குபனூர்
குபனூர் Kubanoor | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 12°39′51″N 74°56′56″E / 12.6640974°N 74.9488941°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | காசர்கோடு |
| வட்டம் (தாலுகா) | மஞ்சேசுவரம் |
| மொழிகள் | |
| • அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 6XXXXX |
| வாகனப் பதிவு | கே.எல்- |
குபனூர் (Kubanoor) என்பது இந்தியாவின்[1] கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு மாவட்டத்தில் உப்பலாவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
அமைவிடம்
குபனூர் உப்பள-போயார் சாலையில் கைகம்பா சந்திப்பிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மொழிகள்
குபனூர் கிராமம் அடிப்படையில் ஒரு பன்மொழிப் பகுதியாகும். இங்குள்ள மக்கள் மலையாளம், துளுவம், பியரி மொழி, கொங்கணி மொழி போன்ற மொழிகளைப் பேசுகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தி, தமிழ் மொழிகளையும் பேசுகிறார்கள்.
நிர்வாகம்
குபனூர் கிராமம் மஞ்சேசுவரம் சட்டமன்ற தொகுதியிலும் மற்றும் காசர்கோடு பாரளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
போக்குவரத்து
உள்ளுா் சாலைகள் வடக்கே மங்களுரையும் தெற்கே கோழிக்கோடையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 சாலையால் அணுகக்கூடியவையாக உள்ளன. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களுர்- பாலக்காடு பாதையில் உள்ள மஞ்சேசுவர் தொடருந்து நிலையமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Census of India : List of villages by Alphabetical : Kerala". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-10.
