சன்குதரோ

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:01, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)

சான்குதரோ (Chanhudaro (also Chanhu Daro or Chanhu Dado) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில், நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சான்குதராவில் சிந்துவெளி நாகரிக காலத்திய மூன்று தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு தொல்லியல் மேடு 5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சான்குதரோ தொல்லியல் களம் மொகெஞ்சதாரோவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ளது. சான்குதரோ கிமு 4,000 முதல் கிமு 1,700 வரை மக்கள் குடியிருப்பாக விளங்கியது.

சன்குதரோ
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
மாற்றுப் பெயர்சன்கு தரோ
இருப்பிடம்முல்லன் சாந்த், நவாப்ஷா மாவட்டம், பாகிஸ்தான்
ஆயத்தொலைகள்26°10′25″N 68°19′23″E / 26.17361°N 68.32306°E / 26.17361; 68.32306
வகைதொல்லியல் களம்
பரப்பளவு5 ha (12 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 4,000
பயனற்றுப்போனதுகிமு 1,700
காலம்அரப்பா 4
கலாச்சாரம்சிந்துவெளி நாகரிகம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1930, 1935–1936
அகழாய்வாளர்நானி கோபால் மசூம்தார், ஜான் ஹென்றி மக்கே
படிமம்:Carte Indus.jpg
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
படிமம்:Cut brick, Indus Valley Tradition, Harappan Phase, Chanhu Daro, Pakistan, c. 2500-1900 BC - Royal Ontario Museum - DSC09716.JPG
சன்குதரோவில் கிடைத்த அரப்பா காலத்திய செங்கல், ஆண்டு கிமு 2500 – 1900

தொல்பொருட்கள்

செப்புக் கத்திகள், ஈட்டிகள், கூர்மையான கத்திகள், தொழிற் கருவிகள் [1] கோடாரிகள், சமையல் பாத்திரங்கள் போன்ற தொல்பொருட்கள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[2] செப்பு மீன்பிடி கொக்கிகள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[3] மேலும் சுடுமண் வண்டி மாதிரிகள், சுடுமண் பறவை, தட்டுகள், கிண்ணங்கள் கிடைத்துள்ளது.

சன்குதரோ தொல்லியல் களத்தில் கிடைத்தவற்றில் ஈட்டி எறியும் ஆண் அல்லது நடனமாடுபவரின் சிதைந்த சிலை (4.1 cm) புகழ் பெற்றது. இது தற்போது பாஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.[4][5] சான்குதரோவில் சிந்துவெளி முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளது.[6][7]

அழகிய மணிகள் உற்பத்தி செய்யும் தொழில் பட்டறைகள் மற்றும் ஊதுலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8] சங்கு வளையல்கள், மணி செய்வதற்கான மூலப்பொருட்கள், சோப்புக் கல்லால் செய்யப்பட்ட சிந்துவெளி முத்திரைகள், உலோகப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது.[9]

எள் தானியம் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[10] இங்கு பட்டாணி விளைவிக்கப்பட்டுள்ளது.[11]

சன்குதரோ, அரப்பா மற்றும் ராகி கர்கி போன்ற சிந்துவெளி தொல்லியல் களங்களில் மட்டுமே வெள்ளி அல்லது வெண்கலப் பாத்திரங்களில் பஞ்சு துணிகள் இருந்த அடையாளங்கள் கிடைத்துள்ளது.[12]

சன்குதரோவில், முண்டிகாக் தொல்லியல் களத்தில் கிடைத்தது போன்ற கிமு 3000 காலத்திய இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளது.[13]

சிந்துவெளி எழுத்துகள்

சிந்துவெளி எழுத்துகளில் ||/ வடிவ எழுத்து சான்குதரோ தொல்லியல் களத்தில் மட்டுமே கிடைத்துள்ளது.[14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. [Paul Yule, A Harappan 'Snarling Iron' from Chanhu daro, Antiquity 62, 1988, 116–118, பன்னாட்டுத் தர தொடர் எண் 0003-598X. URL: http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2008/145/]
  2. "Illustrated London News, November 21, 1936". Archived from the original on ஜூலை 9, 2019. Retrieved செப்டம்பர் 28, 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 135
  4. "Museum of Fine Arts, Boston". Archived from the original on 2013-01-18. Retrieved 2019-09-28.
  5. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 281
  6. McIntosh, Jane. (2008) The Ancient Indus Valle: New Perspectives. ABC-CLIO.Page 264 [1]
  7. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 303
  8. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 237
  9. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 150
  10. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 114
  11. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO
  12. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 333
  13. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 320 [2]
  14. Asko Parpola (1994)
"https://tamilar.wiki/w/index.php?title=சன்குதரோ&oldid=350341" இலிருந்து மீள்விக்கப்பட்டது