பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam No edit summary |
imported>பாரதிமுரளி →கோயில்கள்: விபரக்குறிப்பு |
||
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''பெரியகுளம்''' (''Periyakulam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான [[நகராட்சி]] ஆகும். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தேனி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228330-theni-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> மேலும் , தேனி மாவட்டத்தின் முதல் 'நூற்றாண்டுகளைக்' கடந்த நகராட்சி ஆகும். இருப்பினும் தொழில் வளம் இல்லாத காரணத்தினால் நகராட்சிக்குரிய வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. பெரியகுளம் நகரம் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் நெருக்கமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை கண்டறிந்து உருவாக்க ஒரு முக்கியமான வழித்தடமாக ஒரு காலத்தில் பெரியகுளம் இருந்தது. பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருக்கும்போது மதுரை , திண்டுக்கலுக்கு அடுத்து புகழ் பெற்ற நகரமாக விளங்கியது . கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் பெரியகுளம் இயற்கையாகவே ஒரு நீர்வளம் மிகுந்த ஊராக உள்ளது.பாண்டியர்கள் ஆட்சிக்கு பிறகு நாயக்க மன்னர்கள் ஆட்சி நடந்தது.அதன் பிறகு பாளையக்காரர் ஆட்சியில் மாசி நாயக்கர் கோயில் பெருமாள் கோயில் மற்றும் அரண்மனை கட்டப்பட்டது..இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நீதிமன்ற வளாகம், டவுன் யூனியன் கிளப், எட்வர்ட் பிரம்ம ஞான மந்திரம் பள்ளி, தென்கரை நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட மேலும் சில நூற்றாண்டுகள் கடந்த முக்கிய கட்டிடங்கள் உள்ளன. {{cn}}
==புவியியல்==
வரிசை 25:
==வரலாறு ==
[[பாண்டியர்]]களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு [[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் [[
==மக்கள்தொகை பரம்பல்==
வரிசை 32:
==கோயில்கள்==
* அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. {{சான்று தேவை}}
*மாசி நாயக்கர் திருக்கோயில்
* அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
* வரதராஜ பெருமாள் கோயில்
* காளஸ்திரி கோயில்
* ஶ்ரீ கார்ணமூர்த்தி கோயில்
* பகவதி அம்மன் கோயில்
* பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவில்
போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது.
மேலும் பெரியகுளம் நகரில், வைத்தியநாதசாமி மலைக் கோவில், வீச்சுக்கருப்பண்ண சாமி கோவில், நகருக்கு அருகில் கைலாசப்பட்டி கைலாசநாதர் மலைக் கோவில், ஈச்சமலை மகாலட்சுமி கோவில் உள்ளிட்ட காணத்தக்க கோவில்களும் உள்ளன.
==சோத்துப்பாறை அணை==
பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் [[சோத்துப்பாறை அணை]] அமைந்துள்ளது. இந்த அணைக்கு [[கொடைக்கானல்]] மலையில் உள்ள பேரிஜம் ஏரியிலிருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையிலிருந்து சுமார் 8 கி .மீ தூரத்தில் கண்ணக்கரை என்ற மலை கிராமமும் , கண்ணக்கரையில் இருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் அகமலை என்ற மலை கிராமமும் உள்ளது. சோத்துப்பாறை அணையில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்வதற்கு மலைச்சாலை உள்ளது.
==வராக நதி==
[[வராக நதி]] பெரியகுளம் நகரை, வடகரை மற்றும் தென்கரை என இரண்டாகப் பிரிக்கிறது. இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இந்த நதியில் எப்பொழுதும் நீர் இருப்பதால் இது வற்றாத நதி எனப்படுகிறது. புராணக் கதைகள் காரணமாக வராகநதி என்று அழைக்கப்படுகிறது.. இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.
==தீர்த்த தொட்டி==
வரி 69 ⟶ 71:
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
| |||