பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி அசைவு: clean up, replaced: முக்கிய காரணமாகும் → முக்கியக் காரணமாகும் using AWB
 
No edit summary
 
வரிசை 22:
 
==மனிதருக்குப் பூச்சிகளால் விளையும் நன்மைகளும் தீமைகளும்==
===தீங்குயிர்கள்===
[[மனிதர்]]களால் பல பூச்சிகள் [[தீங்குயிர்|தீங்குயிர்களாக]] (பீடைகளாக) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை [[வேளாண்மை]] மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் [[பயிர்]]களுக்கு, [[வீட்டுத் தோட்டம்|வீட்டுத் தோட்டத்தில்]] வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கு, பயிர்விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் [[தானியம்|தானியங்கள்]], [[காய்கறி|காய்கறிகள்]], ஏனைய [[உணவு]] வகைகளுக்கு, [[கால்நடை]]களுக்கு அல்லது நேரடியாகவே [[மனிதர்|மனிதருக்குக்]] கேடு விளைப்பனவாக உள்ளன.<ref name="A-Z pest">{{cite web | url=http://www.daff.qld.gov.au/plants/field-crops-and-pastures/broadacre-field-crops/integrated-pest-management/a-z-insect-pest-list | title=A-Z insect pest list | publisher=Queensland Government | date=Updated 08 March 2012 | accessdate=29 சனவரி 2014 | author=The State of Queensland (Department of Agriculture, Fisheries and Forestry) 2010–2014.}}</ref> எனவே இவற்றை அழிக்க அல்லது கட்டுப்படுத்த [[பூச்சிக்கொல்லி]]கள், அல்லது வேறு [[தொழினுட்பம்|தொழில்நுட்பங்கள்]], மேலாண்மை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.<ref name="A-Z pest"/> பூச்சிகொல்லிப் பயன்பாடு மனிதருக்கும், [[சூழல்|சூழலுக்கும்]] தீங்கு தருவதாக இருக்கின்றது. இதனால் [[ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை]]யானது பரிந்துரைக்கப்படுகிறது. இது பல இயல்பான அறிவுசார் மேலாண்மை நடைமுறைகளை ஒன்றிணைத்து சூழலுக்கு அதிகம் தீங்குதராத முறையில் தீங்குயிர்களினால் விளையும் கேடுகளைத் தடுக்க உதவுகின்றது.<ref name="US, EPA">{{cite web | url=http://www.epa.gov/opp00001/factsheets/ipm.htm | title=Integrated Pest Management (IPM) Principles | publisher=U.S. Enviornmental Protection Agency | accessdate=29 சனவரி 2014 | archive-date=2015-08-10 | archive-url=https://web.archive.org/web/20150810160633/http://www.epa.gov/opp00001/factsheets/ipm.htm |url-status=dead }}</ref>
 
வரிசை 29:
வேறுசில [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணி வாழ்வை]] மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும் (எ.கா. [[பேன்]], [[மூட்டைப் பூச்சி]]). வேறுசில [[நோய்]]களை உருவாக்கும் [[நோய்க்காரணி]]களைக் கடத்தும் [[நோய்க்காவி]]யாகத் தொழிற்படும் (எ.கா. [[கொசு]], [[இருசிறகிப் பூச்சிகள்]]). [[கறையான்]] போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி ([[:en:Bookworm (insect)]] போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன.
 
===நன்மை பயக்கும் பூச்சிகள்===
{{உயிரினங்கள் பட்டியல்கள்}}
சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி [[உயிரியல்]] சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன.
====மகர்ந்தச் சேர்க்கையும் பரவலும்====
அனேகமான [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களின்]] இனப்பெருக்கத்திற்குத் தேவையான [[மகரந்தச் சேர்க்கை]]க்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து கிடைக்கின்றது. அத்துடன் [[வித்து|விதை]]களின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுவதனால், [[உயிரியல் பல்வகைமை]]யையும் கூட்ட உதவுகின்றன.
 
====பயன்தரும் பொருட்களின் உற்பத்தி====
[[பட்டுப்புழு]] மூலம் [[பட்டு|பட்டுநூல்]] பெறப்படுகின்றது. [[தேனீ]]யானது [[தேன்|தேனை]]யும், [[மெழுகு|மெழுகையும்]] உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
====கொன்றுண்ணி====
சில பூச்சிகள் தமது [[கொன்றுண்ணல்]] செயற்பாட்டினால் (எ.கா. சீமாட்டிப் பூச்சி ([[:en:Ladybug]]), பின்னல் சிறகி ([[:en:Lacewings]]), கும்பிடு பூச்சி ([[:en:Praying mantids]])), அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால் (எ.கா. [[குளவி (பூச்சி)|குளவி]], [[இருசிறகிப் பூச்சிகள்]]), மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.<ref name="UF/IFAS">{{cite web | url=http://gardeningsolutions.ifas.ufl.edu/giam/maintenance_and_care/pesticides_beneficial_insects_and_ipm/predators_parasites.html | title=Predatory and Parasitic Insects | publisher=UF/IFAS Center for Landscape Conservation and Ecology | work=University of Florida | date=Last modified: April 30, 2010 | accessdate=29 சனவரி 2014}}</ref> ஒட்டுண்ணியாக இருக்கும் பூச்சிகள் பொதுவாகத் தமது [[ஓம்புயிர்|விருந்து வழங்கி]]களின் மேலேயோ, உள்ளேயோ முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்து வெளிவரும் குடம்பிகள் அவற்றை உண்பதனால் அழித்துவிடும்.<ref name="UF/IFAS"/> பூச்சிகளில் ஒட்டுண்ணியாக வாழும் பூச்சிகளைப் '''பூச்சியுண்ணும் பூச்சிகள்''' (''Entomophagous insects'') எனலாம். சில பூச்சிகளை அழிக்கும் வேறு பூச்சிகள் [[பூச்சியுண்ணி]]கள் எனப்படும். இவை மனிதருக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும்போது, மனிதருக்கு நன்மை பயக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சீமாட்டிப் பூச்சிகள் [[அசுவுணி]]களை அழிக்கின்றன. இவ்வாறான பூச்சியுண்ணிகள் இல்லையெனில் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டற்று அதிகரிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன.<ref name="Gullan and Cranston" />{{Rp|328–348}}{{Rp|400}}<ref>{{cite web | title=Biocontrol Network – Beneficial Insects | url=http://www.biconet.com/biocontrol.html | publisher=Biocontrol Network | date= | accessdate=2009-05-09 | archive-date=2009-02-28 | archive-url=https://web.archive.org/web/20090228043847/http://www.biconet.com/biocontrol.html | url-status= }}</ref><ref>{{cite book | author=Davidson, RH and William F. Lyon | year=1979 | title=Insect Pests of Farm, Garden, and Orchard | url=https://archive.org/details/insectpestsoffar0000davi |publisher=Wiley, John & Sons, Incorporated |page= [https://archive.org/details/insectpestsoffar0000davi/page/38 38]| isbn=0-471-86314-9}}</ref>
 
====மனிதரின் உணவாக====
சில பூச்சிகளின் [[குடம்பி]]கள் அல்லது [[முதிர்நிலை (பூச்சி)|முதிர்நிலைகள்]], சில இடங்களில் மனித [[உணவு|உணவாகவும்]] பயன்படுகின்றது.<ref>[http://news.nationalgeographic.com/news/2004/07/0715_040715_tvinsectfood.html For Most People, Eating Bugs Is Only Natural]</ref> இதனைப் [[பூச்சியுண்ணல்]] என்பர். சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். பூச்சிகளிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக இவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது.<ref name="Gullan and Cranston" />{{Rp|10–13}} ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.<ref>{{cite book|last=Michels|first=John|others=American Association for the Advance of Science|title=Science|editor=John Michels|publisher=American Association for the Advance of Science|location=229 Broadway ave., N.Y.|year=1880|volume=1|pages=2090pp|url=http://books.google.com/?id=aDkLAAAAYAAJ&pg=PA69&dq=Insects+also+produce+useful+substances+honey+silk#v=onepage&q=Insects%20also%20produce%20useful%20substances%20honey%20silk|isbn=1-930775-36-9}}</ref> இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.<ref name="investvine">{{cite web|url=http://investvine.com/un-bugs-are-food-of-the-future-video/|title=UN: Insects are ‘food of the future’ (video)|first=Arno|last=Maierbrugger|work=Inside Investor|date=14 May 2013|accessdate=17 May 2013}}</ref>.
 
====மருந்து====
சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] மனிதருக்குத் தேவையான [[மருந்து]]ப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite journal|last=Dossey|first=Aaron T.|date= December 2010|title=Insects and their chemical weaponry: New potential for drug discovery |journal=Natural Product Reports|publisher=Royal Society of Chemistry (RSC Publishing)|volume=27 |pages=Pages 1737–1757|url=http://pubs.rsc.org/en/Content/ArticleLanding/2010/NP/C005319H|doi=10.1039/c005319h|issue=12}}</ref>
 
வரிசை 59:
பூச்சிகளில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு அசைவை அல்லது இடப்பெயர்ச்சியைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பூச்சியிலேயே, வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு விருத்தி நிலைகள் வேறுபட்ட அசைவைக் காட்டி நிற்கும். எடுத்துக்காட்டாகப் [[பட்டாம்பூச்சி]]யில் முட்டைகளும், கூட்டுப்புழுவும் அசைவற்ற நிலையில் இருப்பனவாகவும், குடம்பி நிலையான மயிர்க்கொட்டியானது [[சுற்றிழுப்பசைவு]] போன்ற அசைவினை ஒத்த ஒரு தனித்துவமான அசைவைக் கொண்டதாகவும்<ref name="Science Daily">{{cite web | url=http://www.sciencedaily.com/releases/2010/07/100722132332.htm | title=Caterpillars crawl like none other: Unique means of animal locomotion has implications for robotics, human biomechanics | publisher=Science Daily | work=Simon Michael A, Woods William A Jr, Serebrenik Yevgeniy V, Simon Sharotka M, van Griethuijsen Linnea I, Socha John J, Lee Wah-Keat, Trimmer Barry A. Visceral-locomotory Pistoning in Crawling Caterpillars (Manduca sexta). Current Biology, 2010; DOI: 10.1016/j.cub.2010.06.059 | date=22 July 2010 | accessdate=21 மே 2014 | author=Tufts University}}</ref>, முதிர்நிலையானது பறத்தல் அசைவைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
 
===பறத்தல்===
பறக்கக்கூடிய [[முதுகெலும்பிலி|முள்ளந்தண்டிலிக்]] கூட்டம் பூச்சிகளே ஆகும்.<ref>{{cite web | url=http://examples.yourdictionary.com/examples/examples-of-arthropods.html | title=Examples of Arthropods | publisher=LoveToKnow, Corp. | work=Your Dictionary, The Dictionary You Can Understand | accessdate=17 சூன் 2014 | archive-date=2014-04-09 | archive-url=https://web.archive.org/web/20140409035315/http://examples.yourdictionary.com/examples/examples-of-arthropods.html |url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.encyclopedia.com/topic/insect.aspx | title=Insect | publisher=Encyclopedia.com | accessdate=17 சூன் 2014}}</ref> சில [[கணவாய்]] இனங்களும் நீரின் பரப்பிலிருந்து 10 மீட்டர் மேலெழுந்து தாண்டக் கூடியன (தம்மை வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்ப).<ref>{{cite journal |author=Jabr, Ferris |year=2010 |title=Fact or Fiction: Can a Squid Fly Out of the Water? |journal=[http://www.scientificamerican.com/ Scientific American] |url=http://www.scientificamerican.com/article.cfm?id=can-squid-fly}}</ref>
 
வரிசை 77:
 
பூச்சிகளில் ஒரு வருடத்தில் ஒரு சந்ததியையோ, அல்லது இரு சந்ததிகளையோ அல்லது பல சந்ததிகளையோ உருவாக்குகின்ற வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன<ref name="OdonateGlossary">{{cite web|title=Glossary of Lepidopteran and Odonate anatomy|url=http://www.vararespecies.org/glossary.shtml|website=Rare species atlas|publisher=Virginia Department of Conservation and Recreation|year=2013|accessdate=14 June 2013}}</ref>. பூச்சிகளில் இனப்பெருக்கமும் விருத்தியும், மிகவும் பன்முகப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது.
===தாயுள்ளான முட்டை விருத்தி (''Oviporous'')===
[[கரப்பான்]] பூச்சி, வேறுசில [[அசுவுணி|செடிப்பேன்கள்]] முளையவிருத்தி முற்றாக நிகழ்ந்து, அவை பொரித்து வெளிவரத் தயாராகும் நிலைவரை தாயின் உடலின் உள்ளேயே வைத்திருக்கப்படும். இதனைத் தாயுள்ளான முட்டை விருத்தி ([[:en:Ovoviviparity]]) எனலாம்<ref name="mcgraw-hill">"insect physiology" McGraw-Hill Encyclopedia of Science and Technology, Ch. 9, p 233, 2007</ref>. இப்படியான பூச்சிகளில் முட்டை வெளியேறிய உடனேயே பொரித்து குடம்பி வெளிவரும் என்பதனால் சில பூச்சியியலாளர்கள் இதனை ''Ovolarviporous'' என்பார்கள்.
===பிள்ளையீனும் தன்மை (''Viviparous'')===
கரப்பான் பேரினத்தைச் சேர்ந்த வேறுசில பூச்சிகள் முட்டையிடாமல், முழுமையான விருத்தி தாயின் வயிற்றிலேயே நிகழ்ந்தபின்னர், நேரடியாகப் புதிய உயிரினத்தை வெளியேற்றும்<ref name="Gullan and Cranston">{{cite book |last=Gullan |first=P.J. |coauthors=P.S. Cranston |title=The Insects: An Outline of Entomology |url=https://archive.org/details/isbn_9781405111133 |publisher=Blackwell Publishing |location=Oxford |year=2005 |edition=3 |isbn=1-4051-1113-5}}</ref>{{Rp|129, 131, 134–135}}. இது பிள்ளையீனும் தன்மை (''Viviparous'') ஆகும்.
 
===பல்முளையம் ===
வேறுசில பூச்சிகள் பல்முளையம் (''Polyembryony'') உருவாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும்<ref name="Gullan and Cranston" />{{Rp|136–137}}. அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையானது பலதடவை பிரிவடைந்து, சிலசமயம் ஆயிரக் கணக்கில் பூச்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கும்<ref name="Gullan and Cranston" />.
===கன்னிப்பிறப்பு===
கருக்கட்டல் நிகழாமலே, கலவியற்ற இனப்பெருக்க முறையில் முளையம் உருவாகி விருத்தியடைதல் கன்னிப்பிறப்பு (''Parthenogenesis'') எனப்படுகின்றது. பூச்சிகளில் நிகழும் கன்னிப்பிறப்பானது, பல்வேறுபட்ட பொறிமுறைகளினூடாக நிகழ்கின்றது<ref name="insencyc">Kirkendall, L. R. & Normark, B. (2003) ''Parthenogenesis'' in Encyclopaedia of Insects (Vincent H. Resh and R. T. Carde, Eds.) Academic Press. pp. 851–856</ref>. இவ்வாறான தோன்றல்கள் ஒரு இனத்தில் ஆண், பெண் இரண்டுமாகவோ, அல்லது பெண் மட்டுமாகவோ, அல்லது ஆண் மட்டுமாகவோ இருக்கலாம்.
 
வரிசை 91:
தேனீ, குளவி, எறும்பு போன்றவற்றில் கன்னிப்பிறப்பினால் உருவாகும் தனியன்கள் ஆண்களாக இருக்கின்றன. ஆனாலும் கருக்கட்டல் மூலம் பெறப்படும் பெண் தனியன்களே மிக அதிகளவில் காணப்படும். இங்கே ஆண்கள் ஒருமடிய நிலையையும், பெண்கள் இருமடிய நிலையையும் கொண்டிருக்கின்றன<ref name="mcgraw-hill" />.
 
===இருபாலுயிரித் தன்மை ===
பூச்சிகளில் ஆண், பெண் ஆகிய [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] உறுப்புக்களையும் கொண்ட [[இருபாலுயிரி]]கள் (''Hermaphroditism'') அரிதாகவே இருப்பினும், ஒரு சில இனங்களில் இந்த இயல்பு காணப்படுகின்றது. செதிற்பூச்சியும் (''Scale insect'') அதற்கு நெருக்கமான ஒரு சில இனங்களும் மட்டுமே இவ்வகையான இருபாலுயிரி இயல்பைக் கொண்டிருக்கின்றன<ref>{{cite web | url=http://www.findaphd.com/search/ProjectDetails.aspx?PJID=48404 | title=The evolutionary origin of hermaphrodites in insects | publisher=The University of Edinburgh | work=The Institute of Evolutionary Biology | accessdate=30 சனவரி 2014}}</ref>.
 
===பல்லுருத்தோற்றம் (''Polymorphism'')===
வழமையிலிருந்து வேறுபட்ட இனப்பெருக்க, விருத்திநிலைகள் பூச்சிகளில் காணப்படுகின்றன.
 
====மடியநிலை (''Haplodiploidy'')====
எறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற இனங்களில் [[பல்லுருத்தோற்றம் (உயிரியல்)|பல்லுருத்தோற்றம்]] சாதியமைப்பிற்கேற்ப காணப்படுகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட குழுவிலிருக்கும், வெவ்வேறு தொழிலைச் செய்யும் அதன் உறுப்பினர்களிடையே தோற்றத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. உயிரணுக்களில் இருக்கும் நிறப்புரிகளின் தொகுதி எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடே இதற்குக் காரணமாக உள்ளது. [[கருக்கட்டல்]] நடைபெறாத [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] [[கருமுட்டை]] உயிரணுக்களிலிருந்து [[ஆண் (பால்)|ஆண்]] பூச்சிகளும், கருக்கட்டலுக்குட்பட்ட [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] உயிரணுக்களிலிருந்து [[பெண்]] பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் [[குடம்பி]]களாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.<ref>{{cite journal | author = William O. H. Hughes, Benjamin P. Oldroyd, Madeleine Beekman, Francis L. W. Ratnieks | title = Ancestral Monogamy Shows Kin Selection Is Key to the Evolution of Eusociality| journal = [http://www.sciencemag.org/ Science]| volume = 320| issue = 5880| pages = 1213–1216| publisher = American Association for the Advancement of Science| date = 2008-05-30| url = http://www.sciencemag.org/content/320/5880/1213.abstract | pmid = 18511689| accessdate = 2008-08-04| doi = 10.1126/science.1156108|bibcode = 2008Sci...320.1213H }}</ref>
 
====பாலின ஈருருத்தோற்றம் (''Sexual dimorphism'')====
சில பூச்சிகளில் ஆண், பெண் பூச்சிகள் தோற்றத்தில் குறிப்பிடத் தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஆண்களிலும், பெண்களிலும்இருக்கும் இந்தத் தோற்ற வேறுபாட்டுக்கு, அவை வளரும் வீதத்தில் இருக்கும் வேறுபாட்டால், விருத்திக்கான காலத்தில் இருக்கும் வேறுபாடே காரணமென ஆய்வொன்று குறிப்பிடுகின்றது<ref>{{cite web | url=http://web.natur.cuni.cz/ekologie/jarosik/cze/pdf/B04.pdf | title=Sexual differences in insect development time in relation to sexual size dimorphism | publisher=Facultas Rerum Naturalium | work=Přírodovědecká fakulta Univerzity Karlovy v Praze | accessdate=30 சனவரி 2014 | author=Vojte ˇ ch Jaros ˇ ı ́ k and Alois Honek | pages=205-211}}</ref>.
 
====போலித்தன்மை (''Mimicry'')====
ஓர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேறொரு இனத்தின் தோற்றத்தையொத்த அமைப்புடன் விருத்தியடைதல். ஓர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பைக்]] கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்திலிருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கு ஏற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம்<ref name="Wickler">{{cite book |last=Wickler |first=W. |year=1968 |title=Mimicry in plants and animals |url=https://archive.org/details/mimicryinplantsa00wick |publisher=McGraw-Hill |location=New York }}</ref>. எடுத்துக்காட்டாகப் [[பட்டாம்பூச்சி]]களின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல்.
 
====விருத்தியில் காலமாற்ற விளைவு (''Heterochrony'')====
பூச்சிகளில் விருத்தியில் ஏற்படும் வெவ்வேறு நிகழ்வுகளில் காலமாற்றம் ஏற்படுவதனால், ஒத்த [[மரபணுத்தொகை]]யைக் கொண்டிருந்தாலும் கூட, முன்னர் இருந்ததைவிடவும் வேறுபட்ட பருமன், உருவம் கொண்ட முதிர்நிலைகள் புதிதாகத் தோன்றும். இங்கு தோன்றும் முதிர்நிலைகள் தமது [[மூதாதை]]யரிலிருந்து வேறுபட்டவையாகக் காணப்படும். இது இருவகையில் நிகழலாம்<ref>{{cite journal | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1095-8312.2007.00939.x/full | title=Heterochrony in Tingidae (Insecta: Heteroptera): paedomorphosis and/or peramorphosis? | author=ERIC GUILBERT*, LAURE DESUTTER-GRANDCOLAS, PHILIPPE GRANDCOLAS | journal=Biological Journal of the Linnean Society | year=2008 | month=January | volume=93 | issue=1 | pages=71-80 | doi=10.1111/j.1095-8312.2007.00939.x}}</ref>.
* '''இளமையொத்த தோற்றம் (''Neoteny'')''': சில பூச்சிகள் தமது இளம் வளர்நிலைகளின் [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பை]], தமது [[முதிர்நிலை]]யிலும் தக்க வைத்துக்கொண்டிருக்கும். இங்கு விருத்தியானது மந்தமானதாக இருப்பதனால் (''Paedomorphosis''), அல்லது பாலியல் விருத்தி விரைவாக இருப்பதனால் (''Progenesis''), முதிர்நிலையை அடைந்தும் அவை தமது இளம் வளர்நிலைகளை ஒத்த தோற்றத்தையே கொண்டிருக்கும்.
வரிசை 115:
 
முழுமையான உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சி இனங்களில், ஒவ்வொரு பருவநிலையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டிருப்பதுடன், பூச்சி தனது [[முதிர்நிலை]]யை அடைவதற்கு முன்னராக, [[கூட்டுப்புழு]] என்றழைக்கப்படும் தொழிற்பாடற்ற, அசைவற்ற நிலையையும் உள்ளடக்கியிருக்கும். முழுமையற்ற உருமாற்றத்திற்குட்படும் பூச்சி இனங்களில், அவை தமது முதிர்நிலையை அடைவதற்கு முன்னர், முதிர்நிலையை ஓரளவு ஒத்த பல [[வளர்நிலை]]கள் காணப்படும். அந்நிலையில் அவை [[அணங்குப்பூச்சி]]கள் என அழைக்கப்படும்.
===முழு உருமாற்றம்===
[[Image:Ontwikkelstadia wespenpoppen.jpg|thumb|100px|கைமனொப்தரா (Hymenoptera) [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த பூச்சிகளில் முழு உருமாற்றம்.]]
முழு உருமாற்றம் அல்லது முழுமையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளில் முட்டை அல்லது முளையம், [[குடம்பி]], [[கூட்டுப்புழு]], முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு நிலைகள் காணப்படும். இந்த நான்கு நிலைகளும் உருவவியல் அடிப்படையில் மிகத் தெளிவான வேறுபாடுடைய நிலைகளாகும். இங்கே முட்டை பொரித்து வெளிவரும் நிலையான குடம்பியானது பொதுவாகப் புழுப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். அவை மயிர்களைக் கொண்ட மயிர்க்கொட்டி வடிவில், மிகவும் தடித்த புழுக்கள் வடிவில், அல்லது தட்டையான புழுக்கள் வடிவில் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். குடம்பிகளுக்கு அடுத்த நிலையான கூட்டுப்புழு நிலையானது அசைவுகளற்ற அல்லது மிகவும் குறைந்த அசைவைக்கொண்ட வடிவமாகும். இந்நிலையில் இவை ஒரு தடித்த உறையினால் (''cocoon'') மூடப்பட்டுக் காணப்படலாம். இந்தக் கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போதே உடல் விருத்தி நிகழ்ந்து தோல்கழற்றலின்போது முதிர்நிலை வெளிவரும். சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் முற்றாக விருத்தியடைந்த முதிர்நிலைகள் தோல்கழற்றலைத் தொடர்ந்து வெளிவரும்.
வரிசை 130:
Image:ChristianBauer Pieris rapae youngadult.jpg|<small>''Pieris rapae'' <small> இன முதிர் நிலையிலுள்ள</small> ''Pieris rapae'' <small>பட்டாம்பூச்சி</small></gallery>
 
===குறை உருமாற்றம்===
[[File:Grasshoppermetasnodgrass.svg|thumb|right|150px|[[வெட்டுக்கிளி]]யின் முழுமையற்ற உருமாற்றத்தில் காணக்கூடிய இளம் பருவ நிலையான [[அணங்குப்பூச்சி]], முதிர்ந்த நிலையான [[முதிர்நிலை]] உட்பட்ட வெவ்வேறு [[வளர்நிலை]]கள்]]
சில தொடர்ச்சியான தோல்கழற்றல் நிகழ்வுக்கு உட்பட்டு, படிப்படியான மாற்றங்களுடன் ஏற்படும் உருமாற்றம் குறை உருமாற்றம் அல்லது முழுமையற்ற உருமாற்றம் எனப்படும். இங்கு முட்டை, [[அணங்கு (உயிரியல்)|அணங்கு]], [[முதிர்நிலை (பூச்சி)|முதிர்நிலை]] என்று மூன்று முக்கியமான நிலைகள் காணப்படும். ஆனாலும் அணங்குகள் சிலதடவைகள் தோல்கழற்றலுக்கு உட்பட்டும் வெவ்வேறு [[அணங்குப்பூச்சி|அணங்கு]] நிலைகளில் காணப்படும். சிறகற்ற அணங்காக முட்டையிலிருந்து வெளிவந்து, பின்னர் படிப்படியாகச் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்களைப் பெற்று முதிர்நிலையை அடையும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின்போதும், முதிர்நிலையை அண்மிக்கும் இயல்புகள் அதிகரித்துச் செல்லும். [[தட்டாரப்பூச்சி|தும்பி]], [[கரப்பான்]], கறையான், புத்தகப்பூச்சி, [[வெட்டுக்கிளி]], கும்பிடு பூச்சி ([[:en:Praying mantids]]), காதுப் பூச்சி ([[:en:earwigs]]), குச்சிப் பூச்சி ([[:en:stick-insects]]), வெள்ளிப் பூச்சி ([[:en:Siverfish]]) போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளுக்கு உதாரணமாகும்<ref name="museumvictoria"/>.
வரிசை 173:
32. வாயுறுப்புக்கள்<br />
</div>]]
===வெளிப்புறம்===
பூச்சிகளின் முதிர்நிலைகள் [[கைட்டின்|கைற்றின்]] எனப்படும் கடினமான பதார்த்தத்தாலான [[புறவன்கூடு|புறவன்கூட்டினால்]] மூடப்பட்ட, துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டிருக்கின்றன. உடல் துண்டங்கள், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட தலை, மார்பு, வயிறு என்ற மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்<ref>{{cite web | title=O. Orkin Insect zoo | url=http://insectzoo.msstate.edu/Students/basic.structure.html | work= | publisher=The University of Nebraska Department of Entomology | date= | accessdate=2009-05-03 | archive-date=2009-06-02 | archive-url=https://web.archive.org/web/20090602045832/http://www.insectzoo.msstate.edu/Students/basic.structure.html |url-status=dead }}</ref>.
 
====புறவன்கூடு====
புறவன் கூடானது வெளிப்புறமாகக் கைற்றினற்ற, மெழுகு போன்ற, நீரை உட்புகவிடாத தன்மை கொண்ட மெல்லிய ஒரு மேற்புறத்தோலையும் (''epicuticle''), உட்புறமாகக் கைற்றினால் ஆன மிகவும் தடிப்பான புறத்தோலையும் (''procuticle'') கொண்டிருக்கும். இந்தப் புறத்தோலானது வெளிப்புறமாக, மிகவும் திண்மையான கடினமாக்கப்பட்ட வெளிப்புறத்தோலையும் (''exocuticle''), உட்புறமாக, ஓரளவு நெகிழும் தன்மை கொண்ட, உறுதியான உட்புறத்தோலையும் (endocuticle) கொண்டிருக்கும்<ref name="Gullan and Cranston" />{{Rp|22–24}}. குடம்பி நிலை போன்ற மென்மையான உடல் கொண்ட நிலைகளில் இந்த புறவன்கூடு பெரிதும் ஒடுக்கப்பட்டிருக்கும்.
 
====தலை====
[[தலை]]ப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கிய பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.
 
====மார்பு====
மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு சோடிக் கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு சோடிச் சிறகுகளும் காணப்படும். மார்புப் பகுதியின் ஒவ்வொரு துண்டமும் நான்கு மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அவை முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதி, இரு பக்கமும் காணப்படும் பக்கவாட்டுப்பகுதிகள் ஆகும்<ref name="Gullan and Cranston" />.
 
====வயிறு====
வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும்<ref name="Gullan and Cranston"/>{{Rp|22–48}}. வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.
 
இவையே பூச்சிகளுக்கான பொதுமைப்பாடான வெளித்தோற்ற அமைப்பாக இருந்தபோதிலும், இதில் பல வேறுபாடுகள் காணப்படும்.
 
===உட்புறம்===
====நரம்புத் தொகுதி====
பூச்சிகளின் நரம்புத் தொகுதியானது மூளை, வயிற்றுப்புற நரம்பு அல்லது '''நாண்''' எனப்படும் இரு பாகங்களைக் கொண்டிருக்கின்றது. தலைப்பகுதியானது 6 துண்டங்கள் ஒன்றாக இணைந்த பகுதியாகும். இதில் ஒவ்வொரு துண்டத்திற்குமான ஒரு சோடி நரம்புக்கலத்திரள் அல்லது, ஒன்றாக இணைந்த நரம்புக் கலங்கள் மூளைக்கு வெளிப்புறமாகக் காணப்படும். இவற்றில் முதல் மூன்று சோடி நரம்புக்கலத்திரளும் மூளையுடன் இணைந்த நிலையிலும், அடுத்த மூன்று சோடியும் இணைந்தபடி [[உணவுக்குழாய்|உணவுக்குழாய்க்குக்]] கீழாகவும் காணப்படும்.<ref name="Gullan and Cranston" />{{Rp|57}}.
 
வரிசை 198:
ஒரு சில பூச்சிகளில் வலி போன்றவொரு உணர்வு அறியப்படுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன<ref>{{cite journal | title=Do insects feel pain? — A biological view | url=https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_1984-12-15_40_12/page/n119 | journal=Cellular and Molecular Life Sciences | last1=Eisemann | first1=WK et al. | year=1984 | volume=40 | pages=1420–1423}}</ref><ref>{{cite journal | title=painless, a Drosophila gene essential for nociception | journal=Cell | last1=Tracey | first1=J et al. | date=18 April 2003| volume=113 | issue=2 | pages=261–273 | doi=10.1016/S0092-8674(03)00272-1 | pmid=12705873 | last2=Wilson | first2=RI | last3=Laurent | first3=G | last4=Benzer | first4=S}}</ref>. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான கருத்திணக்கம் ஏற்படவில்லை<ref>{{cite web | title=Sentience and pain in invertebrates | last=Sømme | first=LS | date=14 January 2005 | publisher=Norwegian Scientific Committee for Food Safety | accessdate=30 September 2009 | url=<!-- http://google.com/scholar?q=cache:dbrbM20yEQ4J:scholar.google.com/&hl=en -->http://www.vkm.no/dav/413af9502e.pdf | archive-date=17 அக்டோபர் 2011 | archive-url=https://web.archive.org/web/20111017040616/http://www.vkm.no/dav/413af9502e.pdf |url-status=dead }}</ref>.
 
====சமிபாட்டுத் தொகுதி====
[[File:Evolution insect mouthparts coloured derivate.png|300px|thumb|வெவ்வேறு பூச்சிகளில் வெவ்வேறு வடிவில் விருத்தியடைந்த வாயுறுப்புக்கள்<br />A. [[வெட்டுக்கிளி]]யில் இருக்கும் ஆரம்ப வாயுறுப்பு, B. நக்கும் தன்மை கொண்ட [[தேனீ]]யின் வாயுறுப்பு, C. குழாய்வழி தன்மை கொண்ட [[பட்டாம்பூச்சி]]யின் வாயுறுப்பு, D. உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்ட பெண் [[கொசு|நுளம்பின்]] வாயுறுப்பு<br />
a. உணர்கொம்பு; c. கூட்டுக்கண்; lb. கீழுதடு; lr. மேலுதடு; md. கீழ்த்தாடை; mx. மேல்தாடை; hp. கீழ்த்தொண்டை]]
வரிசை 209:
சில பூச்சிகளில் சமிபாட்டுக்கான [[நொதியம்]] உடலின் வெளியே, [[உணவு|உணவின் மேல்]] சுரக்கப்பட்டு, அங்கேயே பகுதியாகச் [[சமிபாடு|சமிபாடடையச்]] செய்யப்பட்டு பின்னர் உள்ளெடுக்கப்படும்<ref name="Insect Physiology and Biochemistry">{{cite book|last=Nation|first=James L.|title=Insect Physiology and Biochemistry |publisher=CRC Press |year=2001 |edition=1st |chapter=Digestion |isbn=0-8493-1181-0 |url=http://books.google.com/?id=l3v2tOvz1uQC&pg=PA31}}</ref>{{Rp|31}}.
 
====பூச்சிகளின் சுவாசம்====
பூச்சிகளின் சுவாசம் [[நுரையீரல்]] இன்றியே நடைபெறும். பூச்சிகளின் உடலின் உட்புறத்தில் காற்றை அல்லது வாயுவைத் தீவிரமாக அல்லது பரவலாகக் கக்கக்கூடிய உள்குழாய்களின் தொகுதியும் காற்றுப் பைகளும் (''sac'') காணப்படுகின்றன. பிராணவாயு பூச்சிகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ஸ்பிரக்கிள் (''Spiracle'') என்று சொல்லப்படும் பகுதியினால் உள்வாங்கப்படுகின்றது. குடம்பிகள், போலவே சில பூச்சிகளுக்குப் [[பூக்கள்]] காணப்படுகின்றன. அவற்றின் மூலம் நீரில் கலந்துள்ள [[ஒட்சிசன்|ஆக்சியன்]] பூச்சிகள் உள்ளெடுக்கின்றன. சில பூச்சிகள் [[டொல்பின்|டொல்பின்கள்]] போல நீர்நிலைக்கு மேலே பாய்ந்து [[ஒட்சிசன்|காற்றை]] நிரப்புகின்றன. இச்செயற்பாடு பூச்சிகளில் உள்ள விசேட கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படலாம்.<ref>{{cite book|author=Merritt R.W; KW Cummins K.W. & Berg M.B.|title=An introduction to the aquatic insects Of North America|year=2007|publisher=Kendall Hunt Publishing Company|isbn=0-7575-4128-3}}</ref>
 
வரிசை 215:
(குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.)
{{அகரவரிசை பொருளடக்கம்}}
=== அ ===
* [[அட்டை]]
* [[அசுவினி]]
=== இ ===
* [[இலை சுருட்டி]]
* [[இராணுவப்புழு]]
* [[இலைப்பேன்]]
=== ஈ ===
* [[ஈ]], [[இலையான்]]
* [[ஈசல்]]
 
=== உ ===
* [[உன்னி]]
* [[உழுவான்]]
* [[உறைதாங்கிப்புழு]]
 
=== எ ===
* [[எறும்பு]]
 
=== க ===
* [[கரப்பான்]]
* [[கறையான்|யாழல்]]
வரிசை 245:
* [[கொம்புள் ஈ]]
 
=== ச ===
* [[சிலந்தி]]
 
=== த ===
* [[தம்பளப் பூச்சி]], [[பட்டுப் பூச்சி]]
* [[தத்தி]], [[கபிலநிறத் தாவரத்தத்தி]]
வரிசை 260:
* [[தேள்]]
 
=== ந ===
* [[நட்டுவக்காலி]]
* [[நுளம்பு]], [[கொசு]]
வரிசை 266:
* [[நெல் மூட்டிப்பூச்சி]]
 
=== ப ===
* [[பறக்கர பூச்சி]]
* [[பனிப்பூச்சி]]
வரிசை 273:
* [[பச்சை இலைத்தத்தி]]
 
=== ம ===
* [[மின்மினிப் பூச்சி]]
* [[மூட்டைப் பூச்சி]]
* [[மஞ்சள் சந்துகுத்தி]]
* [[மாவுப்பூச்சி]]
=== வ ===
* [[வண்ணத்துப்பூச்சி]], [[மசுக்கொட்டி]],
* [[வண்டு]]
"https://tamilar.wiki/w/பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது