ஆள்கூறுகள்: 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770

வனவாசி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 14:35, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
Jump to navigation Jump to search
—  பேரூராட்சி  —
வனவாசி
இருப்பிடம்: வனவாசி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,749 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வனவாசி ((ஆங்கிலம்:Vanavasi)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.வனவாசி எடப்பாடி சட்ட மன்ற தொகுதியையும்,சேலம் பாராளுமன்ற தொகுதியையும் சேர்ந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88 ஆகும்.

மக்கள் வகைப்பாடு

வனவாசியில் செங்குந்தர் மற்றும் தேவாங்கர் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.வனவாசியைச் சுற்றி தென்னந் தோப்புகள் நிறைய உள்ளன.

பள்ளி மற்றும் நூலகம்

வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.

கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்

வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில், முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.வனவாசியில் ஒரு மலை உள்ளது.அதன் உச்சியில் கொப்பு கொன்றாயப் பெருமாள் கோயில் உள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வெகு விமரிசையாக பூசை நடைபெறும்.

மருத்துவமனை

வனவாசியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளது.

வங்கி

வனவாசியில் ஒரு ஐசிஐசிஐ வங்கி உள்ளது.மேலும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு ஏடிஎம் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள ஊர்கள்

வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:

சேலம்-36 கிமீ,மேட்டூர் அணை-20 கிமீ,எடப்பாடி-20கிமீ,ஜலகண்டபுரம்-8 கிமீ,தாரமங்கலம்-12 கிமீ,நங்கவள்ளி-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.


பொழுதுபோக்குகள்

வனவாசியில் ஒரு திரையரங்கு உள்ளது. மேலும் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். அன்று மட்டும் யாரும் நெசவு மேற்கொள்ளமாட்டார்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=வனவாசி&oldid=203796" இலிருந்து மீள்விக்கப்பட்டது