பொம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 41:
 
== இந்திய பொம்மைகள் ==
=== நவராத்திரி வழிபாடும் பொம்மைகளும் ===
[[கொலு]]<ref>{{Cite web |url=http://www.hindu.com/2011/01/12/stories/2011011261670200.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-05-20 |archive-date=2014-06-26 |archive-url=https://web.archive.org/web/20140626104254/http://www.hindu.com/2011/01/12/stories/2011011261670200.htm |url-status=dead }}</ref> என்பது இந்து சமயத்தில் தெய்வ மற்றும் சான்றோர்களின் சிறிய பொம்மைகளை படிப்படியாக வைத்து ஒன்பது இரவுகளுக்கு நவசக்தி விழாவில் வழிபாடு நடத்துவதாகும். [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]] போன்ற தென்னிந்திய மாநிலங்களில் நவராத்திரியின் போது தெய்வ சிற்றுருக்கள் வரிசையாக முறைப்படுத்தப் பட்டிருக்கும். மகளிரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக பொம்மைகளின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் இருக்கும்.
[[படிமம்:Navratri Golu.jpg|thumb|200px|right]]
வரிசை 50:
இந்திய நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக [[பரதம்]], [[கதகளி]], [[தாண்டியா]], [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]], [[கரகாட்டம்]], [[பொய்க்கால் குதிரை]], போன்ற நடன அமைப்பைக் கொண்ட நடன பொம்மைகளும் இடம் பெறும். சமூக மாதிரி வடிவங்களாக சிறுசிறு பொம்மைகள் பல்வேறு விழாக்கள், அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், தொழில் நிலையங்கள் போன்றவற்றின் மாதிரிகளாகவும் இடம் பெற்றிருக்கும்.
 
=== தஞ்சை பொம்மைகள் ===
தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும்.
[[படிமம்:A Tanjore doll.jpg|thumb|100px|தஞ்சை பொம்மை]]
==== தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ====
மண்ணில் செய்யப்பட்டு பலவகை வண்ணம் பூசப்பட்ட இவ்வகைப் பொம்மைகளின் தலை சிறிய கம்பியினால் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டு ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்டு அல்லது சமதளத்தில் தலை மட்டும் உச்சியில் தணித்து ஆடிய வண்ணம் இருக்கும். சான்றாக செட்டியார், செட்டிச்சி பொம்மைகள் சம்மணமிட்டு சிரித்த வண்ணம் தலையை அசைத்த வண்ணமிருக்கும்.
 
==== சாய்ந்தாடும் பொம்மை ====
தலை, உடல் ஆகியன ஒன்றிணைத்து கூம்பு வடிவில் சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலிருக்கும். மேலும் இதனுள் அதிக எடையுள்ள சிறிய கோலிக்குண்டு ஒன்றும் உள்ளது. மேற்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் ஆடும் நிலைப்பாட்டுடன் எவ்வாறு அசைத்தாலும் அசைந்தாடும். புவியீர்ப்பு விசையின் காரணமாக இறுதியில் நேர் செங்குத்தாக நிலை நிறுத்தப்படும்.
 
==== நடன மங்கை பொம்மை ====
தலை, உடல் ஆகியன தனித்தனி கம்பிகளால் தனித்துவிடப்பட்டு சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் தலைப்பாகம் தனிக்கம்பியுடனும், அடிப்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் இவை அசைந்தாடும். தலை, உடல், பாதம் என அனைத்தும் தனிதிருக்கும் நடன மங்கை பொம்மை வகை [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[காஞ்சிபுரம்]] போன்ற இடங்களிலிருந்து தருவிக்கப் படுகிறது.
 
இந்திய அரசால் 2008-09ஆம் ஆண்டு [[தலையாட்டி பொம்மை]]களுக்கு [[புவிசார் குறியீடு]] பெற்றது குறிப்பிடத்தக்கது.<ref name="GI">{{cite web|url=http://ipindia.nic.in/girindia/|title=Geographical indication|publisher=Government of India|access-date=28 June 2015|archive-date=26 ஆகஸ்ட் 2013|archive-url=https://web.archive.org/web/20130826183844/http://ipindia.nic.in/girindia/|url-status=dead}}</ref>
 
=== மரப்பாச்சி பொம்மைகள் ===
[[மரப்பாச்சி பொம்மைகள்]], இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்திய [[ஈட்டி]] மரத்தால் செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட பொம்மைகளாகும். இப்பொம்மைகள் பல்வேறு குடும்ப உறவுகளை விளக்கும் விதமாகவும், கடவுளின் சிற்றுருவாகவும் அமைந்திருக்கும்.
 
வரிசை 70:
 
[[படிமம்:Channapatna-toys.jpg|thumb|150px|சன்னப்பட்டின பொம்மைகள்]]
=== சன்னப்பட்டின பொம்மைகள் ===
கர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. [[பாவாஸ் மியான்]] சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார்.
 
== வகைகள் ==
=== கட்டுமான பொம்மைகள் ===
கட்டிட வடிவிலான ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும் பொம்மைகள் இவ்வகையிலானவை. சிறுசிறு அச்சுகள் ஒன்று சேர்ந்து ஒரு உருவ அமைப்பைத் தாங்குதல் போன்று வடிவம் பெறும்.
 
=== கைப்பாவைகள் (அ) சிற்றுருக்கள் ===
மனித, விலங்கு, கற்பனைக் கதாபாத்திரம், போன்றனவற்றின் சிற்றுருக்கள் அல்லது சிறிய கையடக்கப் பாவைகள் இவ்வகையின.
 
=== வண்டி வடிவங்கள் (அ) சிறுத்தேர் பொம்மைகள்===
சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து சிறு வடத்தின் மூலம் இழுத்துச்செல்ல இயலும் வண்டிகள் மற்றும் சிறிய தேர்வகைப் பொருத்தப்பட்ட பொம்மைகள். பொதுவாக ஆண் சிறார்களால் அதிகம் விரும்பப்படுவதும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிறுத்தேர் விளையாட்டுடன் இப்பொம்மைகள் ஒப்பு நோக்கப்படுகின்றன.
 
=== தானியங்கி பொம்மைகள் ===
உரோபட்டுகள் எனப்படும் எந்திர தானியங்கிகள் [[மின்கலம்|மின்கல]] மின்னூட்டம் மூலம் பொம்மைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அசைவு சமிக்ஞைகள், சிறு ஒளி விளக்குகள், ஒலிப்பான்கள் மூலம் குழந்தைகளைக் கவருகின்றன.
 
=== அசைவுறும் பொம்மைகள் ===
தானாக அசையும் படியான எந்திர பொம்மைகள் சாவிகள் மூலமாக எந்திர சக்கரம் அல்லது சுருள்களினால் சுழற்றப்படுகின்றன. இதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடல், தாவல், சுழலுதல், உருளுதல் போன்ற முறைகள் மூலம் அசைகின்றன.
 
"https://tamilar.wiki/w/பொம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது