பொனொபோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பாலியல் நட்புறவு ஒழுக்கம்: clean up, replaced: கூட்டு பாலியல் → கூட்டுப் பாலியல் using AWB
 
No edit summary
 
வரிசை 29:
 
== பெயர் ==
=== பொதுமை பெயர் ===
 
பொனொபோ என்னும் பெயர் முதன்முதலில் 1954ல் தான் காணப்பட்டது. எட்வர்டு திராட்ஃசு மற்றும் ஐன்சு ஃகெக்கு (Edward Tratz and Heinz Heck) இருவரும், குறள சிம்பன்சிகளுக்கு ஒரு புதிய, தனித்த பொதுப்பெயராக இந்த பெயரை சூட்டினார்கள். இந்த சொல் [[பண்ட்டு]] (Bantu) மொழியில் ''சிம்பன்சி'' அல்லது ''முன்னோர்'' என பொருள் தரும் சொல்லாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த சொல் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றின்]] கரையில் உள்ள பொலொபொ (Bolobo ) என்ற நகரின் பெயர்த்திரிபு ஆக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நகர் 1920ல்<ref>{{cite book | author=Sue Savage-Rumbaugh & Roger Lewin | title=Kanzi: the ape at the brink of the human mind | url=https://archive.org/details/kanziapeatbrinko00sava | year=1994 | publisher=John Wiley & Sons | pages=[https://archive.org/details/kanziapeatbrinko00sava/page/97 97]}}</ref> சிம்பன்சிகள் சேகரிப்பில் தொடர்பு படுத்தப்பட்டது.
 
=== உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் ===
 
பொனொபோவின் அறிவியல் பெயர் ''பான் பானிஸ்கஸ்'' (''Pan paniscus'') . முதல்கட்ட ஆய்வுகளின்படி இவற்றின் [[மரபணு]]க்கள் மாந்தர் இனத்துக்கு 98% ஒன்றிய பண்புகள் கொண்டதாக உள்ளன<ref>a b Colombus Zoo: Bonobo. Retrieved on 2006-08-01</ref>. அண்மைய ஆய்வுகள் கொரில்லாக்களை காட்டிலும் சிம்பன்ஸிகளே, மனித இனத்துக்கே நெருக்கமாக உள்ளன<ref>Takahata, N.; Satta, Y. & Klein, J. (1995). "Divergence time and population size in the lineage leading to modern humans". Theor Popul Biol 48 (2): 198-221. doi:10.1006/tpbi.1995.1026. </ref> என சொல்லுகின்றன. மிகவும் அண்மையில் நடைபெற்ற ஜீனோம் ஒப்புமைகளில் சிம்பன்ஸி மற்றும் மந்தர்களின் மரபணு ஒற்றுமைகளை அலசி ஆய்ந்ததில், இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமை அதன் அளவிலும் தன்மையிலும் மிக சிக்கலானதாகவே உள்ளன (complex both in extent and character) என தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், இவ்விரண்டினுடைய 5% ஜீனோம்களை<ref>The Chimpanzee Sequencing and Analysis Consortium (2005). "Initial sequence of the chimpanzee genome and comparison with the human genome". Nature 437: 69-87. doi:10.1038/nature04072. </ref> ஆய்ந்ததில், 35 மில்லியன் ஒற்றை நியூக்லியாய்டு மாற்றங்கள், ஐந்து மில்லியன் செருகல்/ நீக்கல் நிகழ்ச்சிகள், மற்றும் குரோமொசோம்களின் வரிசைமாற்றங்களை கண்டுள்ளார்கள். இந்த ஆய்வுகள் வழக்கமான சிம்பன்சியை கொண்டு நிகழ்த்தப்பட்டன். ஆயினும், பொனொபோவுக்கும் சிம்பன்சிக்கும் இடையே உள்ள வேற்றுமைகள், பொனொபோவை சிம்பன்சி இனத்தில் இருந்து பிரித்து விட போதுமான காரணமாக இல்லை.
வரிசை 51:
பொனொபோக்களின் இந்த பரவலான மதிப்பு தற்போது ஒரு சிலர் கேள்விக்கும் உரித்தாக இருக்கிறது. [[உயிரியல் பூங்கா]]க்களில் ஒன்றை ஒன்று தாக்கி கொள்வதும் குதறிக்கொள்வதும் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன். ஆனால் இந்த நிகழ்வுகள் காட்சியகங்களில் தாய் மகன்களை பிரித்து வைப்பதால் இருக்கலாம். பொனொபோ சமுதாயம் பெண்களின் ஆதிக்கம் கொண்டது என்பதால், தாய்க்கும் அதன் ஆண் வாரிசுகளுக்கும் இடையே உள்ள ஆயுள் முழுக்க நீடிக்கும் உறவை துண்டிப்பது, பெண்களின் வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். டி வால் (De Waal) என்பவர் பொனொபோக்களை காதல் விலங்குகளாக தீட்டுவதன் இடறுகளை எச்சரிக்கிறார், "எல்லா விலங்குகளும் இயற்கையாகவே தம்முள் போட்டி இடும், ஒரு குறிப்பான சூழல்களில் மட்டும் ஒத்துழைக்கும் தன்மையன. முதன்முதல், நான் சமாதான காதல் என்று எழுதியது என்னெனில் பொனொபோக்கள் இடையே பல மோதல்கள் இருந்தன். அவைகள் சிறந்த ஒற்றுமையுடன் இருந்தால் சமாதானம் ஏன் தேவைப்படும்?" இதற்கு மாறாக, சிம்பன்சிகளை போல், பொனொபோக்களிடையே, காடுகள் என்றாலும் காட்சியகங்கள் என்றாலும், சாவு நிகழ்த்தும் வன்முறைகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் இல்லை. ஆனால் சிம்பன்சிகளைபோல் போதுமான ஆய்வுகளை, காடுகளில் வாழும் பொனொபோக்கள் மேல் இன்னும் செய்யப்படாததால், அதன் கொலைவெறி வன்முறைத்தன்மை இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும்
 
=== பாலியல் நட்புறவு ஒழுக்கம் ===
 
பொனொபோ குழுமத்தில் [[பாலியல்]] [[கலவி]] (உடலுறவு) ஒரு பெரும் பங்கு கொள்கிறது. இந்த செய்கை, பிறரை வரவேற்பதாகவும், பிணக்குகளுக்கு தீர்வு காணும் வழியாகவும், தகராறுகளுக்குப்பின் [[நல்லிணக்கம்]] பெறுவதாகவும், பெண்கள் பெறும் உணவுக்கு கைமாறாகவும் பயன்படுகிறது. ஒரே ஒரு ஜோடி காங்கோ கொரில்லாக்கள் அன்றி<ref>Tuan C. Nguyen, "Gorillas Caught in Very Human Act" in ''Live Science'' (February 13, 2008)</ref>, பொனொபோக்கள் மட்டுமே மனித குரங்குகளில், மல்லாந்து கலவி செய்வது (பல தடவை பெண்-பெண், அடுத்து ஆண்- பெண், மற்றும் ஆண்- ஆண்), நாவால் வருடி முத்தம் இடுவது மற்றும் [[வாய்வழிப் பாலுறவு]] போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை கவனித்துள்ளார்கள். மிக அண்மையில் கொரில்லாக்களும் மல்லாந்து கலவி செய்தலை கவனித்து உள்ளார்கள்.<ref name=Manson1997>{{cite journal | author = Manson, J.H. | coauthors = Perry, S.; Parish, A.R. | year = 1997 | title = Nonconceptive Sexual Behavior in Bonobos and Capuchins | journal = International Journal of Primatology | volume = 18 | issue = 5 | pages = 767-786 | url = http://www.springerlink.com/index/XWL85258JJ114088.pdf | accessdate = 2008-03-16 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> In scientific literature, the female-female sex is often referred to as ''GG rubbing'' or ''genital-genital rubbing'', while male-male sex is sometimes referred to as ''[[penis fencing]]''.<ref name=penisfencing>{{cite book | author= Frans B. M. de Waal |authorlink= Frans de Waal| title=The ape and the sushi master : cultural reflections by a primatologist | year= 2001 | url= https://archive.org/details/apesushimastercu0000waal | year 2001 | publisher=Basic Books | chapter=Bonobos and Fig Leaves}}</ref><ref>[http://primate.uchicago.edu/DeWaalSciAm.doc Bonobo Sex and Society] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304000549/http://primate.uchicago.edu/DeWaalSciAm.doc |date=2016-03-04 }}, by: de Waal, Frans B.M., ''[[Scientific American]]'', 00368733, Mar95, Vol. 272, Issue 3 (Word document) "They also practice so-called penis-fencing, in which two males hang face to face from a branch while rubbing their erect penises together."</ref>
வரிசை 65:
கிரெய்க் ஸ்டான்ஃபோர்ட் (Craig Stanford) எனும் அமெரிக்க முதனியியலார் (primatologist), பொதுவான சிம்பன்சிகளை காட்டிலும், பொனொபோக்கள் அதிக பாலியல் உறவு மேற்கொள்வன அல்ல என்ற அறைகூவல் விடுகிறார். அவர், இயற்கையான வாழ்விடங்களில், ஏற்கனவே உள்ள சிம்பன்சி மற்றும் பொனொபோக்களின் [[புள்ளியியல்|புள்ளி விவரங்களை]] ஒப்பிட்டு, பெண் பொனொபோக்கள் புணர்ச்சி செய்யும் எண்ணிகைக்கு ஒப்ப பெண் சிம்பன்சிகளும் புணர்ச்சி செய்கின்றன் என்றும், ஆண் சிம்பன்சிகளோ ஆண் பொனொபோக்களை காட்டிலும் அதிகமாகவே புணர்ச்சியில் ஈடுபட்டன<ref>{{cite journal | author = Stanford, C. B. | year = 1998 | title = The social behavior of chimpanzees and bonobos | url = https://archive.org/details/sim_current-anthropology_1998-06_39_3/page/n107 | journal = Current Anthropology | volume = 39 | pages = 399–407}}</ref> என்றும் கண்டார். ஆனால் இவரது ஒப்பீடு, பொனொபோக்கள் இடையே பரவலாக காணப்படும் [[ஓரினச்சேர்க்கை|ஓரின பாலுறவுகளை]] கணக்கில் சேர்க்கவில்லை. டீ வால் (De Waal) என்பவரின் பொனொபோ பற்றிய நூல், களப்பணியாளர்களின் பேட்டிகள், மற்றும் காடுவாழ் பொனொபோக்களொடு இருபது ஆண்டுகள் பணியாற்றியவரான டாக்யோஷி கனொ Takayoshi Kano<ref>{{cite book | author = Kano, Takayoshi | year = 1992 | title = The Last Ape: Pygmy Chimpanzee Behavior and Ecology | location | Stanford, CA | publisher = Stanford University Press}}</ref> என்பாரது குறிப்புக்களையும் கொண்டுள்ளது. ஜெர்மன், லெய்ப்ச்ஜிக் நகர மேக்ஸ் ப்ளாங்க் தளிர்ப்புநிலை மாந்தரியலுக்கான நிறுவனத்தில் (Max Planck Institute for Evolutionary Anthropology of Leipzig, Germany) துணை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் காட்ப்ரைடு ஹாப்மான் (Gottfried Hohmann) ஆப்பிரிக்காவில் கண்டறிந்தவைகளில் இருந்து, பொனொபோக்களிடை குறிப்பிடத்தக்க வன்முறை உள்ளது என தெரிகிறது. ஆனாலும் சாவு நிகழ்த்தும் வன்முறைகள் சிம்பன்சிகள் இடையே சான்றுகளோடு இருக்க, பொனோக்களிடம் அவை இருப்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பது மட்டும் மிகவும் உண்மை.<ref>{{cite web | year = 2007 | title = Bonobos Left and Right | work = The Skeptic | url = http://www.skeptic.com/eskeptic/07-08-08.html}}</ref>
 
=== சமூகம் சார்ந்த பிற நடத்தைகள் ===
 
பெண் பொனொபோக்கள் ஆணைவிட உருவத்தில் சற்று சிறியதாக இருந்தாலும், சமூகத்தில் உயர் மதிப்பிடத்தை கொண்டுள்ளன. பெண்களிடையேயான இந்த வலிமையான ஒட்டுறவு, பெண் குழுக்கள் பொனொபோ சமுதாயத்தில் மேலாதிக்கம் கொள்ள செய்கிறது. ஆண், பெண்கள் இடையே ஆதிக்க போட்டிகள் காண்பது மிக அரிது. அதேபோல் குழந்தைகள் சிறாரிடம் ஆண் பொனொபோக்கள் மிகுந்த பொறுமையை கொண்டுள்ளன. ஆணின் மதிப்பிடம் அதன் தாயின் மதிப்பிடத்தை பொறுத்தது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒட்டுறவு அதன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வலுவோடு இருக்கின்றது. சமூகத்தில் ஏற்றத்தாழவுகள் இருப்பினும், பிற முதனி சமூகங்களில் தென்படுவது போல். ஒன்றின் மதிப்பிடம் அதற்கு எவ்வித முக்கியப் பங்கும் தருவது இல்லை.
வரிசை 71:
பொனொபோக்கள் விடியல் முதல் கருக்கல் வரை பிரிதல்-சேர்தல் பாணியில் சுறுசுறுப்பாக இருக்கும். நூறு எண்ணிக்கை உடைய ஒரு கூட்டம் பகலில் உணவு தேடல் பொருட்டு சிறிய குழுக்களாக பிரிந்து, இரவில் உறங்குவதற்காக மீண்டும் ஒன்றாக சேரும். இவைகள் மரங்களின் மேல் கூடுகள் அமைத்து அவற்றில் உறங்கும். பிற குரங்குகளை வேட்டை ஆடும் சிம்பன்சிகளைப் போல் அல்லாமல், பொனொபோக்கள் அடிப்படையில் கனி வகைகளை உண்பவையே. இருந்தும், அவை பூச்சிகளையும், சில நேரங்களில் அணில், மான் இனத்தில் ஒருவகையான டியூக்கர் (duiker) போன்ற சிறு [[பாலூட்டி]]களை கைப்பற்றுவதையும் கவனித்து உள்ளார்கள்.
 
=== மாந்தரினத்துக்கு நெருக்கம் ===
[[படிமம்:A Bonobo at the San Diego Zoo "fishing" for termites.jpg|thumb|[[கறையான்]]களைக் கவர்ந்து பிடித்து உண்ணும் பொனொபோ]]
பொனொபோக்கள், [[கண்ணாடி கொண்டு தன்னை அறியும் சோதனை]]களில் தேர்ச்சி பெறும் திறன் உள்ளவை. அவைகள் முதன்மையாக குரல் ஒலியால் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றன என்றாலும், அந்த குரல் ஒலிகளின் பொருள் இன்னும் விளங்கப்படவில்லை. இருந்தாலும் அவைகளின் முகவெளிப்பாடுகளை<ref>a b Colombus Zoo: Bonobo. Retrieved on 2006-08-01.</ref>, மற்றும் "தன்னோடு வந்து விளையாடு" என கேட்கும் இயற்கையான கையால் செய்யும் சைகைகளை மனிதர்கள் புரிந்துகொள்ளலாம். Great Ape Trust எனும் நிறுவனத்தை சேர்ந்த கான்சி மற்றும் பான்பனிசா (Kanzi and Panbanisha) எனும் இரண்டு பொனொபோக்களுக்கு 3000 க்கும் மேலான சொற்களை பயிற்றுவித்ததில் அவற்றை [[வரைகணிதம்|வரைகணிதக்]] குறியீடுகளைக் கொண்டு (lexigrams or geometric symbols) அடையாளம் காட்டும் வல்லமை பெற்றுள்ளன. மேலும் அவை பேசப்படும் சொற்றொடர்களுக்கு ஏற்ப செயல்படும் திறனும் கொண்டன. இதனால், [[மெய்யியல்|மெய்யியலார்]] மற்றும் உயிர்களிடை அறம்பேணுவோரான (philosopher and bioethicist Peter Singer) பீட்டர் சிங்கர் போன்றோர் சிலர், இதுபோன்ற ஆய்வு முடிவுகள், மனிதர்கள் பிறருக்கு கொள்கை அளவில் தரும் வாழும் உரிமையை, பொனொபோக்களும் பெறும் தகுதி கொண்டன என்று வாதிடுகிறார்கள்.
"https://tamilar.wiki/w/பொனொபோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது