ரொஜர் பெடரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 29:
பெடரர் சுவிட்சர்லாந்தின் [[பேசல்]] நகரின் அருகில் உள்ள பென்னிஞ்சேன் ஊரில் சுவிட்சர்லாந்து குடிமக்களாகிய ராபர்ட் பெடரெர் - லிநெட் டு ராண்ட் (தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்)தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெடரெர் சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் பிரான்சிய-இடாய்ச்சுலாந்திய எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள முன்சென்சுட்டைன், பேசலுக்கு அருகிலுள்ளது, புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். பெடரெர் சுவிசு-இடாய்ச்சு, இடாய்ச்சு, பிரரன்சியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். அனைத்து சுவிட்சர்லாந்து ஆண் குடிமக்களைப் போலவே ரோச்யர் பெடரெரும் சுவிட்சர்லாந்து படைத்துறையில் (இராணுவத்தில்) பணியாற்றினார். ஆயினும் 2003-ஆம் வருடம் அவரது முதுகு வலியின் காரணமாகப் படைப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
 
=== திருமணமும் குடும்பமும் ===
 
பெடரெர், முன்னாள் பெண்கள் டென்னிசுக் கூட்டமைப்பின் ஆட்டக்காரியான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் புரிந்துள்ளார். இருவரும் 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாட சென்ற பொது சந்தித்துக் கொண்டனர். வாவ்ரிநேக் 2002-ஆம் ஆண்டு கால் காயம் காரணமாக ஒய்வு பெற்றார். அப்போதிலிருந்து பெடரெரின் பொதுத் தொடர்பு மேலாளராக இருந்து வருகிறார். இருவரும் ஏப்பிரல்-11,2009, அன்று நண்பர்களும் குடும்பத்தாரும் சூழ பேசலில் மணம் புரிந்தனர். மிர்கா சூலை-23,2009, அன்று, மைலா ரோசு, சார்லின் ரிவா எனும் இரட்டை பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார்.
 
=== தொண்டும் சிறப்பும் ===
 
பெடரெர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் அறநிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் [[காத்ரீனா புயலால்]] பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் [[யூனிசெப்]] நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட [[எய்ட்சு]] விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு [[ஆஸ்திரேலிய ஓப்பன்]] பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன்பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான [[ரஃபயெல் நதால்|ரபேல் நடால்]], [[நோவக் ஜோகோவிச்]], [[ஆண்டி ராடிக்]], [[லெயுட்டன் ஹெவிட்]], [[கிம் கிளைஸ்டர்ஸ்]], [[செரீனா வில்லியம்ஸ்]] மற்றும் [[சமந்தா ஸ்டோசர்]] ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
 
== டென்னிசு வாழ்க்கை ==
=== 1998-க்கு முன்: இளநிலை ஆண்டுகள் ===
 
பெடரெர் விம்பிள்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை ஒரே வருடத்தில்(1998) வென்றார். ஒற்றையர் பட்டத்தை இரக்லி லபத்ஃசு எனும் வீரரை 6-4,6-4 எனும் தொகுப்பு கணக்கில் வென்றார். இரட்டையரில் ஆலிவர் ரோகசுடன் இணண சேர்ந்து ஆண்டி ராம்- மைக்கேல் லொட்ற இணையை 6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்றனர். மேலும் அவ்வாண்டு அமெரிக்க ஒப்பனிலும் இளநிலை போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்றார். இறுதி ஆட்டத்தில் டேவிட் நல்பாந்தியனிடம் 3-6,5-7 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார்.மேலும் 4 [[ITF]] இளநிலை ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அதில் மிகவும் புகழ் பெற்ற ஆரஞ்சு கிண்ணமும்(Orange Bowl) அடங்கும். அதன் இறுதிப் போட்டியில் அவர் கில்லர்மோ கொரியா-வை 7-5,6-3 என்ற தொகுப்பு கணக்கில் வென்றார். 1998-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் உலக அளவில் இளநிலை பிரிவில் முதன்மை ஆட்டக்காரராக முடித்தார்.
 
