மதுக்கூர்

62.180.229.43 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:34, 10 நவம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்

மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

மதுக்கூர்
—  பேரூராட்சி  —
மதுக்கூர்
இருப்பிடம்: மதுக்கூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் பஷீர் அஹமது
மக்கள் தொகை 15,171 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


3 மீட்டர்கள் (9.8 அடி)

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்

  • AV.சுப்பிரமணீயன்(AVS) என்பவர் திமுக முன்னாள் மாவட்ட செயளாலர்,சிறந்த அரசியல் வாதி*
  • அத்தி.கோ.இராமலிங்கம் அ.இ.அ.தி.மு.க மதுக்கூர் ஒன்றிய அவைத்தலைவர்,சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி
  • மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றே அழைத்து வந்தனர்.
  • மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள். இலக்கியத்திலும் திரை உலகிலும் முத்திரை பதித்து வருகிறார்.
  • மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
  • P.T.M ABDUL KAREEM, IVARAI ANAIVARUM P.T.M ENDRUM P.T KAREEM ENDRUM SURUKKAMAHA AZHAIPPARGAL MADUKKUR A.I.A.D.M.K MADUKKUR NAGARA CHEYALALARAKA IRUNTHAR, MELUM MUSLIM IZHAIGAR MUNNATTRA SANGA CHEYALALARAHAVUM THIRAMBADA SEYALPURINTHU EZHAKARGAL PALAR MANATHAI KAVARNTHAVAR.IVAR IYALBILEYE ORU NALLA THIRAMAIYANA VIYABARIYAVAR.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  5. "Madukkur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மதுக்கூர்&oldid=200129" இலிருந்து மீள்விக்கப்பட்டது