இலைவடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Info-farmer பயனரால் செய்யப்பட்ட 13:27, 16 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய தாவரவியல் கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:20150228Ailanthus altissima1.jpg
ஏலந்தஸ் மிஸ்டில் இலை வடு

இலைவடு ( leaf scar ) என்பது தாவர தண்டிலிருந்து இலை உதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது. குறிப்பாக கிளையின் கணுக்குருத்துகளில் (axillary buds) இது காணப்படும்.

தோற்றம்

இலையுதிர் தாவரங்களில் வளர்ச்சிக்கு உகந்த பருவகாலத்தின் இறுதியில் இலை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த காலத்தில் தன்டிற்கும் இலைக்காம்பிற்கும் இடையே பிரிக்கும் திசு (abscission layer) தோன்றுகிறது. இத்திசு தன்டிற்கும் இலைக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்து இலையை உதிரச்செய்கிறது. இலை உதிர்ந்தபின் அவ்விடத்தில் ஒரு வடுவை தோற்றுவிக்கிறது.[1]

கற்றைவடு

கற்றை வடுக்கள் வட்ட வடிவில் அமைந்திருக்கும். இவை இலை வடுவின் உட்பகுதியில் காணப்படும். தண்டையும் இலையையும் இணைக்கும் கடத்து திசுக்களின் அமைவிடத்தின் அடையாளமே கற்றை வடுக்கள் ஆகும்.[2] கற்றை வடுக்களின் எண்ணிக்கை தாவரங்களை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

படிமம்:20150304Aesculus hippocastanum1.jpg
ஏஸ்குலஸ் ஹிப்போகாஸ்டானம் இலை வடு

மேற்கோள்கள்

  1. "Winter twigs". Oregon state university. Retrieved 8 November 2015.
  2. Dirr, Michael Illustrations by Bonnie Dirr (1990). Manual of woody landscape plants. (4. ed., rev. ed.). [S.l. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87563-344-7.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=இலைவடு&oldid=285315" இலிருந்து மீள்விக்கப்பட்டது