தேனி
| தேனி | |||||||
| — hq — | |||||||
| அமைவிடம் | 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | Tamil Nadu | ||||||
| மாவட்டம் | தேனிTheni | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகர்மன்றத் தலைவர் | எஸ்.பழனிச்சாமி | ||||||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,34,724 (2001[update]) • 358/km2 (927/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi) • 100 மீட்டர்கள் (330 அடி) | ||||||
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Aw (Köppen) • 658 mm (25.9 அங்) | ||||||
|
தொலைவு(கள்)
| |||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | http://municipality.tn.gov.in/theni/ | ||||||
தேனி மாவட்டத்தின் தலைநகராக தேனி இருக்கிறது.
தேனி- அல்லிநகரம் நகராட்சி
மதுரையிலிருந்து சுமார் 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம் என்கிற இரு ஊர்களை உள்ளடக்கியிருப்பதால் தேனி-அல்லிநகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983)மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. வருவாய்த்துறையில் இந்த ஊர் அல்லிநகரம் எனும் கிராம நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
மேல்நிலைப் பள்ளிகள்
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
- அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
- நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
- மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
உயர்நிலைப் பள்ளிகள்
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
- என்.ஏ.கொண்டுராசா நினவு உயர்நிலைப் பள்ளி, தேனி.
- ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
- பத்மநாபா உயர்நிலைப் பள்ளி, தேனி.
தொழிற்பயிற்சி நிலையம்
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
சிறப்புக்கள்
- தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
- தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
- திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இந்த ஊரைச் சேர்ந்தவர்.
- திரைப்பட நடிகர் வையாபுரி, செவ்வாழை ராசு ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.
இலக்கிய நகரம்
தேனி நகரை எழுத்தாளர்கள் அதிகமுடைய நகரம் என்று சொல்லலாம். கவிஞர் ஜெயபாஸ்கரன் ஒரு பேட்டியில் "எல்லா ஊரும் என் தமிழின் ஊர்களே. எனினும் தேனி எனக்கு மிகவும் பிடித்த ஊராகும். அதன் வளமான இயற்கையழகு மட்டுமல்ல; திரும்பிய பக்க மெல்லாம் தென்பட்டு இலக்கி யம் பேசுவோர் அங்கு அதிகம். கவிஞர் முகமது சபி போன்றவர்கள் அங்கு இலக்கிய ஆர்வம் தழைத்து வளரப் பெருங்காரண மாக இருக்கிறார்கள். அதே போல கலைஞர்களையும் இலக் கியவாதிகளையும் தமிழுலகிற்கு அதிக அளவில் வழங்கிய மண் தேனி மண்தான். மிதிவண்டியில் கிராமம் தோறும் சென்று மிளகாய் வத்தல், மசாலாப் பொடி விற்கும் எழுத்தாளர் அல்லி உதயன் தமிழ் இலக்கிய இதழ் களையும் மசாலாப் பொடி களுடன் சேர்த்து கிராம மக்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறார். அவரைப் பற்றி ஒரு அரைமணி நேரக் குறும்படம் ஒன்று எடுத்தால் அது இலக் கியத்திற்குச் செய்யக்கூடிய மாபெரும் சேவையாக இருக்கும் என்று குறும்பட இயக்குனர் களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த ஊரில் ஒரு மளிகைக்கடையில் நின்று கொண்டு தொலைபேசி யில் யாருடனோ நீங்கள் தி. ஜானகிராமனைப் பற்றி மாற்றுக் கருத்துச் சொல்வதாக வைத்துக் கொண்டால், அந்தக் கடைச் சிப்பந்தி, "அது எப்படி அப்படி யொரு கருத்தை நீங்கள் முன் வைக்கலாம்?' என்று தொடங்கி, தன் முதலாளியின் முன்பாகவே ஒரு மாபெரும் உரை நிகழ்த்தக் கூடும். எழுத்தாளர்கள், கவிஞர் கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ் நாட்டின் "இலக் கியத் தலைநகரம்' என்றுகூட அறிவிக்கலாம். கவிஞர் மு. முகமதுசபி, தேனி சீருடையான், அல்லி உதயன், கே.எஸ்.கே., நடேசன், பொன்முடி, கலை இலக்கியா, மணிபாரதி, பொன் கணேஷ், ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம், கலைதாசன், உமா மகேஸ்வரி (ரெட்டியபட்டி), திருநாவுக்கரசு, தொழிலதிபர் மோகன், தனபாண்டி என்று நூற்றுக்கணக்கான இலக்கிய அன்பர்கள் தேனியில் மட்டுமே உண்டு. அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருப்பவர்களைத் தனிக்கணக்கு எடுக்க வேண்டும்.[1] என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத் தக்கது.