மை]], [[அமைவிடக் கோட்பாடு]], [[நகர மற்றும் மண்டலத் திட்டமிடல்]], [[தகவல் தொடர்பு]], மானிடப் புவியியல், [[மக்கள்தொகைப் பரம்பல்]], [[நிலத்தோற்றச் சூழலியல்]], [[சூழல் தரம்]] அறிவுத் தொகுதிகளை உள்ளடக்கியது.
 
=== கோள் அறிவியல்கள் ===
புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக [[வானியல்]], [[அண்டவியல்]] ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை [[கோளியல்]] (''planetology'') எனப்படும்.
 
வரிசை 90:
 
== புவியியல் கல்வி ==
=== தமிழக மாணவர்களுக்கான புதிய முறை ===
தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை<ref>தினமணி செய்தி பத்திரிகை; ஜனவரி 8, 2014; 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு</ref> மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும்.
 
"https://tamilar.wiki/w/புவியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது