ஆள்கூறுகள்: 28°36′20″N 76°39′20″E / 28.60556°N 76.65556°E / 28.60556; 76.65556

சஜ்ஜர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 14:49, 16 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | name = ஜஜ்ஜர் | native_name = | settlement_type = நகரம் | pushpin_map = India Haryana #India | pushpin_label_position = left | pushpin_map_caption =அரியானா மாநிலத்தில் ஜஜ்ஜர் நகரத்தின் அமைவிடம் | coordin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜஜ்ஜர்

நகரம்
ஜஜ்ஜர் is located in அரியானா
ஜஜ்ஜர்
ஜஜ்ஜர்
அரியானா மாநிலத்தில் ஜஜ்ஜர் நகரத்தின் அமைவிடம்
ஜஜ்ஜர் is located in இந்தியா
ஜஜ்ஜர்
ஜஜ்ஜர்
ஜஜ்ஜர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°36′20″N 76°39′20″E / 28.60556°N 76.65556°E / 28.60556; 76.65556
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்சஜ்ஜர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சஜ்ஜர் நகராட்சி மன்றம்[2]
ஏற்றம்
220 m (720 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்48,424[1]
வாகனப் பதிவுHR-14
இணையதளம்jhajjar.nic.in

சஜ்ஜர் (Jhajjar), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் சஜ்ஜர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். அரியானா மாநிலத் தலைநகரான சண்டிகருக்கு தெற்கே 269 கிலோ மீட்ட்ர் தொலைவிலும்; குருகிராம் நகரத்திற்கு வடமேற்கே (45.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லிக்கு மேற்கே 72.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. ரேவாரி-ரோத்தக் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 352 மற்றும் லோகாரு-மீரட் நகரஙகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 334B சஜ்ஜர் நகரம் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 19 வார்டுகளும், 9,162 h வீடுகளும் கொண்ட சஜ்ஜர் நகரத்தின் மக்கள் தொகை 48,424 ஆகும். அதில் ஆண்கள் 25,678 மற்றும் பெண்கள் 22,746 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.70 % ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5862 (12.11 %) ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 17.18 % மற்றும் 0% ஆக உள்ளனர். இந்நகர மக்களில் இந்து சமயத்தினர் 98.53%, இசுலாமியர் 0.76%, சீக்கியர் 0.25% மற்றும் பிறர் 0.46% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  2. "Jhajjar Municipal Council". 16 June 2024.
  3. Jhajjar Town Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=சஜ்ஜர்&oldid=347040" இலிருந்து மீள்விக்கப்பட்டது