மெல்லுடலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jeya Ruby VVV
No edit summary
 
No edit summary
 
வரிசை 92:
மெல்லுடலிகளின் உடல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் தலை, உடல் மற்றும் பாதம் ஆகும். முளையவியலின் அடிப்படையில் இவை [[புரொட்டோஸ்டோம்]] விலங்குகளாகும். இவற்றின் உடல் புற,இடை,அக முதலுருப் படைகளான Triploblastica விலங்குகளாகும்.
 
=== சுற்றோட்டத் தொகுதி ===
 
அனேகமான மெல்லுடலிகளின் சுற்றோட்டத் தொகுதி திறந்த சுற்றோட்டத் தொகுதியாகும். இவற்றில் உடற்குழி காணப்பட்டாலும் உடலுறுப்புக்களைச் சுற்றியுள்ள சொற்பளவு பாய்பொருளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உடற்குழியை விட குருதிக் குழியே சிறப்பாக விருத்தியடைந்துள்ளது. இக்குருதிக் குழி நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்பட்டு மென்னுடலியின் உடலுக்கு ஓரளவு வலிமையைத் தருகின்றது. குருதியில் பிரதான [[ஆக்சிசன்]] காவியாக ஈமோசையனின் நிறப்பொருள் உள்ளது. இதில் முள்ளந்தண்டுளிகளில் உள்ள இரும்புக்குப் பதிலாக [[செம்பு]] உலோகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
=== சமிபாடு ===
{{Annotated image/நத்தையின் வறுகி}}
மெல்லுடலிகள் தசைப்பிடிப்பான வாயையும், கைட்டினால் ஆக்கப்பட்ட வறுகியையும் கொண்டுள்ளன. வறுகியில் கைட்டினால் ஆன ''பற்கள்'' உள்ளன. இப்பற்கள் உணவுண்ணும் போது இழக்கப்பட மீண்டும் மீண்டும் வளர்வனவாகும். வறுகியைப் பயன்படுத்தி அல்காப் படைகளைச் சுரண்டி உட்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் சீதமும் பிசிரும் உள்ளன. சீதமும் பிசிரும் உணவை சமிபாட்டுத் தொகுதியின் உட்பகுதியை நோக்கித் தள்ளி விடுவதில் உதவுகின்றன. உட்கொள்ளப்படும் உணவில் கனியுப்புக்கள் வேறாகவும், உணவுப் பகுதி வேறாகவும் சமிபாடு செய்யப்படுகின்றன. உணவு ''சீக்கம்'' எனும் வெளியேறும் துளையற்ற பகுதியினுள் சேதன உணவு அகத்துறிஞ்சப்படுகின்றது. கனியுப்புக்களில் மேலதிகமானவை வெளியேற்றப்படுகின்றன.
பிசிர்களால் உணவுத்துகள்களை வடித்துண்ணுகின்ற இருவால்விகளில் வறுகி காணப்படுவதில்லை.
 
=== சுவாசத் தொகுதி ===
 
பெரும்பாலான மெல்லுடலிகள் [[மீன்|மீன்களைப்]] போன்று [[செவுள்|செவுள்கள்களால்]] சுவாசிக்கின்றன. அனேகமான இனங்களில் இரண்டு சோடிப் [[செவுள்|செவுள்கள்களும்]] சிலவற்றில் ஒரு [[செவுள்]] மட்டுமே காணப்படும். செவுள்கள் இறகு போன்ற வடிவத்துடன் காணப்படுகிறது. சில [[சிற்றினங்கள்|சிற்றினங்களில்]] வெவுள்கள் ஒரு பக்கம் இழையங்களைக் கொண்டுள்ளன.அவை உடலின் உட்பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது அதனால் [[தண்ணீர்]] கீழே அடிப் பரப்பருகே உள்ளிழுத்து, மேல் நோக்கி வெளியேறும்.செவுள்களில் உள்ள இறகு அமைப்பானது மூன்று வகையான குறு இழைத் தூவிகளைக் (cillia) கொண்டிருக்கும்.அவற்றுள் ஒன்று உட்செல்லும் நீரினை உட்பகுதிக்குள் அனுப்புகிறது. மற்ற இரு தூவிகளும் செவுள்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.மெல்லுடலிகளில் காணப்படும் ஆஸ்பரேடியா என்றழைக்கப்படும் கடுமணவுணரி ஏதேனும் வேதிய [[நச்சுப்பொருள்|நச்சுக்களை]] அடையாளம் கண்டுகொண்டால் உடல் பகுதிக்குள் வண்டல்படிவுகளை உட்செலுத்துகிறது. மேலும் நச்சுகள் நிற்கும் வரை தூவிகள் இயங்குவதை நிறுத்துகிறது.ஒவ்வொரு செவுள்களும் உட்குழிக்குள் உள்நுழையும் [[குருதிக் குழாய்|குருதிக் குழாயையும்]] [[இதயம்|இதயத்திற்கு]] வெளிச்செலுத்தும் வெளிக்குழாயையும் கொண்டுள்ளன.
 
=== இனப்பெருக்கம் ===
{{Annotated image/Trochophore larva}}
பெரும்பாலான இனங்கள் ஒருபாலானவை. சில நத்தையினங்கள் இருபாலானவை. மெல்லுடலிகள் முட்டையீனும் உயிரினங்களாகும். அனேகமான இனங்களில் புறக்கருக்கட்டலே நிகழ்கின்றது. கருக்கட்டலின் பின் சக்கரந்தாங்கிக் குடம்பி, வெலிஜர் குடம்பி அல்லது சிறிய முழுவுடலிகள் வெளியேறுகின்றன.
"https://tamilar.wiki/w/மெல்லுடலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது