மாசி சடையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''மாசி சடையன்''' (''Masi Sadaiyan'') என்பவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தினைச் சேர்ந்த புகழ்பெற்ற பாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''மாசி சடையன்''' (''Masi Sadaiyan'') என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தினைச்]] சேர்ந்த புகழ்பெற்ற [[பாம்பு]] பிடிப்பவர். 2023-ஆம் ஆண்டில் சமுதாயப் பணியாற்றியமைக்காக வடிவேல் கோபாலுடன் இணைந்து [[இந்திய அரசு]] குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது உயரிய விருதான [[பத்மசிறீ]] விருதினைப் பெற்றவர். [[இருளர்]] சமூகத்தினரான இவர், இருளர் பாம்புப் பிடிப்புக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் [[நச்சுப் பாம்பு]] உள்ளிட்ட பலவகைப் பாம்புகளையும் இருளர்களின் பாரம்பரிய முறைப்படி பிடிப்பவர்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/bravehearts-vadivel-and-sadaiyan-shine-a-light-for-irula-cooperative/article66464742.ece |title=Bravehearts Vadivel and Sadaiyan shine a light for Irula cooperative |last=Srimathi |first=Geetha |date=2023-02-02 |website=The Hindu |language=en-IN |access-date=2023-02-03}}</ref>
 
பல ஆண்டுகளாக பல்வேறு மனித வாழிடங்களில் காணப்படும் நச்சுப் பாம்புகளை பிடித்து மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். இப்பாம்புகளிலிருந்து [[நஞ்சு|நச்சினை]] எடுத்து மருந்தாகப் பயன்படுத்த உதவியதோடு, பிடிக்கும் பாம்புகளை வனத்தில் இட்டு [[உயிரியற் பல்வகைமை|பல்லுயிர் பெருக்கத்திற்கும்]] தனது பங்களிப்பினைப் பதினாறாவது வயது முதல் செய்து வருகின்றார். இவரது பணியினைப் பாராட்டும் வகையில் இவருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்மசிறீ விருதினை இந்திய அரசு வழங்கியுள்ளது. இவருடன் பாம்புகளைப் பிடிக்கும் வடிவேல் கோபாலும் இந்த விருதினைப் பெறுகிறார்.<ref>{{Cite web |url=https://tamil.abplive.com/news/tamil-nadu/padma-awards-2023-masi-sadaiyan-vadivel-gopal-from-tamil-nadu-to-receive-padma-shri-award-98254 |title=இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபாலுக்கு பத்மஸ்ரீ விருது - மக்கள் மகிழ்ச்சி |last=சுகுமாறன் |date=2023-01-25 |website=tamil.abplive.com |language=ta |access-date=2023-02-03}}</ref> இவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பலபகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்துள்ளனர்.
 
[[உரோமுலசு விட்டேக்கர்|உரோமுலசு விட்டேக்கரின்]] உதவியுடன் 2016ஆம் ஆண்டு [[தாய்லாந்து]]க்குச் சென்று [[ராஜநாகம்|ராஜநாகங்களையும்]] 2017ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[புளோரிடா]] மாநிலத்திற்குச் சென்று, பிடிப்பதற்கு அரிய பர்மிய பைத்தான் வகை பாம்புகளையும் பிடித்துள்ளனர்.<ref>https://tamil.oneindia.com/news/chennai/padma-shri-award-for-snake-catchers-vadivel-gopal-and-masi-sadaiyan-from-tamilnadu/articlecontent-pf851861-495910.html</ref><ref>{{Cite web |url=https://www.bbc.com/tamil/articles/c84ezvv3w2no |title="பத்மஸ்ரீ விருதுன்னா என்ன?" விஷ பாம்புகளை பிடிக்கும் இந்த தமிழர்கள் இப்படி கேட்டது ஏன்? |date=2023-01-26 |website=BBC News தமிழ் |language=ta |access-date=2023-02-03}}</ref>
வரிசை 8:
{{Reflist}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:இருளர்]]
"https://tamilar.wiki/w/மாசி_சடையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது