திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = திருமூலர் | படிமம் = | படிமத் தலைப்பு = | படிம_அளவு = | குலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Rasnaboy
ஆங்கிலச் சொல்லாக்கம்
வரிசை 12:
}}
 
'''திருமூலர்''' அல்லது '''திருமூல நாயனார்''' (''Tirumular'') [[சேக்கிழார்]] சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவரும், [[பதினெண் சித்தர்கள் பட்டியல்|பதினெண் சித்தர்களுள்]] ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்.<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=திருமூல நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=22 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1430}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref> திருமூலர் வரலாற்றை [[நம்பியாண்டார் நம்பி]]கள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 5000 வருடங்களுக்கு முந்தயது எனினும் இவரால் அருளப்பட்ட [[திருமந்திரம்|திருமந்திரமாலை]] பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் [[பொது ஊழி|பொ.ஊ.]] என்று கூறுகின்றனர். இது 3000 பாடல்களைக் கொண்டது.<ref>மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ், ஞாலம் அறியவே நந்தி (திருமூலர்)</ref> இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
 
==திருமூல சித்தர்==
வரிசை 21:
திருக்கையிலாயத்தில் [[சிவபெருமான்|சிவபெருமானது]] திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் ([[அட்டமா சித்திகள்]]) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் [[அகத்தியர்|அகத்திய]] முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் [[திருக்கேதாரம்]], [[பசுபதிநாத் கோவில்]], அவிமுத்தம் ([[காசி]]), [[விந்தமலை]], [[திருப்பருப்பந்தம்]], [[திருக்காளத்தி]], [[திருவாலங்காடு]] ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் [[காஞ்சி]] நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.
 
தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம்சர்பம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.
 
மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.
வரிசை 58:
திருமூலர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
 
==திருமூலர் நூல்கள்==
*திருமூலர் காவியம் 8000
*சிற்பநூல் 1000
"https://tamilar.wiki/w/திருமூலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது