முருங்கன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:09, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''முருங்கன்''' இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

முருங்கன் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் ஏ-14 நெடுஞ்சாலையை முருங்கன் சிலாவத்துறை வீதி சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது. மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் முருங்கனுக்கு ஊடாகவே செல்வதுடன், அங்கே தொடர்வண்டி நிலையம் ஒன்றும் உள்ளது. முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,[1] ஒரு பிரதேச வைத்தியசாலையும்[2] உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய அஞ்சல் நிலையம் ஒன்றும் உள்ளது.[3]

குறிப்புக்கள்

  1. "பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.
  2. "வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.
  3. "அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.
"https://tamilar.wiki/w/index.php?title=முருங்கன்&oldid=121604" இலிருந்து மீள்விக்கப்பட்டது