யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Thiagalingam No edit summary |
||
வரிசை 55:
யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்' எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன.<ref>{{cite book | url=https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf | title=பல்லவர் வரலாறு | publisher=தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | author=மா. இராசமாணிக்கனார் | year=முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000 | location=சென்னை | pages=26}}</ref>
[[படிமம்:King Cankili II's statue.JPG|thumbnail|[[இரண்டாம் சங்கிலி]] மன்னன் சிலை, நல்லூர்]]
[[படிமம்:Baptism Jar (Portuguese period).JPG|thumbnail|போர்த்துக்கேயர் கால ஞானஸ்நானத் தொட்டி, தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்]]
வரிசை 63:
1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.
யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது.
வரிசை 70:
[[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசர்]] யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க சமயமும்]], நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் [[யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தரிடம்]] வீழ்ச்சியடைந்தது
1658 முதல் 1795 முடிய ஏறத்தாழ 140 ஆண்டுகள் [[யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தர்]] யாழ்ப்பாணத்தை ஆண்டனர்.<ref>[https://www.dinamalar.com/nri/details.asp?id=16413&lang=ta யாழ்ப்பாணமும் ஒல்லாந்தர் ஆட்சியும் - 1658-1795 ]</ref>இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று [[பறங்கித் தெரு (யாழ்ப்பாணம்)|பறங்கித் தெரு]] என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.
வரிசை 77:
இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் [[இந்து சமயம்]] தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான [[இந்துக் கோயில்]]கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. [[நல்லூர் கந்தசுவாமி கோயில்]], [[வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில்]], [[வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்|யாழ் பெருமாள் கோயில்]] என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று.
[[படிமம்:Co-operator Veerasingam Hall, Jaffna.JPG|thumbnail|[[வீரசிங்கம் மண்டபம்]]]]
[[படிமம்:Subramaniam Children’s Park, Jaffna.JPG|thumbnail|[[சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம்|சுப்பிரமணியம் பூங்கா]]]]
பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது. தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாகின.
[[படிமம்:View of Jaffna town.JPG|thumbnail|யாழ் நகரத்தோற்றம்]]
{{Main|யாழ்ப்பாணப் பொது நூலகம்|யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981}}
| |||