ஆள்கூறுகள்: 13°06′25″N 80°06′22″E / 13.107°N 80.106°E / 13.107; 80.106

ஆவடி ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>முத்துராஜன் பயனரால் செய்யப்பட்ட 11:50, 1 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆவடி ஏரி
Avadi Aeri
ஆவடி ஏரி
அமைவிடம்ஆவடி, சென்னை, இந்தியா
ஆள்கூறுகள்13°06′25″N 80°06′22″E / 13.107°N 80.106°E / 13.107; 80.106
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு87.06 ஏக்கர் [1]
குடியேற்றங்கள்சென்னை

ஆவடி ஏரி (Avadi Lake) என அழைக்கப்படும் பருத்திப்பட்டு ஏரி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புஎஆகியவற்றுக்கு பின்புறமாக ஆவடி ஏரி உள்ளது. 2.64 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரி 87.06 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது [1]. பல ஆண்டுகளாக இந்த ஏரி வற்றாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஏரி நீண்ட காலத்திற்கு முன்னர் பண்ணை நிலங்களை பயிரிடுவதற்கான ஒரு ஆதாரமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. பல்வேறு பருவகாலங்களில் நீர்நிரம்பியிருபதால் பல பறவைகளை இந்த ஏரி கவர்ந்திழுக்கிறது.

இருப்பினும், சமீபத்திய பத்தாண்டுகளில் இந்த ஏரியின் பரப்பளவு வெகுவாக குறைந்து போயுள்ளது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கப்பட்டு பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா மற்றும் படகு சவாரி 2019ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் மற்றம் மழைநீர் கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாததால் ஏரியில் கலக்கிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Time to restore vanishing water bodies". Madras Musings XXVIII (2). May 1–15, 2018. http://www.madrasmusings.com/vol-28-no-2/time-to-restore-vanishing-water-bodies/. பார்த்த நாள்: 21 October 2018. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஆவடி_ஏரி&oldid=268872" இலிருந்து மீள்விக்கப்பட்டது