பன்னம்பாறை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 17:42, 4 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
Jump to navigation Jump to search

பன்னம்பாறை (ஆங்கிலம்:Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

  • சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
  • பன்னம்பாறை என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.

மக்கள் வகைப்பாடு

சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் மற்றும் சமூகம்

இங்கு பறையர், கோனார், மறவர், பிள்ளைமார் என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=பன்னம்பாறை&oldid=173004" இலிருந்து மீள்விக்கப்பட்டது