நாகம் (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Xqbot
சி Bot: Fixing double redirect to நாகமரம்

imported>Lingam
"{{taxobox |name = நாகம் |image = Mesua ferrea.jpg |image_caption = நாகமரம் |regnum = தாவரம் |unranked_divisio = பூக்குந்தாவரம் |unranked_classis = மெய்யிருவித்திலையி |unranked_ordo = ரோசித்கள் |ordo = Malpighiales |familia = Calophy..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[நாகமரம்]]
|name = நாகம்
|image = Mesua ferrea.jpg
#வழிமாற்று|image_caption = [[நாகமரம்]]
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = [[மெய்யிருவித்திலையி]]
|unranked_ordo = [[ரோசித்கள்]]
|ordo = Malpighiales
|familia = Calophyllaceae
|genus = ''[[நாகமரவினம்]]''
|species = '''''M. ferrea'''''
|binomial = ''Mesua ferrea''
|binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
|synonyms = ''Mesua coromandelina'' Wight
''Mesua nagassarium'' ([[Burm.f.]]) [[Kosterm.]]
''Mesua pedunculata'' Wight
''Mesua roxburghii'' Wight
''Mesua sclerophylla'' [[Thw.]]
''Mesua speciosa'' [[Choisy]]

''Mesua stylosa''

'''நாகமரம்''' (''Mesua ferrea'') எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம் மிக்க பூக்கள், வலிமையான பலகை என்பவற்றுக்காக இது அயன மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. [[இலங்கை]]யின் அயன மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது [[இந்தியா]]வின் [[அசாம்]] மாநிலம், தென் [[நேபாளம்]], [[இந்தோசீனா]], [[மலாயத் தீபகற்கம்]] என்பவற்றிற்க்கு பயிரிடப்படுகிறது. இதுவே இலங்கையின் "தேசிய மரம்" ஆகும்.

100 அடி உயரம் வரை வளரும் இத்தாவரத்தின் அடிப்பகுதி 2 மீ விட்டம் வரை வளர்வதுண்டு. இலங்கையின் ஈர வலயத்திற் கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரமான பகுதி வரையில் இத்தாவரம் பரவலாகக் காணப்படும். எளிமையான, ஒடுங்கிய, நீண்ட, கடும் பச்சை நிறமான இதன் இலைகள் 7-15 செமீ வரை வளரக்கூடியன. இதன் இலைகளின் கீழ்ப்புறம் சற்று வெள்ளையாக இருக்கும். இதன் இளந்தளிர்கள் செந்நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த ஊதா நிறம் வரையிலும் இருப்பதுடன் கீழ் நோக்கி வளைந்திருக்கும். இதன் பூக்கள் 4-7.5 செமீ வரையான விட்டம் கொண்டிருக்கும். நாகமரப் பூக்களில் வெள்ளை நிறத்திலான நான்கு இதழ்களும் நடுவில் மஞ்சள் நிறமான மகரந்தமும் காணப்படும்.

இலங்கையின் 96 எக்டேயர் (238 ஏக்கர்) பரப்பளவு கொண்ட [[தேசிய நாகமரக் காடு]] தன்னகத்தே ஏராளமான நாகமரங்களைக் கொண்டுள்ளது. இக்காடு 8 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த [[இலங்கையின் நான்காம் தப்புல|நான்காம் தப்புல]] மன்னனால் உருவாக்கப்பட்டதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது. அவ்வாறாயின், மனிதனால் உருவாக்கப்பட்ட காடுகளில் இதுவே மிகப் பழையதாகும். இது மட்டுமே உலர்வலயத்தில் அமைந்துள்ள ஈரவலய வன்பலகைத் தாவரக் காடாகும் என அறியப்படுகிறது.

'''நாகமரம்''' புன்னைமர இனத்தில் ஒன்று. புன்னாகம் மலையில் வளரும் மரம்<ref>பரிபாடல் 11</ref>.

பாரி வள்ளல் நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்றானாம்.<ref><poem>
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி - சிறுபாணாற்றுப்படை (88-91)</ref>

== பயன்பாடுகள் ==
* இது இலங்கையின் [[தேசிய மரம்]] ஆகும். இதன் பலகை மிக உறுதியானதும் நிறை கூடியதும் வலியதும் ஆகும். இதன் பலகையானது ஒரு கன அடி 72 இறாத்தல் நிறையுடைய அதேவேளை இதன் அடர்த்தி 1.12 தொன்/மீ3 ஆகும். நாகமரப் பலகை ஆழ்ந்த, கடுமையான செந்நிறத்திற் காணப்படும். நீடித்துழைக்கக் கூடிய இதன் பலகை தொடருந்துத் தண்டவாளங்கள் மற்றும் உறுதி மிக்க பலகை தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
* இதன் பிசின் ஒரளவு நச்சுத் தன்மையானது எனினும் இதன் பல்வேறு பகுதிகளும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வித்துக்களிலிருந்து பெறப்படும். எண்ணெய் தோய் நோய்களுக்கும் என்பு நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

== பெயர்கள் ==
[[படிமம்:നാഗപ്പൂവു്.jpg|thumb|right]]
இந்திய மொழிகளில் இதற்குப் பல பெயர்கள் கூறப்படுகின்றன.<ref>Mesua ferrea, Dr. K.M. Nadkarni's Indian Materia Medica, by A.K. Nadkarni, Popular Prakashan, Bombay, 1976, pp: 792-4.</ref>
* [[ஆங்கிலம்]]: Ceylon Ironwood
* [[சிங்களம்]]: நா (නා)
* [[சமசுகிருதம்]]: சம்பெர்யாஹ்; நாக; நாககேசர; நாகபுஷ்ப (नाग, नागर, नागकेशर)
* [[இந்தி]]: கஜபுஷ்பம்; நாககேசர (नाग केसर)
* [[வங்காளி]]: நாகேசர்
* [[கன்னடம்]]: நாகசம்பிகே (ನಾಗಸಂಪಿಗೆ)
* [[மலையாளம்]]: நாகசம்பகம்; வெயிலா
* [[மராத்தி]]: நாகசம்பே
* [[தெலுங்கு]]: நாககேசர

== புன்னாகம் (மலர்) ==
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் நாகம் <ref>குறிஞ்சிப்பாட்டு 94</ref>, புன்னாகம் <ref>குறிஞ்சிப்பாட்டு 91</ref> ஆகிய மலர்களும் இடம்பெற்றுள்ளன. புன்னாகம் மரத்தில் பூக்கும் மலர். ‘நறும்புன்னாகம்’ எனச் சங்கப்பாடல் <ref>குறிஞ்சிப்பாட்டு – 91</ref> குறிப்பிடுவதிலிருந்து இது மக்கள் விரும்பும் மணம் வீசக்கூடியது எனத் தெரியவருகிறது.

;மேலும் குறிப்புகள்
:நாக மலர்<ref>மலர்நாகம் - பொருநராற்றுப்படை 209.</ref>
:நாக மரம்<ref>மலைபடுகடாம் 520.</ref><ref>போகிய நாகம் – நற்றிணை 82.</ref><ref>நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு (ஓரி கோடியர்க்கு வழங்கிய நாடு) – சிறுபாணாற்றுப்படை 108</ref>

== அடிக்குறிப்பு ==
{{Reflist|Mesua ferrea}}

== வெளியிணைப்புகள் ==
{{Commons category}}
*{{cite book |last=Caldecott |first=Todd |year=2006 |title=Ayurveda: The Divine Science of Life |publisher=Elsevier/Mosby |isbn=0-7234-3410-7}} Contains a detailed monograph on ''Mesua ferrea'' (Nagakeshara) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/312-nagakeshara {{Webarchive|url=https://web.archive.org/web/20101229121750/http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/312-nagakeshara |date=2010-12-29 }}
* [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide98.jpg புன்னாகம் படம்]
*[https://web.archive.org/web/20070312182749/http://www.acs.ac.th/index.php?option=com_content&task=view&id=239&Itemid=203 Sriracha College: ''Mesua ferrea''] ([[தாயி மொழி]]யில்; பல ஒளிப்படங்கள்)
*[http://www.himalayahealthcare.com/herbfinder/h_mesuaf.htm Himalaya Health Care: ''Mesua ferrea'' factsheet] {{Webarchive|url=https://web.archive.org/web/20100113065317/http://himalayahealthcare.com/herbfinder/h_mesuaf.htm |date=2010-01-13 }}

{{சங்ககால மலர்கள்}}

[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் தேசிய சின்னங்கள்]]
"https://tamilar.wiki/w/நாகம்_(மலர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது