நாவேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam " '''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 2:
'''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) [[இலங்கை]]யின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
நாவேந்தன் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[புங்குடுதீவு|புங்குடுதீவில்]] பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு.
== எழுத்துத் துறையில் ==
தமது பதினைந்தாவது வயதில் [[இந்து சாதனம்]] மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.
தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் [[சுதந்திரன்|சுதந்திரனிலேயே]] அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். [[தமிழகம்|தமிழகத்திலிருந்து]] வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய "மரியாள் மகதலேனா" என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.
வரிசை 15:
== அரசியல் பணி ==
[[யாழ்ப்பாணம்]] மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். [[இலங்கை தமிழரசுக் கட்சி]] நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட "சிறீ அளித்த சிறை" என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.
== நினைவு விருது ==
| |||