குரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengai Podhuvan குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Sukanthi "'''குரவை, துணங்கை, தழூஉ''' – ஆட்டங்கள் பழங்கால மகிழ்ச்சி விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கவை. இவை வேலை செய்த களைப்பு போக இரவில் ஆடப்படும். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
இவை வேலை செய்த களைப்பு போக இரவில் ஆடப்படும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவர். ஆடும் பாங்கை நோக்கும்போது இவை தனித்தனி ஆட்டங்கள் என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை.
* குரவை என்பது கைகோத்து ஆடப்படும்.
* துணங்கை என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து ஆடப்படும். <ref>ஆசாரிய நிகண்டு தொகுதி 9 – பாடல் 12-13</ref> துணங்கை ஆட்டம் தோளை உயர்த்தியும் ஓச்சியும் ஆடப்படும். <ref>கதவம் காக்கும் கணை எழு அன்ன, நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சி, பிணம் பிறங்கு அவையத்துத் துணங்கை ஆடி – பதிற்றுப்பத்து 45</ref>
* தழூஉ என்பது அடுத்தவர் தோளையோ இடுப்பையோ தழுவிக்கொண்டு ஆடப்படும்.
* மற்றும் வெறி, கொம்மை(கும்மி), குடந்தம், குஞ்சிதம், ஆவலங்கொட்டல் போன்றனவும் இந்த விளையாட்டுகளோடு நிகழும். <ref>மேற்படி ஆசிரிய நிகண்டு</ref>
==பழங்கால நிகழ்வுகள்==
* இளையவர் தெரு மணலில் தழூஉ ஆடினர். குழ்தைகளைத் தூக்கிச் சென்று அங்கு வேடிக்கை காட்டினர். <ref>கலித்தொகை 83</ref>
* மன்றில் தழூஉ ஆடும்போது குரவையும் நிகழும். <ref>தழூஉப்பிணை மன்றுதொறும் நின்ற குரவை – மதுரைக்காஞ்சி 614</ref>
* தழூஉ ஆட்டத்தில் குரவையும் சேர்த்து ஆடப்படும். <ref>துணங்கையந் தழூஉவில் மணங்கமழ் சேரி மதுரைக்காஞ்சி – அடி 327</ref>
* குறிஞ்சி நிலத்தில் முருகனை வழிபடுகையில் மன்றத்தில் தழூஉ பிணைந்து குரவை ஆடினர். <ref>மதுரைக்காஞ்சி 614</ref>
* குன்றக்குரவை ஆடப்பட்டபோது தொண்டகம், சிறுபறை ஆகியவை முழங்கின. கொம்பு ஊதினர். மணி அடித்தனர். <ref>சிலப்பதிகாரம் காதை 24 குன்றக்குரவை</ref>
==குரவை==
* நறவு உண்டு குரவை ஆடினர் <ref>மலைபடுகடாம் 322</ref>
* [[வாணன்]] ஆண்ட [[சிறுகுடி]] என்னும் ஊரின் நீர்த்துறையில் குரவை ஆடினர் <ref>அகம் 269</ref>
* மணல்வெளியில் வாயால் ஊதிக்கொண்டு (தெள்விளி) ஆடினர். <ref>மதுரைக்காஞ்சி 97</ref>
* புகார் நகரத்தில் இந்திரவிழாவில் குரவையாடிய மகளிர் வேகவைத்த பயறுகள், நோலை என்னும் எற்றுருண்டை, பொங்கல் முதலானவற்றைப் படையல் செய்து வைத்துக்கொண்டு குரவையாடினர் <ref>சிலப்பதிகாரம் – காதை 5 இந்திரவிழவூர் எடுத்த காதை</ref>
* போர்க்களத்தில் ஆடினர் <ref>பதிற்றுப்பத்து 45, திருமுருகாற்றுப்படை 56</ref>
* தலையில் குழையும் மார்பில் கோதையும் கையில் தொடியும் அசைந்தாட ஆடினர் <ref>நற்றிணை 50</ref>
* அரசன் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவை <ref>தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவை தொல்காப்பியம் 1022</ref>
* ஏறுதழுவி முடிந்தபின் ஆடினர். <ref>கலித்தொகை 106</ref>
* வேங்கை முற்றத்தில் ஆடினர். <ref>புறம் 126</ref>
* அரசரும் ஆடினர். <ref>பதிற்றுப்பத்து 57</ref>
* விளக்கொளியில் முழவை முழக்கிக்கொண்டு ஆடினர். <ref>பதிற்றுப்பத்து 52</ref>
* காஞ்சி நிழலில் ஆடினர். <ref>அகம் 336</ref>
* காதலியுடன் மீண்ட காதலனை வாழ்த்திப் பாடி ஆடினர். <ref>பரிபாடல் 70</ref>
* குரவை ஆட்டத்தில் குழல் ஊதுவர். <ref>கலித்தொகை 108</ref>
* பொய்தல் விளையாட்டுக்குப் பின்னர் ஆடினர். <ref>ஐங்குறுநூறு 181</ref>
* நாள்தோறும் துணங்கை ஆடுவர். <ref>குறுந்தொகை 364</ref>
* ஆடும்போது அயலார் குறுக்கீடும் நிகழும். <ref>நற்றிணை 50</ref>
==ஆட்டம் பற்றிய தொடர்கள்==
* துணங்கையஞ்சீர் – துணங்கை ஆடுபவர் பாடும் பாடல் <ref>மதுரைக்காஞ்சி 26, 160</ref> சீராக அசைந்தாடுவது. சாய்ந்தாடுவது.
* குரவைக்கொளை – துணங்கையஞ்சீரின் மற்றொரு பெயர். <ref>புறம் 396.</ref> துள்ளிக்குதித்து ஆடுவது.
* வெறிக்குரவை – தும்பை சூடி ஆடப்படும். <ref>புறம் 22</ref>
* தலைக்கை தருதல் – ஆண் பெண்ணின் கையைப் பற்றிநிற்கையில் பெண் சுழலுதல். <ref>பதிற்றுப்பத்து 13</ref>
* கால்பெயர்த்தாடல் – கால் தப்படி <ref>புறம் 359</ref>
==காட்சியகம்==
<center><gallery widths="120px" heights="90px" perrow=5>
File:Dance kuravai 1.jpg|கைகோத்தாடும் குரவை
File:Dance kuravai 2.jpg|கைகோத்தாடும் குரவை
File:Dance thunangai 1.jpg|விலாப் புடைத்தாடும் துணங்கை
File:Dance thunangai 2.jpg|விலாப் புடைத்தாடும் துணங்கை
</gallery></center>
==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள்]]
| |||