மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{taxobox |name = மீன் |fossil_range = <br/>இடை காம்பீரிய காலம்-தற்போது வரை |image = Georgia Aquarium - Giant Grouper edit.jpg |image_caption = பெருங்களவாய் மீன் |regnum= விலங்கினம் |phylum = முதுகுநாணி |subphylum = மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
வரிசை 9:
}}
 
'''மீன்''' (''fish'') என்பது [[நீர்|நீரில்]] வாழும் [[முதுகெலும்பி|முதுகெலும்பு]] உள்ள ஒரு [[விலங்கு]] [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். கயல் என்ற சொல்லும் மீனைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றை நான்கு [[கால்|கால்கள்]] இல்லா முதுகெலும்புள்ள [[நீர்]] வாழ் [[உயிரினம்]] என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது [[தலை]], [[உடல்]], வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்குத் தனியாகக் [[கழுத்து]]<nowiki/>ப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடு[[முதுகுநாண்|முதுகு]]<nowiki/>த் துடுப்புகளாலும் [[நீச்சல்|நீந்திச்]] செல்கின்றன.
 
பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவை தங்கள் [[உடல்]] வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். ஆனாலும் வெள்ளை [[சுறா]], [[சூரை மீன்]] போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.<ref>{{cite journal |last=Goldman |first=K.J. |title=Regulation of body temperature in the white shark, ''Carcharodon carcharias'' |journal=Journal of Comparative Physiology |year=1997 |volume=167 |series=B Biochemical Systemic and Environmental Physiology |issue=6 |pages=423–429 |doi=10.1007/s003600050092 |url=http://www.mendeley.com/research/temperature-and-activities-of-a-white-shark-carcharodon-carcharias/ |accessdate=12 October 2011 |archive-date=6 ஏப்ரல் 2012 |archive-url=https://web.archive.org/web/20120406114844/http://www.mendeley.com/research/temperature-and-activities-of-a-white-shark-carcharodon-carcharias/ |url-status=dead }}</ref><ref>{{cite journal|last=Carey|first=F.G.|author2=Lawson, K.D.|title=Temperature regulation in free-swimming bluefin tuna|journal=Comparative Biochemistry and Physiology A| date=February 1973 |volume=44|issue=2|pages=375–392|doi=10.1016/0300-9629(73)90490-8}}</ref>
வரிசை 155:
ஓபர்குலம் (செவுள்மூடி), (2) – பக்கக்கோடு, (3) – முதுகுத்துடுப்பு, (4) – கொழுமியத்துடுப்பு, (5) – வால் பகுதி, (6) – வால்துடுப்பு, (7) – குதத்துடுப்பு, (8) – ஒளிக்கால்கள், (9) – இடுப்புத்துடுப்புகள் (இணை), (10) – மார்புத்துடுப்புகள் (இணை)]]
 
=== உடலமைப்பு ===
மீனின் உடலமானது, தலை, நடுவுடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.
 
வரிசை 165:
சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில இனங்கள் உடல் முழுதும் பல நிறக் கோலங்களையும், கோடுகளையும், திட்டுகளையும் கொண்டவையாக இருக்கும்.
 
=== சுவாச மண்டலம் ===
இவை [[செவுள்|செவுள்கள்]], [[நுரையீரல்|நுரையீரலால்]] சுவாசிக்கின்றன.
 
==== செவுள்கள் ====
5-7 இணைகள் செவுள் பிளவுகளைக் கொண்டுள்ளன. செவுள்களின் மீது செவுள்மூடி காணப்படுகிறது.
 
==== காற்று சுவாசம் ====
சில மீன்கள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன. சில மீன்கள் காற்றுபை முலம் மிதக்கின்றன
 
=== இரத்தச் சுழற்சி மண்டலம் ===
மீன் ஒரு மூடிய-வளைய இரத்த ஓட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இதயம் உடல் முழுவதும் ஒரு வளையத்துள் இரத்தத்தை இயக்குகிறது. பெரும்பாலான மீன்களில், இதயத்தில் நான்கு பகுதிகளைக்கொண்டுள்ளன, இதில் இரண்டு அறைகள், நுழைவுப்பகுதி மற்றும் வெளியேறும் பகுதி என நான்கு கூறுகளாக உள்ளன. இதன் முதல் பகுதி சைனஸ் வெனோசஸ் ஆகும். இது ஒரு மெல்லிய தசையறையைக் கொண்டுள்ளது. இது சிரைகளிலிருந்து இரத்தத்தை இரண்டாவது பகுதிக்கு கடத்துகின்றது. தமனி ஒரு கூறு புகவிடும் தன்மையது. இது மூன்றாம் பகுதியான சிரைக்கு இரத்தத்தை அனுப்புகிறது. நான்காவது பகுதிக்கு இரத்தத்தை முடுக்குவது பல்பஸ் அர்ட்ரியோஸஸ் எனும் பகுதி ஆகும். இதன் மூலம் இரத்தம் ஆக்ஸிஜனேற்றத்திற்கான ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
 
=== உணவுச்செரிமான மண்டலம் ===
உணவுப்பாதையில் தெளிவான [[இரைப்பை]], [[கணையம்]], போன்ற உறுப்புகள் உண்டு.
 
=== கழிவு நீக்க மண்டலம் ===
[[சிறுநீரகம்]] மீசோநெஃப்ரிக் வகையைச் சார்ந்தது.
 
=== தோல் - செதில்கள் ===
[[செதில்கள்]] பிளக்காய்டு, சைக்ளாய்டு, டீனாய்டு, கேனாய்டு எனப் பலவகைகள் உண்டு.
 
=== மத்திய நரம்பு மண்டலம் ===
 
=== உணர்வு உறுப்புகள் ===
பெரும்பாலான மீனினங்கள் மேம்பட்ட உணர்வு உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா பகல் வேளையிலும் ஒரு மனிதனைப் போன்றே வண்ணன்களை அறியும் பார்வைத்திறன்களை மீன்கள் பெற்றுள்ளன. பல மீனினங்கள் சுவை, மணம் அறியும் திறன் பெற்ற அசாதாரண உணர்வுறுப்புகளான வேதிவுணர்விகளை (கீமோரெசப்டார்ஸ்) கொண்டுள்ளன. பெரும்பாலான மீன்களின் உணர்திறன் அவற்றின் பக்கவாட்டு கோடு களில் உள்ளன, இது மென்மையான நீரோட்டங்களையும், அதிர்வுகளையும் கண்டறிந்து, அருகிலுள்ள மீன், இரையை அணுகத்தூண்டுகிறது.
 
வரிசை 195:
மீன்கள் உள்ளத்தில் வரைபடமாக இடங்கள், சமிக்ஞைகள், அடையாளங்கள், அமைவிடச்சின்னங்கள், போன்றவற்றை நினைவுகூர்கின்றன. இவற்றின் சிறப்பான நினைவகம் மற்றும் காட்சி பாகுபாடறியும் திறன் ஆகியன அறிவியல் அதிசயங்களாகும்.
 
===== கேட்டல் திறன் =====
பெரும்பாலான மீனினங்களில் கேட்டல் திறன் மிக முக்கிய உணர்திறன் ஆகும். அவற்றின் பக்கவாட்டு கோடுகளினாலும், அவற்றின் காதுகளைப் பயன்படுத்தியும் மீன்கள் உணர்வு ஒலிகளை அறிந்துகொள்கின்றன. மீன்களுக்கு காதுகள் இருந்தாலும், பல மீன்களால் நன்றாக கேட்க இயலுவதில்லை.
 
===== பார்வைத்திறன் =====
பெரும்பாலான விலங்குகளுக்கு பார்வைத்திறன் ஒரு முக்கிய உணர்திறனாகும். மீன்களுக்கும் நிலவாழ் முதுகெலும்பிகளான பறவைகள், பாலூட்டிகளைப் போன்ற, அதேசமயத்தில் ஒப்புமையில் பெரிய கோளவடிவ வில்லைகளாக இருக்கின்றன. இவற்றின் விழித்திரை (ரெடினாக்கள்) பொதுவாக தண்டு, கூம்பு வடிவமுடையவை. இதனால் இருள் [ஸ்கோட்டோபிக்] மற்றும் ஒளியறிதல் திறன், சில சிற்றினங்கள் வண்ணமறியும் திறனும் பெற்றுள்ளன. சில மீன்கள் புற ஊதாக்கதிரையும், சில மீன்கள் துருவமுனைப்பு ஒளியியும் காண இயலும். தாடையற்ற மீன்களுள், லேம்ப்ரே மீன் இனங்கள் நன்கு வளர்ந்த கண்களைக் கொண்டன. அதேவேளையில் ஹேக் மீனினம் மட்டும் பழமையான ஒளிநேர்ப்பகுதியைக் கொண்டிருக்கின்றன. மீன் பார்வைதிறன் காட்சி சூழலுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கின்றன. உதாரணமாக ஆழ்கடல் மீன்கள் இருண்ட சூழலுக்குத் தகுந்தாற்போல் மிகவும் பொருத்தமாக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன.
 
==== வெப்பத் தகவமைப்பு ====
மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை [[சூழ்வெப்பநிலை விலங்குகள்]] என்று சொல்வர். சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்ட்டிக் பெருங்கடல்]] போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன.
 
=== இனப்பெருக்க அமைப்பு ===
மீன்கள் முட்டையிட்டு படிநிலைகளில் குஞ்சுகளைப் பெறுபவை. இவற்றில் ஒரு பாலினக் கருவுறல் உடலினுள்ளோ அல்லது வெளிபுறத்திலோ நிகழலாம். எ.கா. [[சுறா]], [[கட்லா மீன்|கட்லா]]
 
=== அழிவுறும் நிலை ===
* எக்கச்சக்கமாக மீன்களைப் பிடித்தல்
* கடல் எச்சங்கள், கதிரியக்கக் கழிவுகள்
வரிசை 213:
* [[நீர் மாசுபாடு]]
 
=== முக்கியத்துவம் ===
* மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகச் சந்தையில் பெரும்பங்காற்றுகின்றன. இந்தியாவிலிருந்து பெரும்பான்மையான மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
* உணவிற்காக மீன் வளர்த்தல் - பெரும்பாலான கடல் மீன்களும், நன்னீர் மீன்களும் உணவிற்காக பிடிக்கப்பட்டு சமைத்து உண்ணப்படுகின்றன. [[சாளை]], [[நெத்திலி]], கிழாத்தி, [[வாளை மீன்|வாளை]], நவரை, [[இறால்]] போன்றவை உணவிற்காக பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் கடல் மீன் வகைகளாகும்.
"https://tamilar.wiki/w/மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது