தேசூர்
தேசூர் (ஆங்கிலம்:Desur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்’
| தேசூர் | |
| அமைவிடம் | 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| வட்டம் | வந்தவாசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | வந்தனா கார்க், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
4,597 (2011[update]) • 698/km2 (1,808/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
6.59 சதுர கிலோமீட்டர்கள் (2.54 sq mi) • 114 மீட்டர்கள் (374 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/desur |
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பேரூராட்சியின் அமைப்பு
6.59 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,163 வீடுகளும், 4,597 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.11% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1047 பெண்கள் வீதம் உள்ளனர். [6]
தொலைவு
- வந்தவாசியில் இருந்து 20 கிமீ
- திருவண்ணாமலையில் இருந்து 65 கிமீ
- சென்னையில் இருந்து 120 கிமீ
- திண்டிவனத்திலிருந்து 36 கிமீ
கோவில்கள்
தேசூர் அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[7][8].
பள்ளிகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Desur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ [ http://www.townpanchayat.in/desur தேசூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Desur Population Census 2011
- ↑ TAMILNADU - SIYAMANGALAM MALAI
- ↑ Cave temples of Mahendravarman I (Pallava)