வாய்ப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
No edit summary
 
No edit summary
 
வரிசை 25:
 
== காரணங்கள் ==
=== விபத்து ===
==== சிறிய உடல்ரீதியான காயங்கள் ====
வாயில் ஏற்படும் சிறிய காயங்களே (அடிபடுதல்), வாய் புண்கள் ஏற்பட பொதுவானக் காரணமாக உள்ளது. பல்லின் கூர்மையான ஓரங்கள், திடீரென்று கடித்துக்கொள்ளுதல் (இது குறிப்பாக கூர்மையான காரப்பற்கள் அல்லது ஞானப்பற்களினால் ஏற்படலாம்), கூர்மையான, உராய்வுத்தன்மையுடைய அல்லது அளவுக்கு அதிகமான உப்புள்ள உணவு, மோசமாக ஒட்டியுள்ள பொய்ப்பற்கள், பல்கவ்விகள் அல்லது பல்துலக்கியினால் ஏற்படும் காயம் போன்றவற்றினால் வாயின் மென் சவ்வு மேற்புறத்தில் புண்கள் ஏற்படலாம். காயத்திற்கான காரணி அகற்றபட்டுவிட்டால் (எடுத்துக்காட்டாக, மோசமாக பொருத்தப்பட்டிருக்கும் பொய்ப்பற்கள் அகற்றப்படுதல் அல்லது மாற்றப்படுதல்), புண்கள் பொதுவாக மிதமான வேகத்தில் குணமாகிவிடும்.<ref name="ulcer page"/>.
 
இந்த புண்கள், பற்களில் வேலைப்பாடு செய்த பிறகு ஏற்படுவது மிகவும் பொதுவானதாகவும் உள்ளது. வாயின் மென்மையான திசுக்களில் சிராய்ப்புகள் ஏற்படும் போது புண்கள் ஏற்படுகின்றன. மென்மையான சவ்வு திசுக்களுக்கு காயங்கள் ஏற்படும் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, பற்களில் வேலைப்பாடு செய்வதற்கு முன்னதாக பல் மருத்துவர் பெட்ரோலிய ஜெல்லியின் பாதுகாப்பான இழையைத் தடவலாம்.
 
====இரசாயன காயங்கள்====
வலி நீக்கி மருந்து (ஆசுபிரின்) அல்லது ஆல்கஹால் போன்ற இராசயனங்கள், வாயின் மென் சவ்வில் படும் போது, திசுக்கள் சிதைவும் உரியவும் செய்து புண்ணுள்ள மேற்பரப்பை உருவாக்கலாம். சோடியம் லாரில் சல்பேட், பெரும்பாலான பல் துலக்கிகளில் காணப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். இது வாய்ப் புண்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
 
=== நோய்த்தொற்று ===
வைரசு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா சார்ந்த செயல்முறைகள் வாய்ப் புண் ஏற்பட வழிவகுக்கலாம். கைகளைக் கழுவாமல் வெடிப்புற்ற உதடுகளை தொடுவதன் மூலமாகவும் வாய்ப் புண்கள் ஏற்படுகின்றன. உதடுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட சிறிய திறந்த புண்களினுள் கைகளில் உள்ள பாக்டீரியா நுழைவதனாலேயே இந்தப் புண்கள் ஏற்படுகின்றன.<ref name="ulcer page" />
 
==== தீநுண்மி (வைரசு) சார்ந்தவை ====
தீநுண்மிகளில் ''சிற்றக்கி வைரசு'' மிகவும் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் ஏற்படும் அக்கிவடிவ புண்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. இதனால் பொதுவாக வலியுடனும், வெடிக்கும் தன்மை கொண்ட பன்மடங்கு கொப்புளங்களாகவும் வாயில் புண் வரும். ''நீர்க்கோலவான் சின்னம்மை'' (சின்னம்மை, குளிர் நடுக்கம்), ''காக்சாக்கி வைரசு'' மற்றும் இதனுடன் தொடர்புடைய துணைவகைகள் [[Wiktionary:oral|வாய்]] புண்ணை ஏற்படுத்தும் சில வைரசு சார்ந்த செயல்பாடுகளாகும். எச்.ஐ.வி நோய் எதிர்ப்பு குறைப்பாடை ஏற்படுத்தி, [[தருணத் தொற்று]]கள் அல்லது உடற்கட்டிகளைப் பெருக்கமடையச் செய்கிறது.<ref name="comp"/>
 
==== பாக்டீரியா சார்ந்தவை ====
''மைக்கோ நுண்ணுயிர் காசநோய்'' ([[காசநோய்]]) மற்றும் ''ட்ரிபோனிமா பாலிடம்'' (கிரந்தி (சிபிலிசு)) போன்றவை பாக்டீரியா சார்ந்த புண்ணை ஏற்படுத்துவதற்குக் காரணமாக உள்ளது.<ref name="comp" />
 
காற்றில் வளரும் ஸ்ட்ரெப்டோகோசி, ''நீசீரியா'', ''அக்டினோமைசுகள்'' , ஸ்பைரோசெட்கள் மற்றும் ''வாய்-பெருங்குடல் வாழ் தீங்கற்றநுண்ணுயிர் தொற்று'' இனங்கள் போன்ற சாதாரண பாக்டீரியா சார்ந்த இணைவுகளினால் ஏற்படும் தருணம் சார்ந்த செயல்பாடு, வாய்ப் புண்ணின் பாதிப்பினை நீட்டிக்கலாம்.<ref>[http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO1&amp;Sect2=HITOFF&amp;d=PALL&amp;p=1&amp;u=a&amp;r=1&amp;f=G&amp;l=5&amp;s1=6248718.PN. வாய் சார்ந்த துவாரத்தின் தீவிரமான மென்சவ்வு நோய்த்தொற்றுகளின் சிகிச்சைக்கான பாக்டீரியாப்பகை ஏஜெண்டுகளின் நசிவு தொடர்பான வரண்ட மருந்தளவு வடிவங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20170211141010/http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO1 |date=2017-02-11 }} யு.எஸ் பேடெண்ட் ஆஃபிஸ் ஃபுல்-டெக்ஸ்ட் அண்டு இமேஜ் டேட்டாபேஸ், 2001 ஆம் ஆண்டு ஜூன் 19ம் தேதி.</ref>
 
==== பூஞ்சை சார்ந்தவை ====
''காக்சைட்டையோட்சு இமிட்டிசு'' (பள்ளத்தாக்கு காய்ச்சல்) ''க்ரிப்டோகாக்கசு நியோபார்மன்சு'' (க்ரிப்டோகோக்கோசிசு), ''பிளாசுடோமைசெசு டெர்மடைடிடிசு'' "வட அமெரிக்க பிளாசுடோமைக்கோசிசு" ஆகியவை வாய் புண்ணுக்கு காரணமான பூஞ்சை சார்ந்த காரணிகளாகும்.<ref name="comp" />
 
====முதற்கலவுருக்கள் (புரோட்டோசோன்கள்)====
ஓற்றையணு உயிரி கிஸ்டோலிடிக்கா என்பது ஓரணு ஒட்டுண்ணியாகும். இது நீர்க்கட்டிகளாக உருவெடுத்து சிலநேரங்களில் வாய்ப் புண்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது.
 
===நோய் எதிர்ப்பு மண்டலம்===
ஆப்தோசு புண்களின் காரணிகள் பல்வேறு நோய் செயல்முறைகளின் விளைவாக இருக்கின்றன என்று பல ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இவற்றில் ஒவ்வொன்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தினால் செயலூக்கப்படுகின்றன.<ref name="comp" />
 
உடலால் கண்டுபிடிக்க முடியாத வேதிப்பொருட்கள் உடலை தாக்கும் போது ஆப்தோசு புண்கள் உருவாகின்றன என்று கருதப்படுகிறது.
 
====நோய் எதிர்ப்பு குறைப்பாடு====
நோய் எதிர்ப்பு குறைபாட்டின் காரணத்தினால் வாய்ப் புண்கள் திரும்ப திரும்ப ஏற்படலாம். வாயின் சீதச்சவ்வுகளில் நோய் எதிர்ப்பு புரதங்களின் அளவுகள் குறைந்து காணப்படுவதை இது குறிக்கிறது. [[வேதிச்சிகிச்சை]], [[எச்.ஐ.வி]] மற்றும் ஒற்றை உட்கரு அணுமிகைப்பு ஆகிய அனைத்தும் நோய் எதிர்ப்பு குறைப்பாடு ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் எதிர்ப்பு குறைப்பாட்டின் வெளிப்பாடாக வாய்ப் புண்கள் ஏற்படுகின்றன.
 
==== தன் தடுப்பாற்றல் ====
வாய்ப் புண் ஏற்படுவதற்கு தன் தடுப்பாற்றலும் ஒரு காரணமாக உள்ளது. சீதச்சவ்வு குமிழ்ச்சருமமனையம் என்பது தோல் மேல்புறச் செல் தளச்சவ்விற்கு ஏற்படும் ஓர் தன் தடுப்பாற்றல் விளைவாகும். வாய் சீதச்சவ்வில் செதிலுறிவு/புண் ஏற்பட இது காரணமாகிறது.
 
====ஒவ்வாமை====
கனிமப் பூச்சு போன்ற ஒவ்வாமை ஊக்கிகளுடன் தொடர்பு ஏற்படுவதன் காரணத்தினால் சீதச்சவ்வில் புண்கள் ஏற்படுகின்றன.
 
=== உணவுத் திட்டம் ===
[[வைட்டமின் சி]] குறைப்பாட்டினால் கேவிநோய் ஏற்படலாம். இந்நோய் காயங்கள் ஆறுவதை தடை செய்து புண்கள் உருவாக வழிவகுக்கிறது.<ref name="comp" /> இதேப்போன்று [[வைட்டமின் பி12]], [[துத்தநாகம்]]<ref>{{cite journal |author=Orbak R, Cicek Y, Tezel A, Dogru Y |title=Effects of zinc treatment in patients with recurrent aphthous stomatitis |journal=Dent Mater J |volume=22 |issue=1 |pages=21–9 |year=2003 |month=March |pmid=12790293 |doi= |url=}}</ref> போன்ற குறைபாடுகள் வாய்ப் புண் ஏற்படுவதுடன் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது.
 
உடற்குழி நோய், புண்கள் ஏற்படுவதற்கு ஒரு பொதுவானக் காரணமாக உள்ளது. இந்த சூழலில் கோதுமை, ரை அல்லது வாற்கோதுமை போன்றவற்றை உட்கொள்ளுவதால் நாட்பட்ட வாய்ப் புண்கள் ஏற்படலாம். வாய்ப் புண்கள் ஏற்படுவதற்கு பசையம் உணர்திறன் காரணமாக இருந்தால் பசையம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெரும்பாலான ரொட்டி வகைகள், பசைக்களிம்பு (பாசுதா), வேகவைத்த உணவுப்பொருள், [[பீர்]]கள் போன்ற உணவுகளை தவிர்த்தல் அவசியம். இதற்கு ஈடு செய்யும் வகையில், பசையம் இல்லாத வகைகளும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. ''டையட்'' [[கோலா]] மற்றும் சர்க்கரையல்லாத மெல்லும் கோந்து போன்ற செயற்கையான சர்க்கரைகளினாலும் வாய் புண்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
 
====ஃப்லோவெண்ட்====
ஃப்லோவெண்டை பயன்படுத்திய பிறகு வாயை சரியாக கழுவாமல் விட்டுவிட்டால் வாய்ப் புண்கள் ஏற்படலாம்.{{Fact|date=March 2009}}
 
=== புற்றுநோய் ===
வாய்ப் புற்றுநோய்களின் காரணத்தினால் புண்கள் ஏற்படலாம். இதில் நைவுப்புண்ணின் மையத்தில் இரத்த ஓட்டம் தடைபட்டு அழுகிவிடுவதன் காரணத்தினால் புண்கள் ஏற்படுகின்றன. செதிள் உயிரணு புற்று, புகையிலை காரணத்தினால் ஏற்படும் நோய்களில் ஒன்றாகும்.
 
=== வாய்ப் புண்களுடன் தொடர்புள்ள மருத்துவ நிலைகள் ===
பின்வரும் மருத்துவ நிலைகள் வாய் புண்களுடன் தொடர்புடையதாக உள்ளன:
* பெசெட்ஸ் நோய்
"https://tamilar.wiki/w/வாய்ப்_புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது