பாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags பாதிரி, பாதிரி (மூலிகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
imported>Sukanthi "{{taxobox |name = Bignonia suaveolens |image = File:Stereospermum chelonoides Blanco2.252.png |image_caption = |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = Asterids |ordo = Lamiales |familia = Bignoniaceae |tri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{taxobox
|name = Bignonia suaveolens
|image = File:Stereospermum chelonoides Blanco2.252.png
|image_caption =
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = Asterids
|ordo = Lamiales
|familia = Bignoniaceae
|tribus = Bignonieae
|genus = '''''Bignonia'''''
|species = '''''B. suaveolens'''''
|binomial = ''Bignonia suaveolens''
|binomial_authority = Roxb.
|}}
'''பாதிரி''' (''Stereospermum suaveolens'' அல்லது ''Bignonia suaveolens'') [[மூலிகை]] மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 [[மீட்டர்]] உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
== வேறு பெயர்கள் ==
அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்.
==மருத்துவக் குணங்கள்==
* [[வேர்]] - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். பாதிரி வேர் [[பெரும்பஞ்ச மூலம்|பெரும்பஞ்ச மூலங்களுள்]] ஒன்று.
* [[காய்]] - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்
* [[பூ]] - நசுக்கித் [[தேன்|தேனுடன்]] கலந்து உண்டால் தொடர்ச்சியான [[விக்கல்]] நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
==பாதிரி மலர்==
: பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது ([[சங்ககால மலர்கள்]])
: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது.
===பாதிரி மலர் பற்றிச் சங்கநூல் தரும் செய்திகள்===
:பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் பாதிரி மரங்கள் மிகுதி <ref>புறம் 70</ref>
:ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும் <ref>ஐங்குறுநூறு 361</ref>
:பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் <ref>அகநானூறு 99</ref>
:பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள். <ref>பெரும்பாணாற்றுப்படை 4</ref>
:பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர் <ref>பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர் – நற்றிணை 337</ref>
:ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும். <ref>நற்றிணை 118</ref>
:பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும். <ref>மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எரிமலர் வேய்ந்த கூந்தல் – நற்றிணை 52</ref>
:பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் <ref>அஞ்சினைப் பாதிரி – ஐங்குறுநூறு 346</ref>
:வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். <ref>அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ – அகநானூறு 191</ref>
:காம்பு சிறிதாக இருக்கும் <ref>புன்கால் பாதிரி அரிநிறத் திரள் வீ - அகநானூறு 237</ref>
:காம்பு வளைந்திருக்கும் <ref>வேனில் பாதிரிக் கூனி மாமலர் – அகநானூறு 257</ref>
:அடிப்பூ கருத்திருக்கும் <ref>கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ – அகநானூறு 261</ref>
:மலர்ந்த சோறு போல் இருக்கும் <ref>பாதிரி முகை அவிழ்வது போல வடித்த அரிசிச்சோறு இருக்குமாம் - புறம் 399</ref>
==மேற்கோள் குறிப்பு==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.archive.org/stream/pharmacographia03dymogoog#page/n36/mode/1up Pharmacographia indica. A history of the principal drugs of vegetable origin Author: William Dymock]
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
{{herb-stub}}
| |||