திருவலம்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:25, 11 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திருவலம் (Thiruvalam), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.

திருவலம்
பேரூராட்சி
திருவலம் சிவன் கோயில் தேர்
திருவலம் சிவன் கோயில் தேர்
திருவலம் is located in தமிழ்நாடு
திருவலம்
திருவலம்
தமிழ்நாட்டில் திருவலம்
ஆள்கூறுகள்: 12°58′26″N 79°11′38″E / 12.974°N 79.194°E / 12.974; 79.194
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,153
மொழி
 • அலுவலல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
632 515
தொலைபேசி குறியீடு416 2236xxx
இணையதளம்www.townpanchayat.in/thiruvalam
திருவலம் பொன்னையாறு மேம்பாலம், பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கட்டப்பட்டது

இப்பேரூராட்சியில் விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. இங்கு வில்வநாதீஸ்வரர் கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது.

அமைவிடம்

திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு திருவலம் தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே கிழக்கிலும், தெற்கிலும் ராணிப்பேட்டை 12 கி.மீ.; மேற்கில் காட்பாடி 13 கி.மீ.; வடக்கில் பொன்னை 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

9.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,215 வீடுகளும், 9,153 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.50% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் என உள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=திருவலம்&oldid=399415" இலிருந்து மீள்விக்கப்பட்டது