மேச்சேரி

imported>SeNgaiHemNath பயனரால் செய்யப்பட்ட 07:53, 20 சூலை 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
மேச்சேரி
—  பேரூராட்சி  —
மேச்சேரி
அமைவிடம்: மேச்சேரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°51′03″N 77°57′23″E / 11.85083°N 77.95639°E / 11.85083; 77.95639
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் ஜெ.குமார்
மக்கள் தொகை 21,020 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பெயர் காரணம்

கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது.

அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மேச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மேச்சேரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஊரின் சிறப்புகள்

  • மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன .
  • குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
  • மாசி 29,30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது
  • மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும்
  • இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
  • மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
  • இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=மேச்சேரி&oldid=203212" இலிருந்து மீள்விக்கப்பட்டது