இராயகிரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>KANIRAMAN பயனரால் செய்யப்பட்ட 04:42, 29 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

நகரத்தின் பெயர் = இராயகிரி.

மாநிலம் = தமிழ்நாடு.

மாவட்டம் = தென்காசி.

வட்டம் = சிவகிரி வட்டம்.

கணக்கெடுப்பு வருடம் = 2011

மக்கள் தொகை = 11223

பரப்பளவு = 8.5ச.கிமீ

தொலைபேசி குறியீட்டு எண்= 04636

அஞ்சல் குறியீட்டு எண் = 627764

வாகன பதிவு எண் வீச்சு = TN 76

இணையதளம் = www.townpanchayat.in/rayagiri

இராயகிரி பேரூராட்சி ஆனது மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம்,மேலக்கரிசல்குளம் கீழகரிசல்குளம்,துரைச்சாமி யாபுரம் மற்றும் தென்மலை போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது.

அமைவிடம்

இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.

திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

8.5ச.கிமீ பரப்பும்,15வார்டுகளும், 61தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]

கல்வி நிறுவனங்கள்

தொடக்கப் பள்ளிகள்

1இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ.ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி.

2இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி.

3டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி. 4அருணாச்சலா துவக்கப்பள்ளி. 5எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளி. 6எம்.எஸ்.பி. துவக்கப்பள்ளி.

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

1.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி.

2.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி.

ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்

  1. இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி
  2. குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=இராயகிரி&oldid=128225" இலிருந்து மீள்விக்கப்பட்டது