ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13

போளூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>குணசேகரன்.மு பயனரால் செய்யப்பட்ட 13:44, 2 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
போளூர்

போளூர் is located in தமிழ்நாடு
போளூர்
போளூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
போளூர் is located in இந்தியா
போளூர்
போளூர்
போளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு சிறப்பு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்போளூர் தேர்வு சிறப்பு நிலை பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சேகரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்12.58 km2 (4.86 sq mi)
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்
173 m (568 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,123
இனம்போளூர்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
606803
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04181
வாகனப் பதிவுTN 97
சென்னையிலிருந்து தொலைவு172 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு38 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு53 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு29 கிமீ
வந்தவாசியிலிருந்து தொலைவு58 கிமீ
இணையதளம்வார்ப்புரு:Www.townpanchayat.in/Polur

அமைவிடம்

கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கிமீ; வடக்கே வேலூர் 52 கிமீ; தென்கிழக்கே ஆரணி 29 கிமீ; கிழக்கே சேத்துப்பட்டு 28 கிமீ மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கிமீ தொலைவில் உள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

12.58 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,706 வீடுகளும், 28,123 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர். [3]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

சிறப்புகள்

போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ளது. திருவண்ணாமலைக்கு வேலூரிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகம்ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.

இது சுயம்பு வடிவம் ஆனது.

சாலை வசதிகள்

போளூர் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.

போக்குவரத்து வசதிகள்

இதனையும் காண்க: போளூர் பேருந்து நிலையம்


போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.

ரயில் போக்குவரத்து

போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - களம்பூர் (ஆரணி ரோடு) - வேலூர் (காட்பாடி) - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ஆதாரங்கள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
  2. போளூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Polur Population Census 2011
  4. "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=போளூர்&oldid=189007" இலிருந்து மீள்விக்கப்பட்டது