மாவளத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "'''மாவளத்தான்''' சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக இவன் ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் இருந்தவன் நெட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
<h1> மாவளத்தானைப் பாடிய புலவர்கள் </h1> |
<h1> மாவளத்தானைப் பாடிய புலவர்கள் </h1> |
||
== கோவூர் கிழார் == |
|||
நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையில் அடைந்திருந்தான். மாவளத்தான் கோட்டையை முற்றிகை யிட்டிருந்தான். கோட்டைக்குள் இருந்த மக்கள் உணவுக்குத் தவித்தனர். புலவர் [[கோவூர் கிழார்]] நெடுங்கிள்ளியிடம் மக்கள் படும் அவதியை விளக்கினார். நெடுங்கிள்ளி அறவோனாக இருந்தால் கோட்டைக் கதவைத் திறந்து மாவளத்தானுக்கு விட்டுக்கொடுத்துவிடு வெளியேற வேண்டும். அல்லது மறவோனாக இருந்தால் மாவளத்தானோடு போரிட்டு வெல்ல வேண்டும். இரண்டுமில்லாமல் அடைந்துகிடத்தல் அறமும் அன்று. மறமும் அன்று என எடுத்துரைத்தார். (நெடுங்கிள்ளி அறவோனாக நடந்துகொண்டான்.<ref>புறநானூறு 45</ref> |

10:45, 29 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
மாவளத்தான் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக இவன் ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் இருந்தவன் நெடுங்கிள்ளி என்னும் சோழ அரசன். மாவளத்தன் என்னும் புலவர் இவன் என்று கருதுவாரும் உண்டு.
மாவளத்தானைப் பாடிய புலவர்கள்
கோவூர் கிழார்
நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையில் அடைந்திருந்தான். மாவளத்தான் கோட்டையை முற்றிகை யிட்டிருந்தான். கோட்டைக்குள் இருந்த மக்கள் உணவுக்குத் தவித்தனர். புலவர் கோவூர் கிழார் நெடுங்கிள்ளியிடம் மக்கள் படும் அவதியை விளக்கினார். நெடுங்கிள்ளி அறவோனாக இருந்தால் கோட்டைக் கதவைத் திறந்து மாவளத்தானுக்கு விட்டுக்கொடுத்துவிடு வெளியேற வேண்டும். அல்லது மறவோனாக இருந்தால் மாவளத்தானோடு போரிட்டு வெல்ல வேண்டும். இரண்டுமில்லாமல் அடைந்துகிடத்தல் அறமும் அன்று. மறமும் அன்று என எடுத்துரைத்தார். (நெடுங்கிள்ளி அறவோனாக நடந்துகொண்டான்.[1]
தாம்பபல் கண்ணனார்
பார்ப்பன புலவர் தாமப்பல் கண்ணனாரும் மாவளத்தானும் வட்டு விளையாடினர். புலவர் வட்டாட்டத்தில் நகர்த்தும் காய்களைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். அதனைப் பார்த்துவிட்ட மாவளத்தான் தான் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காயால் புலவரை அடித்தான்.
அடிபட்ட புலவர் வக்கணையாகப் பேசினார். சோழர் குடியின் பெருமையைப் பேசினார். சோழர் குடிப் பிறந்த இவனது முன்னோர் பார்ப்பார் நோவன செய்யார். நீ பார்ப்பானாகிய என்னை நோவச் செய்துள்ளாய் என்றார். அது கேட்ட மாவளத்தான் தன் குடியின் பெருமையையும், தான் செய்தது இழிசெயலாகவும் கருதி நாணி நின்றான்.
புலவர் 'பிழை செய்தது நான். நீ பிழை செய்தது போல நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளுதல் உன் குடியில் பிறந்தவர்களுக்கு எளிது போலும்' என்று சொல்லி மாவளத்தானைப் பாராட்டினார்.[2]
மாவளத்தான் பொலிவு
- தேர்வண் கிள்ளியின் தம்பி
- வார்கொல் கொடுமரம் மறவர் பெருமான். வார்கோல் என்பது அம்ப. கொடுமரம் என்பது வில். அம்புவில் வீரப் பெருமகன்.
- கடுமான் கைவண் தோன்றல். விரைந்து பாயும் குதிரையைச் செலுத்துவதில் கைவளம் மிக்கவன்.[3]