=== 1998-2002:[[ஏடிபி]]யில் ஆரம்ப வருடங்கள் ===
[[படிமம்:Roger federer 2002 2.jpg|thumb|left|125px|alt=A dark-haired man in all white clothing, and caring a redish-black bag on his right shoulder and a black one on the left shoulder|[[ரோஜர் ஃபெடரர்|பெடரர்]] 2002-ஆம் வருட [[யூ.எஸ். ஓப்பன்]] போட்டியில்]]
 
தொழில் முறை ஆட்டக்காரராக ரோஜெர் பெடரெர் பங்கேற்றது 1998-இல். அவ்வாண்டு Gstaad-இல் நடைபெற்ற போட்டியில் லூகாசு அர்னால்ட் கேர்-ஐ சந்தித்தார். முதல் போட்டியான அதில் 4-6,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோல்வி அடைந்தார். ரோஜெர் பெடரெர் எட்டிய முதல் இறுதிப் போட்டி மார்செஇல் ஓப்பன் (2000-ஆம் வருடம்) போட்டியாகும். இறுதி ஆட்டத்தில் சக சுவிட்சர்லாந்து வீரரான மார்க் ரோசட்டிடம் 6-2,3-6,6-7(5) என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். 2001-ஆம் ஆண்டு [[மார்டினா ஃகிங்கிச்சுடன்]] இணை சேர்ந்து [[ஃகாப்மேன் கோப்பை]]யை சுவிட்சர்லாந்து சார்பில் வென்றார். அவரின் முதல் தொழில்முறை தனிநபர் கோப்பை 2001-ஆம் ஆண்டு [[மிலன்]] உள்விளையாட்டரங்க போட்டியில் பெற்றார். அவர் இறுதி ஆட்டத்தில் சூலியன் போட்டேரை 6-4,6-7(7),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். 2002-ஆம் ஆண்டு அவர் [[பிரெஞ்சு ஓப்பன்]] மற்றும் [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன்]] போட்டிகளில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். விம்பிள்டனில் பீட் சாம்ப்ராசை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இக்காலகட்டத்தில் அவர் தகுதி பெற்ற மிக முக்கியமான இறுதி சுற்று ஆட்டம் 2002-ஆம் வருட [[மியாமி மாசுட்டர்சு]] ([[கடின ஆடுகளம்]]) போட்டியாகும். அதில் அவர் அமெரிக்க நாட்டவரான [[அன்ட்ரே அகாசி|ஆந்த்ரே அகாசி]]யிடம் 3-6,3-6,6-3,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். மேலும் அவ்வாண்டு [[ஃகேம்பர்க் மாசுட்டர்சு]] ([[களிமண் ஆடுகளம்]]) போட்டியில் [[மாரட் சபினை]] 6-1,6-3,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். அப்போட்டியில் வென்றதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் முதல் 10-க்குள் புகுந்தார். பெடரெர் இக்கால கட்டத்தில் ஒற்றையர் 10 இறுதி ஆட்டங்களில் பங்கேற்று 4-இல் வெற்றியும் 6-இல் தோல்வியும் கண்டார்.
 
=== 2003-2006:முன்னாண்மை ===
 
2003-ஆம் ஆண்டு [[ரோஜர் ஃபெடரர்|ரோஜெர் பெடரெர்]] தனது முதல் கிராண்டு சிலாம் பட்டத்தை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மார்க் பிலிப்போசிசை 7-6(5),6-2,7-6(3) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார்.<ref name=RF2003>{{cite web|url=http://www.atpworldtour.com/Tennis/Players/Top-Players/Roger-Federer.aspx?t=pa&y=2003&m=s&e=0|title=Roger Federer Playing Activity 2003|author=ATP|accessdate=2010-02-16}}</ref> பெடரெர் தனது முதல் மற்றும் ஒரே இரட்டையர் மாசிட்டர்சு பட்டத்தை அவ்வாண்டு நடைபெற்ற மியாமி மாசிட்டர்சு-1000 போட்டியில் வென்றார். அதில் அவர் மாக்ஃசு மிர்நியுடன் இணை சேர்ந்து ஆடினார். மேலும் அவ்வாண்டு ரோம் மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டியையும் எட்டினார். 2003-ஆம் வருடம் ரோச்யர் பெடரெர் ஒன்பது ஏ.டி.பி இறுதிப் போட்டிகளை எட்டி அதில் ஏழு போட்டிகளை வென்றார். அவற்றுள் துபாய்-500, வியன்னா-500 போட்டிகளும் அடங்கும். மேலும் வருடக் கடைசி [[ஏ.டி.பி]] போட்டியை [[அன்ட்ரே அகாசி|ஆந்த்ரே அகாசி]]யைத் தோற்கடித்து வென்றார்.
வரிசை 58:
2006-ஆம் ஆண்டு மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். மேலும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். அதில் ரபேல் நடாலிடம் 1-6,6-1,6-4,7-6(4) என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். இருவரும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்தனர். அதில் ரோஜெர் பெடரெர் 6-0,7-6(5),6-7(2),6-3 என்ற தொகுப்புக் கணக்கில் வெற்றி கண்டார். இவ்வருடம் தான் பெடரேருக்கும் நடாலுக்கும் இடையேயான போட்டாபோட்டி வலுப்பெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மார்க்ஸ் பாக்தாதிசை 5-7,7-5,6-0,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 6-2,4-6,7-5,6-1 என்ற தொகுப்புக் கணக்கிலும் வென்று பட்டங்களைக் கைப்பற்றினார். அவ்வாண்டு 6 ஏடிபி மாஸ்டர்ஸ்-1000 இறுதிப் போட்டிகளை எட்டினார். அவற்றில் 4 கடின ஆடுகளப் போட்டிகளை வென்றார். 2 களிமண் ஆடுகள இறுதிப் போட்டிகளை ரபேல் நடாலிடம் தோற்றார். மேலும் ஒரு ஏடிபி-500 போட்டியையும் (டோக்யோ) ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியையும்(மூன்றாம் முறையாக) வென்றார்.
 
=== 2007-முதல் இன்று வரை: சாதனைகள் படைத்தலும் மேன்மை அடைதலும் ===
 
2007-ஆம் ஆண்டு 4 [[கிராண்டு சிலாம்]] போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டி அவற்றுள் மூன்றை வென்றார். ஆத்திரேலிய ஓப்பனில் பெர்னாண்டோ கோன்சாலேசை 7-6(2),6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கிலும் விம்பிள்டனில் ரபேல் நடாலை 7-6(7),4-6,7-6(3),2-6,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் [[யூ. எசு. ஓப்பன்|யூ.எசு. ஓப்பனில்]] நோவாக் சோகோவிச்சை 7-6(4) ,7-6(2),6-4என்ற தொகுப்பு கணக்கிலும் வெற்றி கண்டார். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6-3,4-6,6-3,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் இவ்வாண்டு 5 ஏடிபி மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டிகளை எட்டி அவற்றில் இரண்டை([[ஃகாம்பர்கு]], [[மாட்ரிட்]]) வென்றார். துபாய் ஓப்பன் போட்டி மற்றும் ஆண்டிறுதி ஏடிபி போட்டிகளையும் வென்றார்.
வரிசை 72:
 
== விளையாடியதின் புள்ளிவிவரம் ==
=== கிராண்ட் சிலாம் காலக்கோடு ===
{|class=wikitable style=text-align:center;
|-
வரிசை 276:
|}
 
=== ஒலிம்பிக் போட்டி ===
;<big>இறுதி ஆட்டம்: 2 (1 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம்)</big>
 
==== ஒற்றையர்: 1 (0–1) ====
{|class="sortable wikitable"
|-
வரிசை 296:
|}
 
==== இரட்டையர்: 1 (1–0) ====
{|class="sortable wikitable"
|-
வரிசை 324:
*[http://www.vikatan.com/news/coverstory/31086.html ஆகஸ்ட் 8: தனித்துவமான நாயகன் ரோஜர் பெடரர் பிறந்த தின சிறப்பு பகிர்வு][[விகடன்]]
 
===தன்விவரக்குறிப்பு===
* {{ATP|F324}}
* {{IMDb name|1716574}}
"https://tamilar.wiki/w/ரொஜர்_பெடரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது