சர்யாபத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 09:35, 11 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சர்யாபத் (Charyapada) பௌத்தத்தின் வச்சிரயான மரபுவழி ஆன்மிகப் பாடல்களின் தொகுப்பாகும். வங்காள, அசாமிய, மைதிலி, ஒடியா மொழிகளின் முன்னோடியாக 8ஆவது, 12ஆவது நூற்றாண்டுகளுக்கிடையே நிலவிய அபகத்த மொழியில் எழுதப்பட்டவையாகும். இம்மொழிகளில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான கவிதைகள் இவையேயாகும். சர்யாபத்தின் ஓலைச்சுவடி மூலம் ஒன்றை 20ஆம் நூற்றாண்டில் நேபாள அரச மன்ற நூலகத்திலிருந்து அரபிரசாத் சாத்திரி கண்டெடுத்தார்.[1] திபெத்திய பௌத்த சமயவிடங்களிலும் சர்யாபத் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.[2]

மேற்சான்றுகள்

  1. Guhathakurta, Meghna; van Schendel, Willem (30 April 2013). The Bangladesh Reader: History, Culture, Politics. Duke University Press. p. 40. ISBN 0-8223-5318-0.
  2. Kværne, Per (2010). An Anthology of Buddhist Tantric Songs: A Study of the Caryāgīti. Orchid Press. ISBN 978-974-8299-34-1.
"https://tamilar.wiki/w/index.php?title=சர்யாபத்&oldid=352309" இலிருந்து மீள்விக்கப்பட்டது