ஓரிக்கை

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:51, 27 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஓரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஓரிக்கை ஊராட்சியாக இருந்து. பின்னர் காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இவ்விடம் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றின் இடையே அமையப்பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். ஓரிக்கையானது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பட்டுச் சேலைகள் நெய்வதற்கு தேவையான ஜரிகை நூல், தமிழ்நாடு அரசின் ஜரிகை நிறுவனம் 6 டிசம்பர் 1971 முதல் ஓரிக்கையில் செயல்படுகிறது.[1] சந்திரசேகர சரசுவதி சுவாமியின் மணி மண்டபம் மற்றும் கோயில்கள் ஓரிக்கையில் பாயும் பாலாற்றங்கரையில் 28 ஜனவரி 2011 அன்று நிறுவப்பட்டது. [2][3]

இவ்விடம் மக்கள் அதிகம் வாழும் குடியுருப்பு பகுதியாகவும், கல்வி நிலையங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் கொண்டுள்ளது. இவ்விடத்தின் அஞ்சல் சுட்டு எண் 631502 ஆகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓரிக்கை&oldid=306996" இலிருந்து மீள்விக்கப்பட்டது